உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்

thirukkural meaning விளக்கம் குறள் 1316 உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள் காமத்துப்பால் கற்பியல் புலவி நுணுக்கம்
குறள் 1316
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்
[காமத்துப்பால், கற்பியல்,  புலவி நுணுக்கம்]

பொருள்
உள்ளினேன் - உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

என்றேன் என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

மறத்தல் - maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).

மறந்தீர் - மறந்தீர்கள்

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்

என்னைப் - என்தந்தை; என்தாய்; என்தலைவன்; என்இறைவன்; யாது; என்ன; ஓர்இகழ்ச்சிக்குறிப்பு.

புல்லாள் - pu-l-lāḷ   n. புல்¹ + ஆள். 1. Seeபுல்லுரு. புல்லாளைச் செய்து கொல்லையிலே வைத்தாற் போலே (இராமநா. கிஷ்கி. 5). 2. Highwayrobber; ஆறலைகள்வன். புலவு வில்லுழவிற் புல்லாள்வழங்கும் (பதிற்றுப். 15, 12).
pul-l-āl   n. id. +. Grass-cutter;வெட்டிக்கொணருங் கூலியாள். Loc.

புல்லுதல் - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல்.

புலத்தல் - pula-   12 v. intr. 1. To pout,sulk; to be displeased; மனம்வேறுபடுதல். புலத்தலு மூடலு மாகியவிடத்து (தொல். பொ. 157). 2.To suffer pain; துன்புறுதல். போகும் புழையுட்புலந்து (ஏலாதி, 11).--tr. To dislike; வெறுத்தல்.பல புலந்து (பொருந. 175).
pula-   12 v. tr. புலம். Tomake known; to instruct; அறிவுறுத்துதல். புலக்கவேண்டுறுமக்காதை (உபதேசகா. சிவத்துரோ. 264).

புலத்தக்கனள் - என்னோடு ஊடுவாள்

முழுப்பொருள்
தலைவி தலைவனை தழுவிக்கொண்டு இருக்கிறாள். இருவரும் ஒருவருக்கொருவர் அன்பை பொழிந்துக்கொண்டும் கொஞ்சிக்கொண்டும் இருக்கிறார்கள். அப்பொழுது தலைவன் கூறுகிறான் "பிரிவில் இருக்கும் பொழுது நான் உன்னை நினைத்தேன் என்று".

நியாயமாக பார்த்தால் தலைவி தலைவன் தன்னை நினைத்தானே என்று சந்தோஷப்பட வேண்டும். ஏனெனில் அவள் பிரிந்து இருக்கும்பொழுது நான் தான் நினைக்கிறேன் தலைவன் என்னை நினைக்கவில்லை என்று பிரிவாற்றாமையையும், அவள் உடல் மெலிதலையும் பற்றி தோழியுடனும் நெஞ்சோடும் புலம்பிக்கொண்டு இருந்தாள் (இதனை மற்ற அதிகாரங்களில் பார்க்கலாம்).

ஆனால் தலைவன் "நான் உன்னை நினைத்தேன்" என்று கூறியப் பின் தலைவி சட்டென்று மாறி "அப்படியானால் நீங்கள் அதற்கு முன் என்னை மறந்தீர்கள் அல்லவா? மறந்தால் தானே நினைப்பீர்கள். எப்பொழுதும் என் நினைவாக இல்லையா நீங்கள்?" என்று தலைவனுடன் ஊடுகிறாள். தலைவன் செஸ் (chess) விளையாட்டில் "செக்-மேட் (check-mate) என்பதுபோல் தலைவியிடம் வசமாக மாட்டிக்கொண்டான்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) உள்ளினேன் என்றேன் - பிரிந்த காலத்து நின்னையிடையின்றி நினைந்தேன் என்னும் கருத்தால், யான் உள்ளினேன் என்றேன்; மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள் - என, அதனை ஒருகால் மறந்து பின் நினைந்தேன் என்றதாகக் கருதி, என்னை யிடையே மறந்தீர் என்று சொல்லி, முன் புல்லுதற்கு அமைந்தவள் அஃதொழிந்து புலத்தற்கு அமைந்தாள். (மற்று - வினை மாற்றின்கண் வந்தது. அருத்தாபத்திவகையான் மறத்தலையுட்கொண்டு புலந்தாள் என்பதாம்.).

மணக்குடவர் உரை
அவ்விடத்து எம்மை நினைத்தோமென்றீர்: மறந்தாரன்றே நினைப்பார். ஆதலான் எங்களை மறந்தீரென்று சொல்லி எம்மை முயங்காளாய்ப் புலவிக்குத் தகுதியாளாயினாள். இது நினைத்தோமெனினும் குற்றமென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.

சாலமன் பாப்பையா உரை
எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில சமயம் மறந்து ஒரு சமயம் நினைத்ததாக எண்ணி அப்படியானால் என்னை இடையில் மறந்திருக்கிறீர் என்று சொல்லித் தழுவத் தொடங்கியவள், விட்டுவிட்டு ஊடத் தொடங்கினாள்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain