தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், குடியியல், மானம் குறள் 964 தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை
குறள் 964
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை
[பொருட்பால், குடியியல், மானம்]

பொருள்
தலையின் - தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு

இழிந்த - இழிதல் - இறங்குதல்; விழுதல் இழிவுபடுதல்; தாழ்தல் வெளிப்படுதல்

மயிர் - உரோமம்; சாமரை; தூவி.

அனை - அன்னை; அந்த; ஒருவகைமீன்; aṉai   demonst. pron. அ That;அந்த. அனைநால்வகையும் (தொல். பொ 245).

அனையர் - அதற்கு நிகரானவர்

மாந்தர் - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர்.

நிலையின் - நிலை - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல்.

இழிந்தக்இழிதல் - இறங்குதல்; விழுதல் இழிவுபடுதல்; தாழ்தல் வெளிப்படுதல்

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.
கடை - (வி)குடை; சிலுப்பு; தயிர்கடை; பருப்புமுதலியனகடை; மரம்முதலியனகடை; தீக்கடை.

முழுப்பொருள்
தலையில் மயிர் உள்ளவரை அதனை எல்லோரும் பேணிப் பாதுகாக்கிறார்கள். தலைமயிரிற்கு தினமும் (தேங்காய்) எண்ணெய்த்தேய்த்து வாரத்திற்கு ஓரிருமுறை சீகைக்காய்ப் (/சீயக்காய்ப்) பூசி தலை வாரி அதனை பேணுகிறார்கள். ஆனால் அதே தலைமயிர் கீழே விழுந்தால் அதனை எடுத்து யாரும் போற்றுவதில்லை. அசுத்தமாகவே கருதப்படும். மேலும் மயிர் வயிற்றுக்குள் சென்றால் வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் உருவாகும் என்று அதனை குப்பையிலே போடுவார். விழுந்த மயிரை ஒட்டவைக்க முடியாது.

அதுமட்டும் இன்றி இது ராஜாவின் தலையில் இருந்த மயிர் மந்திரியின் தலையில் இருந்த மயிர் என்று எல்லாம் பேதம் பார்க்காமல் மயிர் என்று கருதி அதனை ஒதுக்கிவிடுவார்/ஒதுக்கிவிடவேண்டும். ஏனெனில் எல்லா மயிரும் அசுத்தம் மட்டுமின்றி தீங்கு விளைவிக்கும்.

மயிருக்கு தலையில் இருக்கும் பொழுது இருந்த மரியாதை தலையில் இருந்து விழுந்த பின்பு (மயிருக்கு) கிடைப்பதில்லை. தலையில் இருந்து விழுந்த மயிர் அசுத்தம். அசுத்தமாகவே கருதப்படும். அதுபோல் நல்லநிலையில் நல்ல பண்பாளராக கருதப்படுவோர் தனது நிலையில் இருந்து இறங்கி இழிவு நிலையை அடைவாரென்றால் (அதாவது கீழ்மையானவற்றைச் செய்து இகழ்ச்சியை அடைவது) அவருடைய மதிப்பும் மயிர்க்கு நடந்ததை போன்று வீழ்ச்சி அடையும். ராஜா தவறு செய்தால் பரவாயில்லை என்றபேதமெல்லாமில்லை. தவறு செய்தபின்பு மதிப்பு வழங்க மாட்டார்கள் கீழ்மையாகவே எண்ணுவர் விலகியே இருப்பார்கள். வீழ்ந்த மயிரை ஒட்டவைக்கமுடியாது அதுப்போல் சென்ற மானம் திரும்ப வராது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“நிலையில் பிரியேல்” (ஆத்திசூடி)

பரிமேலழகர் உரை
மாந்தர் - குடிப்பிறந்த மாந்தர்; நிலையின் இழிந்தக்கடை - தம் உயர்ந்த நிலையைவிட்டு அதனின்றும் தாழ்ந்த வழி; தலையின் இழிந்த மயிர் அனையர் - தலையை விட்டு அதனினின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர், {அந்நிலையை விடாது நின்ற வழிப் பேணப்படுதலும,¢ விட்டுத் தாழ்ந்த வழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம்.).

மணக்குடவர் உரை
தலையினின்று இறங்கிய மயிரைப்போல இகழப்படுவர்: மாந்தர் தமது நிலையினின்று நீங்கித் தாழ ஒழுகின விடத்து.

மு.வரதராசனார் உரை
மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain