குறள் 813
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]
பொருள்
உறுவது - Thatwhich happens; சம்பவிப்பது. , வரற்பாலது; 2. That whichaccrues; gain; இலாபம் உறுவதும் . . . பேதைகளோர்கிலரே (திருநூற். 13). 3. That which resembles; ஒப்பது. இமையவர்களுலக முறுவதுவே(சீவக. 1780). 4. That which is proper; தகுவது.உறுவதாவது . . . குடக்கூத்தனுக் காட்செய்வதே (திவ்.திருவாய். 4, 10, 10).
சீர்தூக்கும் - ஆராய்தல்; ஒப்புநோக்குதல்; வரையறுத்தல்
நட்பும் - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.
பெறுவது - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
கொள்(ளு)-தல் - koḷ- 2 v. [T. konu, K.M. koḷ.] tr. 1. To seize, grasp; கையால் எடுத்துக்கொள்ளுதல் கொண்ட வாளொடும் (சீவக. 430). 2.To receive, as a gift; பெறுதல் நல்லா றெனினுங்கொளறீது (குறள், 222). 3. To buy, purchase;விலைக்கு வாங்குதல் கோதையினுங்கொள்வார் (நைடத.நகரப். 18). 4. To acquire, take possession of, occupy; உரிமையாகக் கொள்ளுதல் விடலையைக் காணவோடி . . . வீதிகொண்டார் (சீவக. 457). 5. Tomarry; விவாகம் செய்தல் தாங்கொண்ட மனையாளை(நாலடி, 3). 6. To abduct, carry off; கவர்தல் மனையாளை மாற்றார்கொள (நாலடி, 3). 7. To contain,hold; தன்னட்கொள்ளுதல். சிதரரிக் கண்கொண்டநீர் (நாலடி, 394). 8. To draw in, gather up; முகத்தல் குணகடல் கொண்டு குடகடன் முற்றி (மதுரைக்.238). 9. To learn; கற்றுக்கொள்ளுதல் கொள்ளுநர்கொள்ள (கல்லா. 11, 21). 10. To consider, think;கருதுதல். யார்க்குங் கொடுத்தியெனக் கொள்கின்றிலம்(இலக். வி 650, உரை). 11. To regard, esteem;நன்குமதித்தல். கொளப்பட்டே மென்றெண்ணி(குறள், 699). 12. To celebrate; கொண்டாடுதல் தண்பதங் கொள்ளுந்
கொள்வாரும் - விலைக்கு உறவு வைத்துக்கொள்ளும் பாலியல் தொழிலாளர்கள்
கள் - kaḷ n. கள்-. [K. kaḷ.] Stealing, theft,robbery; களவு (சூடா.); மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை.
கள்வரும் - கள்வர் - பாசாங்குசெய்வோர்; களவு தொழில் செய்வோர்
நேர் - உடன்பாடு; உவமை; செவ்வை; நீதி; நல்லொழுக்கம்; திருந்தியதன்மை; மாறுபாடு; நீளம்; வரிசை; பாதி; நுணுக்கம்; கொடை; கதி; காண்க:நேர்விடை; தனிமை; மிகுதி; ஊர்த்துவநிலை; நிலைப்பாடு; காண்க:நேரசை; வலிமை; முன்; பிராகாரம்.
முழுப்பொருள்
ஒருவரிடம் என்ன பயன் பெறலாம் என்ன இலாபம் அடையலாம் என்று ஆராய்ந்து அணுகி உறவும் நட்பும் கொள்வாரிடம் உறவு கொள்வது என்பது எதற்கு ஒப்பு தெரியுமா? நம்மிடம் என்ன பொருளும்/பணமும் கிடைக்கும் என்று ஆராய்ந்து உடலுறவு வைத்துக்கொள்ளும் பாலியல் தொழில் செய்வோரிடமும் பிறர் பொருள்களை வஞ்சித்து களவு செய்யும் கள்வரிடமும் உறவு வைத்துக்கொள்வதற்கு சமமாகும்.
தீய நட்பைக் கூறும் அறநெறிச்சாரப் பாடல், வாயளவில் பணிவுடையராகச் சொல்லி, உள்ள செல்வத்தைக் கவர்ந்து பின் நீங்குபவர்களை திருடர், தீய நட்பென்றும் கூறுகிறது. சோர்வுற்ற வழியும் எடுத்த வினையை முடிக்குமாறு செய்கின்றவர்கள், தாயை நிகர்வர் பெரியோர்களுக்கு. கேட்போர் மனமுருகுமாறு, வாயளவில் பணிவுடையராகச் சொல்லி, உள்ள செல்வத்தைக் கவர்ந்து பின் நீங்குகின்றவர்கள், திருடரை நிகர்வர், என்பது இப்பாடலின் கருத்து. இப்பாடல்.
காய உரைத்துக் கருமஞ் சிதையாதார்
தாயரோ டொவ்வாரோ தக்கார்க்கு-வாய்பணிந்து
உள்ள முருக உரைத்துப் பொருள்கொள்வார்
கள்ளரோ டொவ்வாரோ தாம். (அறநெறி 47)
”பெறுவது கொள்பவர்” (நாலடி 371)

மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
உறுவது சீர் தூக்கும் நட்பும் - நட்பு அளவு பாராது அதனால் வரும் பயனளவு பார்க்கும் நட்டாரும்; பெறுவது கொள்வாரும் - கொடுப்பாரைக் கொள்ளாது விலையைக் கொள்ளும் பொதுமகளிரும்; கள்வரும் - பிறர்கேடு நோக்காது அவர் சோர்வு நோக்கும் கள்வரும்; நேர் - தம்முள் ஒப்பர். (நட்பு - ஆகுபெயர். பொருளையே குறித்து வஞ்சித்து ஒழுகலின் கணிகையர் கள்வர் என்றிவரோடு ஒப்பர் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தமககு உறுவது பார்ப்பார் நட்பின் தீமை கூறப்பட்டது.) .
மணக்குடவர் உரை
நட்டோர்க்கும் தமக்கும் வரும் நன்மை தீமைகளை யொக்கப் பார்த்துத் தமக்கு நன்மையாகுமதனைச் சீர்தூக்கும் நட்டோரும், பெற்றது கொள்ளும் கணிகையரும், கள்வருமென்று கூறப்பட்டவர் தம்முள் ஒப்பார்.
மு.வரதராசனார் உரை
கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.
சாலமன் பாப்பையா உரை
இவரிடம் நட்புக் கொள்வதால் தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்ப்பவரின் நட்பும், தமக்குத் தரும் கூலியை ஏற்றுக் கொள்ளும் பாலியல் தொழிலாளரும் திருடர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே.

No comments:
Post a Comment