குறள் 955
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று
பொருள்
வழங்குவது - வழங்குதல் - இயங்குதல்; உலாவுதல்; நடைபெறுதல்; அசைந்தாடுதல்; கூத்தாடுதல்; நிலைபெறுதல்; பயிற்சிபெறுதல்; கொண்டாடப்படுதல்; தகுதியுடையதாதல்; பயன்படுத்தல்; கொடுத்தல்; செய்துபார்த்தல்; சொல்லுதல்; நடமாடுதல்
உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.
வீழ் - மரவிழுது; தாலிநாண்;
வீழ்ந்தக் - வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.
கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
பழங்குடி - பழமையானகுடி; வழிவழியாகநிலைபெற்றுவரும்குடி
பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.
பண்பின் - தம்முடைய பண்பின் காரணமாக
தலைப் - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.
பிரிதல் - விட்டுவிலகுதல்; கட்டவிழ்தல்; பகுக்கப்படுதல்; வேறுபடுதல்; முறுக்கவிழ்தல்; வகைப்படுதல்; வசூலித்தல்; நினைத்தல்.
இன்று - இல்லை; இந்தநாள்; ஓரசைச்சொல்.
முழுப்பொருள்
வழிவழியாக நிலைபெற்றுவரும் பழமையான நற்குடியில் பிறந்தவர்களுக்கு தங்களுடைய செல்வங்களை கொடையாக கொடுத்து கொடுத்து பெருமளவு குறைந்தாலும் அல்லது சந்தர்ப்பவசத்தால் குறைந்தாலும் அவர்களை நற்பண்பாளர்களாக்கிய கொடைகுணம் அவர்களைவிட்டு என்றும் பிரியாது.
எல்லாப்பழக்கங்களும் நம்மைவிட்டு விலக பல சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் அமையும். ஆனால் கொடைகுணம் என்பது மிகவும் ஆத்மார்த்தமான மனநிறைவை நமக்குஅளிப்பதனால் கொடுக்கும் சுவை நம்மில் தங்கிவிடுகிறது / நிலைபெற்றுவிடுகிறது. அதனால் நம்மில் இருந்து பிரியாது.
இக்குறளின் கருத்தை ஒட்டிய பல நாலடியார் பாடல்களும், பழமொழிப் பாடல்களும் உள்ளன. அவற்றுள் சில
“உடுக்கை உலறி உடம்பழிந்த கண்ணும்
“எவ்வம் உழந்தக் கடைத்தும் குடிபிறந்தவர்
“செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
”ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன” (நாலடி 358)
“ஒற்கந்தாம் உற்ற விடத்தும் உயர்ந்தவர்
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று
[பொருட்பால், குடியியல், குடிமை]

குடிப்பிறப் பாளர்தம் கொள்கையில் குன்றார்” (நாலடி 141)
“எவ்வம் உழந்தக் கடைத்தும் குடிபிறந்தவர்
செய்வர் செயற்பாலவை” (நாலடி 147)
“செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
ஒல்கார் குடிப்பிறந் தார்” (நாலடி 148)
“செல்லா இடத்தும் குடிப்பிறந்தார் செய்வன” (நாலடி 149)
“எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் தூற்றவர்” (நாலடி 150)
“கொடைக் கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார்
ஆஅயக் கண்ணும் அரிது” (நாலடி 184)
“செல்வம் பலர்க்காற்றிக் கெட்டுவந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற்பா லவை” (நாலடி 185)
”ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன” (நாலடி 358)
“பீடில்லாக் கண்ணும் பெரியார் பெருந்தகையார்” (பழமொழி 96)
“ஒற்கந்தாம் உற்ற விடத்தும் உயர்ந்தவர்
நிற்பவே நின்ற நிலையின் மேல்” (பழமொழி 119)
“மறம்தி றம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ” (கம்ப.மந்தரை.66)
ஔவையாரின் மூதுரைப் பாடலும் இக்குறளின் கருத்தையொட்டி இருப்பதைக் காணலாம்.
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
இப்பாடலின் இரண்டாவது வரியைத் தவிர மற்ற வரிகளெல்லாம், இக்குறளின் கருத்தோடு பொருந்தி இயைவதைப் பார்க்கலாம்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
பழங்குடி - தொன்று தொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார்; வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் - தாம் கொடுக்கும் பொருள் பண்டையில் சுருங்கியவிடத்தும்; பண்பின் தலைப் பிரிதல் இன்று - தம் பண்புடைமையின் நீங்கார். (தொன்று தொட்டு வருதல்; 'சேர, சோழ, பாண்டியர்' என்றாற்போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருதல்; அவர்க்கு நல்குரவாவது, வழங்குவது உள் வீழ்வது ஆகலின், அதனையே கூறினார்.).
மணக்குடவர் உரை
வழங்கும் பொருள் தம்மளவிற்குக் குன்றிச் சுருங்கியவிடத்தும், பழைய பண்பு வழுவாத குடிப்பிறந்தார் தமது இயல்பினின்றும் நீங்குத லிலர். இது பண்புடைமை விடாரென்றது

மு.வரதராசனார் உரை
தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வன்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம் பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.
சாலமன் பாப்பையா உரை
தொடர்ந்து வரும் நல்ல குடியில் பிறந்தவர் தம் பொருள் கொடுத்துக் குறைந்துவிட்டபோதும், கொடுக்கும் பண்பிலிருந்து விலகமாட்டார்.

No comments:
Post a Comment