குறள் 1155
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு
ஆல் - அகற்சட்டி; மரவகை; நீர் வெள்ளம் கார்த்திகை நஞ்சு ஆமெனல்; வியப்பு இரக்கம் தேற்றம்இவற்றைக்குறிக்கும்இடைச்சொல்; ஓர்அசைநிலை; மூன்றாம்வேற்றுமையுருபு; தொழிற்பெயர்விகுதி; எதிர்மறைவியங்கோள்விகுதி; எதிர்காலவினையெச்சவிகுதி.
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் - என்னுயிரைச் செல்லாமல் காத்தியாயின், அதனை ஆளுதற்கு அமைந்தாருடைய செலவினை அழுங்குவிப்பாயாக; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது - அழுங்குவிப்பாரின்றி அவர் செல்வராயின், அவரால் ஆளப்பட்ட உயிரும் செல்லும்; சென்றால் பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம். (ஆளுதற்கு அமைதல்: இறைவராதற்குத் தெய்வத்தால் ஏற்புடையராதல். மற்று: வினைமாற்றின்கண் வந்தது.)
மணக்குடவர் உரை
காக்கலாமாயின் அமைந்தார் தம்முடைய பிரிவைக் காக்க; அவர் பிரிவராயின் பின்பு கூடுதல் அரிது. மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு யாது சொல்வேனென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
மு.வரதராசனார் உரை
காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.
சாலமன் பாப்பையா உரை
என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது.
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு
[காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை]
பொருள்
ஓம்பின் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.
அமைந்தார் - அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்
பிரிவு - பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின்வேறுபட்டஉட்பேதம்; இறப்பு.
ஓம்பல் - ஓம்பு - பாதுகாத்தல், பேணுதல், காத்தல்,
மற்று - ஓர்அசைநிலை;மற்றவை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.
அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.
அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.
நீங்கின் - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்
அரிது - அரியது, அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை
புணர்வு - puṇarvu n. id. 1. Combination; சேர்க்கை. 2. Coition; கலவி. புணர்வின்னினிய புலவிப்பொழுதும் (சீவக. 1378). 3. Connection, joining; இசைப்பு. (சூடா.) 4. Body;உடல். (பிங்.)
முழுப்பொருள்
தலைவி கூறுகிறாள், என் உயிரை பாதுக்காக்க இருக்கும் என் தலைவன் என்னை பிரியாது என்னையும் என் காதலையும் பேணவேண்டும். அவ்வாறு இல்லாமல் என்னை பிரிந்தால் என்னுடன் தலைவன் மீண்டும் சேர்வதோ கூடுவதோ கடினமாகிவிடும் (அரிது). ஏனெனில் பிரிவு தரும் துன்பத்தால் என் உயிர் என்னை விட்டு நீங்கிவிடும் என்கிறாள் தலைவி.
அமைதல் என்றால் உடன்படுதல் என்றும் பொருள். ஆதலால் காதலில் வயப்படும் தலைவன் தலைவியை பாதுக்காக்க உடன்படுகிறான் என்று பொருள் கொள்ளவேண்டும்.
அமைதல் என்றால் உடன்படுதல் என்றும் பொருள். ஆதலால் காதலில் வயப்படும் தலைவன் தலைவியை பாதுக்காக்க உடன்படுகிறான் என்று பொருள் கொள்ளவேண்டும்.
மேலும் அஷோக் உரை
(இதுவும் அது.) ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் - என்னுயிரைச் செல்லாமல் காத்தியாயின், அதனை ஆளுதற்கு அமைந்தாருடைய செலவினை அழுங்குவிப்பாயாக; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது - அழுங்குவிப்பாரின்றி அவர் செல்வராயின், அவரால் ஆளப்பட்ட உயிரும் செல்லும்; சென்றால் பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம். (ஆளுதற்கு அமைதல்: இறைவராதற்குத் தெய்வத்தால் ஏற்புடையராதல். மற்று: வினைமாற்றின்கண் வந்தது.)
மணக்குடவர் உரை
காக்கலாமாயின் அமைந்தார் தம்முடைய பிரிவைக் காக்க; அவர் பிரிவராயின் பின்பு கூடுதல் அரிது. மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு யாது சொல்வேனென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
மு.வரதராசனார் உரை
காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.
சாலமன் பாப்பையா உரை
என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது.
No comments:
Post a Comment