குறள் 944
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து
[பொருட்பால், நட்பியல், மருந்து]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
அற்றது - அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்
அற்றது - செரித்த பின் / சீரணமானப் பின்
அறிந்து - அளவு அறிந்து
அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.
கடைப்பிடித்து - கடைப்பிடித்தல் - உறுதியாகப்பற்றுதல்; தெளிவாய்அறிதல்; விடாதொழுகுதல்; மறவாதிருத்தல்; சேர்த்துவைத்தல்
மாறு - (வி)குணி; ஒன்றைமற்றொன்றாக்கு; வேறாக்கு; மாற்று.
மாறு - வேறுபாடு; பகை; ஒவ்வாதது; ஒப்பு; இறந்துபாடு; பிறவி; பதிலுதவி; பதில்; துடைப்பம்; மிலாறு; பருத்திமுதலியவற்றின்தூறு; எதிர்; பதிலியாகக்கொள்ளுவது; பிரம்பு; விதம்; காரணப்பொருளுணர்த்தும்ஓர்இடைச்சொல்.
அல்ல - இல்லை
துய்க்க - துய்த்தல் - புலன்களால்நுகர்தல்; உண்ணுதல்; நூல்நூற்றல்; நாடகச்சந்திஐந்தனுள்இறுதியானது.
துவரப் - மிக; முழுதும்
பசித்து - பசித்தல் - பசியெடுத்தல் - பசியுண்டாதல்
பசி - உணவுவேட்கை; வறுமை; தீ.
முழுப்பொருள்
உடம்பை பேண நம் உணவு பழக்கவழக்கத்தில் நாம் கடைப்பிடிக்கவேண்டிய நெறிகள் என்னென்ன ?
1. முந்தைய வேளை உண்ட உணவு முழுவதுமாக செரிமானம் ஆகிவிட்டதா என்பதை அறிந்து உண்ண வேண்டும்
2. நாம் உண்ணும் பொழுது நமது வயிற்றின் அளவிற்கும் பசியின் அளவிற்கும் நம் உடலுழைப்பின் அளவிற்கும் ஏற்றளவு உண்ணவேண்டும். அதேப்போல உணவின் தன்மை சூழலின் தன்மை (உதாரணமாக: தட்பவெட்பம். கோடைக்காலத்தில் உடம்புக்கு குளிர்ச்சித்தரும் உணவுகளை) அறிந்து உண்ணவேண்டும்
3. நல்ல உணவுகளையும் நல்ல உணவுப்பழக்கங்களையும் வாரத்தில் ஓரிருநாள் என்று அல்லாது எல்லா நாட்களும் எல்லா வேலையும் விடாதொஒழுக/கடைப்பிடிக்க வேண்டும். கண்டிப்பாக பண்டிகை நாட்கள் மற்றும் சில நாட்கள் சில வேலைகள் அதிக சாப்பிட நேரும். அப்படி அதிகம் சாப்பிட்டால் அதனை அடுத்தவேளை குறைத்துசாப்பிட்டு சரிக்கட்டவேண்டும்.
4. உண்ணும் நேரம், அளவு, கால இடைவெளி இவற்றை (பெரும்பாலும்) மாறாமல் வேறுபாடு இல்லாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
5. வயிற்றுக்கு தேவையெனில் அதனை அறிவிக்கும் ஆற்றல் வயிறை விட வேறெதெற்கும் இல்லை. பசியை போன்ற ஒரு சமிஞை வேறு இல்லை. உணவை பார்க்கும் தோறும் நினைக்கும் தோறும் உண்ண கூடாது. ஆரோக்கியமான வாழ்விற்கு நன்கு பசித்த பின்பு (அதவாது பசிக்க துவங்கிய உடனே என்றில்லாமல் நன்கு பசித்தபின்பு) மட்டுமே உண்ண வேண்டும்.
மேற்சொன்னவற்றை உணவை உண்பதற்கான நெறிகள் என கொண்டு கடைப்பிடிக்கவேண்டும்.
“பசித்துப் புசி” என்றொரு சொலவடை உண்டு. அதனை வலியுறுத்துவதே இக்குறள்
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
அற்றது அறிந்து - முன்னுண்டது அற்றபடியை யறிந்து; துவரப் பசித்து - பின் மிகப்பசித்து; மாறல்ல கடைப் பிடித்துத் துய்க்க - உண்ணுங்கால் மாறுகொள்ளாத உணவுகளைக் குறிக்கொண்டு உண்க. (அற்றது அறிந்து என்னும் பெயர்த்துரை அதனை யாப்புறுத்தற் பொருட்டு. உண்டது அற்றாலும் அதன் பயனாகிய இரதம் அறாதாகலான், அதுவும் அறல் வேண்டும் என்பார், 'மிகப்பசித்து' என்றார். பசித்தல் வினை ஈண்டு உடையான்மேல் நின்றது. மாறு கொள்ளாமையாவது உண்பான் பகுதியோடு மாறுகொள்ளாமையும், கால இயல்போடு மாறுகொள்ளாமையும், சுவை வீரியங்களால் தம்முள் மாறுகொள்ளாமையும் ஆம். அவையாவன, முறையே வாதபித்த ஐயங்களானாய பகுதிகட்கு அடாதவற்றைச் செய்வனவாதலும், பெரும்பொழுது சிறுபொழுது என்னும் காலவேறுபாடுகளுள் ஒன்றற்காவன பிறிதொன்றற்கு ஆகாமையும்,தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வனவும் ஆம். அவற்றைக் குறிக்கொள்ளாது மனம் பட்டவாற்றால் துய்ப்பின், அதனானே நோயும் மரணமும் வருதலின், 'கடைப்பிடித்து' என்றார்.).
மணக்குடவர் உரை
முன்பு உண்டவுணவு அற்றதனை அறிந்து பின்பு அறுமளவும் கடைப்பிடித்து உண்ணுங்கால் ஒன்றினோடொன்று மாறுகொள்ளாத உணவினை மிகவும் பசித்து உண்க. மாறுகோடலாவது நெய்யும் தேனும் இனியவாயினும் தம்மிலளவொக்குமாயின் கொல்லும்; அதுபோல்வதாம். இஃது உண்ணுங்கால் அளவறிந்துண்ணலேயன்றி மாறல்லவும் உண்ணவேண்டு மென்றது.
மு.வரதராசனார் உரை
முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.

உணவை எப்படி உண்ண வேண்டும் என்பதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு - சொல்வளர்காடு-30-இல் ஒரு பகுதி இப்படி விவரிக்கிறது.
ஆனால் மறுநாள் காத்யாயனி “தந்தையே, எனக்கு யாக்ஞவல்கியர் முனிவரையே மணமகனாகப் பாருங்கள்” என்றாள். காத்யாயனர் வியந்து நோக்க “வேதத்தால் தூய்மை செய்யப்பட்டவர்களுக்கு பிறிதொரு தூய்மை தேவையில்லை என்று நேற்று உணர்ந்தேன்” என்றாள். “அவர் தன் தேவைக்குமேல் ஒரு பருக்கையும் உண்ணவில்லை. இலையில் ஒரு பருக்கையும் எஞ்சவைக்கவில்லை. ஒவ்வொரு கவளம் சோறும் பிறிதொன்று போலவே இருந்தன. ஒவ்வொரு கையசைவும் வாயசைவும் ஒருமைகொண்டிருந்தன. ஒவ்வொரு துளி உணவிலும் முற்றிலும் சுவையுணரப்பட்டது. உண்பது வேள்வி என நிகழ்வதைக் கண்டேன். வேள்வியாற்றுதல் என்பதன் உச்சம் செய்வதனைத்தும் வேள்வியாதலே” என்றாள்.
“ஆம், அவர் உணவில் சுவைகொண்டவர். ஊனுணவை விரும்பி உண்பவர் என்று சொல்லப்படுகிறது” என்றார் காத்யாயனர். காத்யாயனி புன்னகைத்து “நான் அவருக்கு வைத்த ஒரு கூட்டில் உப்பும் புளிப்பும் சேர்க்கவில்லை. வேப்பெண்ணையையே கலந்திருந்தேன். பிறிதொன்று இனியது. அவர் முகத்தில் இரண்டுக்கும் வேறுபாடே தெரியவில்லை. இரண்டிலும் சுவையறிந்தவர் பிரம்மத்தையே உண்கிறார்” என்றாள்.
பரிமேலழகர் உரை
அற்றது அறிந்து - முன்னுண்டது அற்றபடியை யறிந்து; துவரப் பசித்து - பின் மிகப்பசித்து; மாறல்ல கடைப் பிடித்துத் துய்க்க - உண்ணுங்கால் மாறுகொள்ளாத உணவுகளைக் குறிக்கொண்டு உண்க. (அற்றது அறிந்து என்னும் பெயர்த்துரை அதனை யாப்புறுத்தற் பொருட்டு. உண்டது அற்றாலும் அதன் பயனாகிய இரதம் அறாதாகலான், அதுவும் அறல் வேண்டும் என்பார், 'மிகப்பசித்து' என்றார். பசித்தல் வினை ஈண்டு உடையான்மேல் நின்றது. மாறு கொள்ளாமையாவது உண்பான் பகுதியோடு மாறுகொள்ளாமையும், கால இயல்போடு மாறுகொள்ளாமையும், சுவை வீரியங்களால் தம்முள் மாறுகொள்ளாமையும் ஆம். அவையாவன, முறையே வாதபித்த ஐயங்களானாய பகுதிகட்கு அடாதவற்றைச் செய்வனவாதலும், பெரும்பொழுது சிறுபொழுது என்னும் காலவேறுபாடுகளுள் ஒன்றற்காவன பிறிதொன்றற்கு ஆகாமையும்,தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வனவும் ஆம். அவற்றைக் குறிக்கொள்ளாது மனம் பட்டவாற்றால் துய்ப்பின், அதனானே நோயும் மரணமும் வருதலின், 'கடைப்பிடித்து' என்றார்.).
மணக்குடவர் உரை
முன்பு உண்டவுணவு அற்றதனை அறிந்து பின்பு அறுமளவும் கடைப்பிடித்து உண்ணுங்கால் ஒன்றினோடொன்று மாறுகொள்ளாத உணவினை மிகவும் பசித்து உண்க. மாறுகோடலாவது நெய்யும் தேனும் இனியவாயினும் தம்மிலளவொக்குமாயின் கொல்லும்; அதுபோல்வதாம். இஃது உண்ணுங்கால் அளவறிந்துண்ணலேயன்றி மாறல்லவும் உண்ணவேண்டு மென்றது.
மு.வரதராசனார் உரை
முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.
English Meaning - As I taught a kid - Rajesh
The principles we should follow while eating are:
1. Assess whether the food intake during previous meal/snack has digested completely and there is hunger
2. Consume food according to the appetite, amount of physical work we do, nature of the food, climatic/seasonal conditions in which you live
3. Regularly/daily consume healthy balanced diet that has appropriate amount of nutrients, vitamins, minerals, carbs, fat, protein, electrolyte salts etc. Sometimes, in a party or festival, we might end up more. In those cases, compensate overeating by fasting the next meal
4. Maintain or be consistent in eating time, food quantity, time interval between meals/snacks.
5. Body knows when it needs energy/food. Body indicates by hunger. Hence, eat only when you have hunger. Don't eat whenever your think or whenever you see food.
Questions that I ask to the kid
What are the principles we should follow while eating?
No comments:
Post a Comment