கனவினான் உண்டாகும் காமம் நனவினான்

thirukkural meaning விளக்கம் குறள் 1214 கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்
குறள் 1214
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு
[காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்]

பொருள்
கனவினான் - கனவு - கனா; உறக்கம்; மயக்கம்

உண்டாகும் - உண்டாகுதல்  - uṇṭāku   v. i. (for conjugation see ஆ, --ஆகு), be, begin to exist, come into existence, be made, grow, become.
உண்டாக்குதல் - படைத்தல்; தோன்றச்செய்தல்; விளைவித்தல் வளர்த்தல்

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

நனவினான் - நனவு - மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; போர்க்களம்; தேற்றம்; அகலம்

நல்குதல் - கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல்..

நல்காரை - நல்கார் -விரும்பாதவர் 

நாடித் - நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.

தரற்கு - நாடுபவர்க்கு 

முழுப்பொருள் 
நான் விழித்திருக்கும் பொழுது என்னிடம் வந்து சேராத, என்னை விட்டு பிரிந்து இருக்கும் காதலர் என்னை விரும்பாதவர் (ஏனெனில் என்னை விட்டு பிரிந்து இருக்கிறார்).  கனவுகளே எனக்கு என் காதலரை கொண்டுவந்து தருகிறது. கனவில் என் காதலரால் எனக்கு இன்பம் கிடைக்கிறது. ஆதலால் இக்கனவுகளே எனக்கு காமத்தின் இன்பத்தை தர காரணமாக இருக்கிறது என்று கனவை புகழ்கிறாள் தலைவி. கனவுகளே எங்கள் காமம் நிலைபெற பாலமாக இருக்கிறது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கனவினாற் கண்டேன் தோழி காண்டகக்
கனவின் வந்த கானலஞ் சேர்ப்பன்
நனவின் வருதலும் உண்டென
அனைவரை நின்றதென் அரும்பெறல் உயிரே” (கலி. 128:23.6)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நனவினான் நல்காரை நாடித்தரற்கு - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை அவர் சென்றுழி நாடிக் கொண்டு வந்து கனவு தருதலான்; கனவினான் காமம் உண்டாகும் - இக் கனவின்கண்ணே எனக்கு இன்பம் உண்டாகா நின்றது. (காமம் - ஆகுபெயர். நான்காவது மூன்றன் பொருண்மைக்கண் வந்தது. 'இயல்பான் நல்காதவரை அவர் சென்ற தேயம் அறிந்து சென்று கொண்டு வந்து தந்து நல்குவித்த கனவால் யான் ஆற்றுவல்' என்பதாம்.).

மணக்குடவர் உரை
நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால், அக்கனவின் கண்ணே எனக்கு இன்பம் உண்டாகும். இது கண்டாற் பயனென்னை? காம நுாகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.

சாலமன் பாப்பையா உரை
நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain