விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்

thirukkural meaning விளக்கம் குறள் 775 விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு
குறள் 775
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]

பொருள்
விழித்த - விழித்தல் - கண்திறத்தல்; தூக்கம்தெளிதல்; எச்சரிக்கையாயிருத்தல்; கவனித்துநோக்குதல்; மருண்டுநோக்குதல்; ஒளிர்தல்; தெளிவாதல்; உயிர்வாழ்தல்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

வேல் - நுனிக்கூர்மையுடையஆயுதவகை; திரிசூலம்; ஆயுதப்பொது; ஆயுதவகை; முருகன்வேல்; வெல்லுகை; பகை; மரவகை; வெள்வேல்; உடை; மூங்கில்.

கொண்டு - கொள், முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை

எறிய - எறி - குத்து; தள்ளு; அறை; அடி; வெட்டு; வீச்சு; உதை; அடிக்கை; குறிப்பாகச்சொல்லுகை

எறிதல் - உதைத்தல்; வீசுதல்; வெட்டுதல்; முறித்தல்; அறுத்தல்; பறித்தல்; அழித்தல்; ஓட்டுதல்; குத்தல்; அடித்தல்.

அழித்து -  அழிதல் -  aḻi-   4 v. intr. [K. M. aḻi.]1. To perish, to be ruined; நாசமாதல். 2.To decay, to be mutilated; சிதைவுறுதல்.ஆரவண்டலழியும் (நைடத. கைக்கி. 10). 3. To fail,to be frustrated; தவறுதல் நீயுரைத்த தொன்றுமழிந்திலது (கம்பரா. பிராட்டி 30). 4. To becomeunsettled, to lose standing; நிலைகெடுதல் அழிந்தகுடி. 5. To be defeated; தோற்றல் வாதி லழிந்தெழுந்த (தேவா. 859, 3). 6. To melt with love மனம் உருகுதல் 7. To suffer, to be troubled;வருந்துதல். சூணயத் திறத்தாற் சோர்வுகண் டழியினும்(தொல். பொ 150). 8. To be disheartened; மனம்உடைதல். இதற்கு உள்ளழியேல் (கம்பரா. நகர்நீங்கு.18) 9. To swell, increase; பெருகுதல் அழியும்புன லஞ்சன மாநதியே (சீவக. 1193). 10. Tosympathise with; பரிவுகூர்தல். புணர்ந்த நெஞ்சமொ டழிந்தெதிர் கூறி விடுப்பினும் (தொல். பொ 40).11. To be spent, used up, sold out, exhausted;செலவாதல். என்னிடமிருந்த சரக்கெல்லாம் அழிந்துவிட்டது. 

அழித்தல் - செலவழித்தல்; கெடுத்தல் கலைத்தல் குலைத்தல் உள்ளதைமாற்றுதல்; மறப்பித்தல்; தடவுதல் நீக்குதல் நிந்தித்தல் விடைகாணுதல்

இமைப்பின் இமைப்பு - இமைத்தல் - இமைகொட்டுதல்; ஒளிவிடுதல் சுருங்குதல் தூங்குதல்

ஒட்டு - இணைக்கப்பட்டது; இணைப்பு; சார்பு; நட்பு; மரப்பட்டை; மரவொட்டு; ஓரம்; பறவைபிடிக்கும்கண்ணி; ஒட்டுக்கடுக்கன்; ஒட்டுத்திண்ணை; படைவகுப்பு; அற்பம்; நற்சமயம்; சூள்; துணை; இகலாட்டம்; ஓரணி.

ஒட்டுதல் - ஒட்டவைத்தல்; பொருத்துதல்; சார்தல்; பந்தயம்கட்டுதல்; துணிதல்; கிட்டுதல்; கூட்டுதல்; இணைத்தல்; தாக்குதல்; உடன்படுதல்; ஆணையிடுதல்; நட்பாக்குதல்; வஞ்சினங்கூறல்; பதுங்கிநிற்றல்; அடைகொடுத்தல்; சுருங்குதல்; வற்றுதல்.

அன்றோ - அதுவல்லவா
அன்றே. Not that, emphatically, or is it not that?

வன் - வல் - வலிமை; திறமை; மேடு; சூதாடுகருவி; முலைக்கச்சு; விரைவு.

கணவர் - கூட்டத்தார்.

முழுப்பொருள்
நாம் கவனமாய் நோக்கிக்கொண்டு இருக்கும் பொழுது (/அல்லது பகையைக் கண்டு கோபத்தில் கண் சிவந்த வீரனுடைய கண்கள் தன்னுடைய) பகைவர் வேலினை நம்மீதெறியும் நேரம் நாம் கண் சிமிட்டினாலும் அது(அந்த வேல்) நம்மை அழித்துவிடும். வலிமையான படையென்றாலும் அவ்வாறு அழிவது நமக்கு அற்பத்தையே சேர்க்கும். இங்கே கண்சிமிட்டுவது என்பது அஞ்சுவதை ஐயத்தை குறிப்பதாகும். அதுமட்டுமின்றி வலிமையான படையென்றாலும் கவனக்குறைவாக இருந்தால் அழிவு கண்சிமிட்டும் நேரத்தில் ஏற்படும். அது புறங் கொடுத்தலுக்கு ஒப்பாகும்.

பாய்ந்துவரும் எதிரியின் படைக்கருவிக்கு கண்சிமிட்டி இமையாமையைச் சொல்லும் இலக்கியப்பாடல்கள் இதோ!

“எடுத்தெறி ஞாட்பின் இமையான்,,” (புறநானூறு : 290). ஞாட்பு – போர்க்களம், போர்

“வேலும் கணையமும் வீழினும் இமையார் 
வீரியத் தறுகணர்” (பெருங்கதை – 1.46:17-8) (தணையம் – தண்டாயுதம்)

“இகலிடை இமையா எரிமலர்த் தடங்கண்” (பெருங். 4.5:60)

“வீரரெறி வெம்படைகள் வீழயிமை யானாய்” (சீவக சிந்தாமணி: 288)

“ஏந்தல்தன் கண்கள் வெய்ய இமைத்திட எறித லோம்பி
நாந்தக உழவன் நாணி நக்குநீ அஞ்சல் கண்டாய்” (சீவக.2258)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
விழித்த கண் - பகைவரை வெகுண்டு நோக்கிய கண்; வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின் - அவர் வேலைக்கொண்டு எறிய அஃது ஆற்றாது அந்நோக்கை அழித்து இமைக்குமாயின்; வன்கணவர்க்கு ஒட்டு அன்றோ - அது வீரர்க்குப் புறங்கொடுத்தலாம். (அவ்வெகுளி நோக்கம் மீட்டலும் போரின்கண் மீட்சி எனக்கருதி அதுவும் செய்யார் என்பதாம்.).

மணக்குடவர் உரை
மாற்றாரோடு எதிர்த்துச் சிவந்து நோக்கின கண்ணிலே ஒரு வேலினாலே எறிய, அதற்கு மீண்டும் இமைப்பாராயின் அஃது அஞ்சாதார்க்குக் கெட்டதனோடு ஒக்கும். விழித்தகண் என்பதற்கு மாற்றானை நோக்கி யிமையாத கண் எனினும் அமையும்.

மு.வரதராசனார் உரை
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

சாலமன் பாப்பையா உரை
பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain