குறள் 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
[அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து]
(For English meaning, scroll to the bottom of this post)
பொருள்
வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.
வேண்டாமை - வேண்டாது இருத்தல் [அவா அறுத்தலாகிய விருப்பற்றத் தன்மையினை]; வெறுப்பு; அவாவின்மை.
இலான் - இல்லாதவன்
அடி - கடவுள்; தலைவி; மூத்தோன்; பெரியோர்பெயருடன்வழங்கும்மொழி; முனிவர்; சுவாமி; குரு; பெருமாட்டி.
சேர்ந்தார்க்கு - அடைந்தார்; அடைக்கலமடைந்தவர்; நண்பர்; உறவினர்.
யாண்டும் - எப்பொழுதும் , எவ்விடத்தும்
இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்
இல - இல்லை
முழுப்பொருள்
இது வேண்டும் இது வேண்டாம் என்ற விருப்பு வெறுப்புகள் இல்லாதவன் இறைவன். எல்லா ஜீவராசிகளும் எல்லா மனிதர்களும் சமம் என்று நினைப்பவன் இறைவன். அவனுடைய பாதங்களை உளமார சரணடைந்தவர்களுக்கு எப்பொழுதும் துன்பமே இல்லை.
எப்பேர்ப்பட்ட துன்பம் வந்தாலும் இறைவன் என்னை காப்பாற்றுவார் என்று நினைப்போர் துன்பம் வந்தாலும் தேவையில்லாத கவலையில் உழலமாட்டார்கள். அவர்களுடைய செயலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். தானாக துன்பத்தில் இருந்து வெளிவருவர். அதேப்போல் வெற்றிகள் வரும் பொழுதும் அதனை இறைவனுக்கு சமர்ப்பித்து அதனை கடந்து செல்வர்.
இறைவனுக்கு விருப்பு வெறுப்பு இல்லை என்று திருவள்ளுவர் ஏன் சொல்லுகிறார்? ஏனெனில் தீமையே செய்தாலும் அவரை மன்னிக்கும் குணம் கொண்டவர் திருவள்ளுவர். இரண்யன், இராவணன், கம்சன், சூரபத்பமன், போன்ற அசுரர்களுக்கும் வரம் கொடுத்தது இறைவனே ஆகும். ஆதலால் மனதார வழிபட்டு இறைவனிடம் சரணடைந்தால் அவர்களின் துன்பங்களை துடைப்பார் இறைவன்.
எப்பேர்ப்பட்ட துன்பம் வந்தாலும் இறைவன் என்னை காப்பாற்றுவார் என்று நினைப்போர் துன்பம் வந்தாலும் தேவையில்லாத கவலையில் உழலமாட்டார்கள். அவர்களுடைய செயலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். தானாக துன்பத்தில் இருந்து வெளிவருவர். அதேப்போல் வெற்றிகள் வரும் பொழுதும் அதனை இறைவனுக்கு சமர்ப்பித்து அதனை கடந்து செல்வர்.
இறைவனுக்கு விருப்பு வெறுப்பு இல்லை என்று திருவள்ளுவர் ஏன் சொல்லுகிறார்? ஏனெனில் தீமையே செய்தாலும் அவரை மன்னிக்கும் குணம் கொண்டவர் திருவள்ளுவர். இரண்யன், இராவணன், கம்சன், சூரபத்பமன், போன்ற அசுரர்களுக்கும் வரம் கொடுத்தது இறைவனே ஆகும். ஆதலால் மனதார வழிபட்டு இறைவனிடம் சரணடைந்தால் அவர்களின் துன்பங்களை துடைப்பார் இறைவன்.
என்பதையும் நினைவில்க்கொள்க
மேலும்
குரு நித்ய சைதன்ய யதி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை “நோயை எதிர்கொள்ளல்” என்ற பெயரில் யதி:தத்துவத்தில் கனிதல் என்ற புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
அதில் கீழ்க்காணும் ஒரு பத்தி வருகிறது.
நான் பக்கவாதத்தை அதிர்ஷ்டத்தின் திடீர் வாய்ப்பு என்றும் அது ஒரு நன்மை என்றும் கருதி அதைப் பற்றிப் பேச விரும்புகிறேன். தற்போது நான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். அது கடவுளால் கொடுக்கப்பட்டது என்று கருதுகிறேன். கடவுள் நோயைக் கொடுத்து மனிதர்களை தண்டிக்கிறார் என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால் அது இந்தியக் கருத்தாக்கம் கிடையாது. நாராயண குரு துன்பத்தைப் பற்றிப் பேசும்போது, கடவுள் உண்மையான கடவுளாக (ariya) வந்து உங்களைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் (sayujya) கொள்கிறார் என்று சொல்கிறார். நீங்கள் கடவுளுடன் ஒன்றிணைந்துவிட்டபோது மனித வாழ்வின் உச்சபட்ச சாத்தியம் உங்களுக்குக் கிடைக்கிறது. ஒரே சமயத்தில் கடவுளுடனும் இவ்வுலகத்துடனும் வாழும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது.
அதில் கீழ்க்காணும் ஒரு பத்தி வருகிறது.
நான் பக்கவாதத்தை அதிர்ஷ்டத்தின் திடீர் வாய்ப்பு என்றும் அது ஒரு நன்மை என்றும் கருதி அதைப் பற்றிப் பேச விரும்புகிறேன். தற்போது நான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். அது கடவுளால் கொடுக்கப்பட்டது என்று கருதுகிறேன். கடவுள் நோயைக் கொடுத்து மனிதர்களை தண்டிக்கிறார் என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால் அது இந்தியக் கருத்தாக்கம் கிடையாது. நாராயண குரு துன்பத்தைப் பற்றிப் பேசும்போது, கடவுள் உண்மையான கடவுளாக (ariya) வந்து உங்களைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் (sayujya) கொள்கிறார் என்று சொல்கிறார். நீங்கள் கடவுளுடன் ஒன்றிணைந்துவிட்டபோது மனித வாழ்வின் உச்சபட்ச சாத்தியம் உங்களுக்குக் கிடைக்கிறது. ஒரே சமயத்தில் கடவுளுடனும் இவ்வுலகத்துடனும் வாழும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது.
மேற்சொன்ன பத்தியில் இருக்கும் வரிகளை கருத்திக்கொண்டு, நாம் நம்மை கடவுள் என்ற நிலைக்கு உயர்த்திக்கொண்டால் நமக்கு மனித வாழ்வின் உச்சபட்ச சாத்தியம் நமக்கு கிடைக்கும்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னை” (அப்பர். திருவாவடுதுறை 9)
“கொள்கை கொளாமை இலாதான்
எள்கல் இராகம் இலாதான்” (திருவாய்மொழி 1.6:5)
“வேண்டுதல் வேண்டாமை இல்லாத வீரன்” (திருக்கலம் 58)
“ஆழ்த்துதி ஆர்வமும் செற்றமும் நீக்கிய அச்சுதனே” (திருநூற் 20)
“எங்கும் ஏத்திநின்றின்புறும் அடியரை
இடும்பைவந் தடையாதே” (சம்பந்தர் கடிக்குளம் 3)
ஒரு கவிதை
இயற்கையின் ஆதி இயல்பில்
இது என்பதும்
அது என்பதும்
கிடையாது.
அந்த
மகா வலயக் கண்ணாடிக்கு
விருப்பும் வெறுப்பும் கிடையாது
- ஸ்யுங் ஸான்
“இந்த எளிய மானுடர்களை மட்டும் எண்ணுவேன் என்று கருதினீரா? இதோ நெளியும் புழுக்களிலிருந்து எவ்வகையில் மானுடர் மேம்பட்டவர்? இங்கு ஒரு காலடிபட்டு அழியும் பல்லாயிரம் புழுக்களைக் கண்டு ஒருகணமும் துயருறாத மூடர்களே போர்க்களத்தில் மாயும் வீரர்களுக்காக காவியம் எழுதுகிறார்கள். எனக்கு உயிர்கள் எல்லாம் நிகரே. எவர் மீதும் அன்பும் வெறுப்பும் இல்லை. கருணையும் காழ்ப்பும் இல்லை. எவர் வெல்லவும் நான் நின்றிருக்கவில்லை. பிறந்து இறந்து கொன்று நின்று ஆடிமறையும் உயிர்களென்பவை வெறும் ஒற்றைப்பெருக்கு. இப்பெரும்சுழியின் மையத்தில் விரலிட்டு படையாழி என ஏந்தி நின்றிருக்கிறேன்.”
நாகபாப்பாக்கள் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் (நீர்க்கூடல்நகர் – 5 இல் இருந்து. சுட்டியை தட்டவும்)
ஒரு நாகாபாபாவின் குடிலுக்குள் கொஞ்சநேரம் சென்றால் என்ன என்று தோன்றியது. கிருஷ்ணன் மொழியாக்கம் செய்ய ஒரு நாகாபாபாவை வணங்கி சென்று அருகே அமர்ந்தோம். நாகாபாபாக்கள் சாதாரணமான நீலநிற நைலான் தார்ப்பாயை இழுத்துக்கட்டி கூடாரம் அமைத்து கீழே நைலான் பாய் விரித்து அமர்ந்திருக்கிறார்கள். கும்பமேளா வளாகம் முழுக்க ஏராளமான நாகாபாபாக்களின் கூடாரங்களை காணலாம். அவர்கள் தனித்தனி அகாராக்களாகவே ஓரிடத்தில் முகாமிட்டிருப்பார்கள். அகாரா என்றாலே முகாம் என்றுதான் பொருள். ஜூனா அகாரா என்பதே தொன்மையானது, பெரியது என்கிறார்கள்.
நாகாபாபாக்கள் பலவகை. ஆடை அணிந்தவர்கள் உண்டு, அவர்கள் சற்றே கீழ்நிலையில் இருப்பவர்கள். முற்றாகவே ஆடைகளைத் துறந்து உடலெங்கும் சாம்பல்பூசி அமர்ந்திருப்பவரே தீக்ஷை பெற்று முழுமையை நோக்கிச்செல்லும் நாகாபாபா. அவருக்கு துறவிகள் நடுவே உள்ள இடம் சிற்றரசர்கள் நடுவே பேரரசர்களுக்குரியது. பிற துறவிகள் அவரை மறு எண்ணமின்றி பணிந்து வணங்குவதை காணலாம். எங்கும் ஆடையற்ற, மண்படிந்த மேனியராகவே அவர்கள் செல்கிறார்கள். ஆடை என்பதை அவர்கள் அறிந்ததே இல்லை என்பதைப்போல.
நாகா பாபாக்களில் பெரும்பாலானவர்கள் கஞ்சா புகைப்பார்கள். கஞ்சா என்பது எதுவாக இருக்கிறோமோ அதை பெரிதாக்குவது. ஆகவே அது தியானத்திற்கு உதவும் சிவமூலியாகவே நம் மரபில் எப்போதும் கருதப்பட்டு வருகிறது. அது சிவனின் கொடை என்பதனால் பெரும்பாலும் கேட்டால் உடனே நமக்கும் இழுப்பதற்கு கொடுத்துவிடுவார்கள்.
நாம் துறவு என்று சொல்லும் எந்த ஆசாரங்களுக்கும் கட்டுப்படாதவர்கள் நாகா பாபாக்கள். சுத்தம், ஒழுங்கு, நாகரீகம் என எதையும் அவர்கள்மேல் போட்டு புரிந்துகொள்ளமுடியாது. நாம் வாழும் இந்த உலகியல் வாழ்க்கையிலிருந்து முற்றாகவே வெளியே சென்றுவிட்டவர்கள். அவர்களிலேயே இன்று எளிய பிச்சைக்காரர்களும் வித்தைக்காரர்களும் கலந்துள்ளனர். ஆனால் மிகமிக எளிதாக வேறுபாட்டை கண்டுகொள்ள முடியும்.
இந்துமதத்தின் இன்றைய எளிய லௌகீகர்களால் நாகா பாபாக்களை புரிந்துகொள்ள முடியாது. தங்களை அறிவாளிகள் என நினைக்கும் நகர்சார்ந்த அரைவேக்காட்டு லிபரல்களால் அவர்களை அணுகவே முடியாது. ஒவ்வொரு கும்பமேளா வரும்போதும் டெல்லி மும்பை சார்ந்த அறிவிலிகளான இதழாளர்களால் நாகா பாபாக்களைப் பற்றிய அவதூறும் ஒவ்வாமையும் பரப்பப்படுகின்றன. நவீனமேற்கத்திய சிந்தனைகளே அறிவு என நம்பும் ஒரு தரப்பிலிருந்து சலிப்புக்குரல்களும் எழுகின்றன.
இன்று இந்தியாவின் மரபான உள்ளம் கொண்ட எளிய இந்துக்களால் நாகா பாபாக்களை புரிந்துகொள்ளமுடியும். அல்லது ஹிப்பிகளை, வரலாற்றில் மைய நாகரீகத்தை எதிர்க்கும் அறிவியக்கங்களின் பங்களிப்பை, பண்பாட்டில் புறனடையாளர்களின் இடத்தை அறிந்த ஐரோப்பியர்களால் புரிந்துகொள்ள முடியும்.
ஒரு பண்பாட்டின் உச்சியில் அப்பண்பாட்டின் அத்தனை கூறுகளையும் முழுக்க நிராகரித்த ஒருவர் அமர்ந்திருப்பதென்பது பிரமிப்பூட்டும் முரண்பாடு. விவேகானந்தர் அவருடைய உரை ஒன்றில், உலகின் மாபெரும் செல்வக்களஞ்சியமாக இந்தியா இருந்த காலகட்டத்தில், சக்கரவர்த்திகளால் இந்நிலம் ஆளப்பட்டபோது, இதன் உச்சியில் அமர்ந்திருந்தவர்கள் இங்கே எனக்கு எதுவுமே தேவையில்லை, என்று சொன்ன நாடோடிப் பிச்சைக்காரர்களே என்று சொல்கிறார். நம் பண்பாட்டின் சிம்மாசனம் அவர்களுக்கே அளிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.
துறப்பவனிடமே உச்சகட்ட அதிகாரம் இருக்கவேண்டும் என கண்டடைந்தது நம் மரபு. வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறார் வள்ளுவர். இந்துமதத்திலும் சமண பௌத்த மதங்களிலும் துறவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் உச்ச இடத்தை புரிந்துகொண்டாலொழிய இந்த மதங்களின் எந்தக் கொள்கையையும் உள்வாங்க முடியாது.
நாகா பாபாக்கள் எதையும் செய்யலாம், ஆனால் அவர்களே ஏற்றுக்கொண்ட கடுநோன்பு அவர்களுடையது. அவர்கள் கொட்டாங்கச்சியில் உணவுண்ணவேண்டும். ஆடை துறக்கவேண்டும். இவ்வுலகின் எந்த இன்பங்களையும் ஒரு பொருட்டாக எண்ணக்கூடாது.
குளிர், வெப்பம், வலி, நோய், பசி என்னும் ஐந்து உடல்துன்பங்களை அவர்கள் கடக்கவேண்டும். ஆணவம், சினம், ஐயம், அச்சம், அருவருப்பு என்னும் ஐந்து உளநிலைகளை கடக்கவேண்டும். இந்தப் பத்து தளைகளால் கட்டுண்டு, இந்த பத்து திரைகளால் மூடப்பட்டிருக்கும் மெய்மையை அதன்பின்னர் அவர்கள் காணமுடியும். அது ’நானே சிவம்’ எனும் பேருணர்வு. ’சிவோஹம்!” என அவர்கள் அதை முழங்குகிறார்கள்.
நாங்கள் சென்ற நாகாபாபா விறகுமூட்டி தீயிட்டிருந்தார். கூடார அறைக்குள் கஞ்சாப்புகையும் விறகுப்புகையும் நிறைந்திருந்தது. எங்களுக்கு அவரே பால்காய்ச்சி டீ போட்டு அளித்தார். ஊரிலிருந்து கிளம்பிய பின் அருந்திய மகத்தான டீ அது. அந்த நெருப்பிலிருந்தே சாம்பலை அள்ளி நெற்றியிலிட்டு பிடரியில் மெல்ல மூன்றுமுறை அறைந்து தலையில் கைவைத்து வாழ்த்தளித்தார்.
அவரிடம் பேசியபடி அங்கே சற்றுநேரம் அமர்ந்திருந்தோம். கஞ்சா சிலும்பியை பற்றவைத்து ஆழ இழுத்து புகைவிட்டார். நண்பர்களும் வாங்கி இழுத்தனர். ஓங்கூர் சாமியை ஜெயகாந்தன் வர்ணிப்பதுபோல ‘வெட்டவெளியில் இல்லையென்றிருக்கும்’ நிலையை அவர் அடைந்தார். முகிலுக்குள் கொஞ்சநேரம் அமர்ந்திருந்துவிட்டு வணங்கி கிளம்பினோம்.
என்ன அடைந்தோம்? அதை சொல்ல முடியாது. நான் முதன்மையாக மிகமிக அரிய மனிதர் ஒருவரின் அருகே அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். பெருங்கல்வி கொண்டவர்கள், கனிந்தவர்கள் அடையும் ஓர் உச்சத்தில் இருப்பவர் என. மிகச்சில நிமிடங்களிலேயே ஆடையற்ற உடலுடன் அஞ்சத்தக்க கோலத்துடன் ஒருவர் அங்கே இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம் என்பது ஓரு வியப்பு. இனிய, கம்பீரமான ஆளுமை ஒருவரை அகம் உணரத் தொடங்குகிறது. அந்த உணர்வு ஓரு தொடக்கம். அங்கிருந்தே அவரை நோக்கி செல்லவேண்டும்.
“ஆம், வடக்குமுகம் கொள்ளவேண்டியிருக்கிறது” என்றார் இளைய யாதவர்.
அகம் அதிர்ந்து பீஷ்மர் திரும்பி நோக்கினார். இருவர் விழிகளும் தொட்டுக்கொண்டன. பீஷ்மர் புன்னகைத்தார். “ஸ்வேதவீரரே, மடியிலேறி விளையாட வரும் மைந்தர்களுக்கும் உங்களை கொல்லவருபவர்களுக்கும் வேறுபாடில்லை என்னும் உளநிலை போரில் உங்களிடம் அமையட்டும்” என்றார். பீஷ்மர் மேலும் புன்னகைத்த பின்னர் திரும்பி இருளில் நடந்து அகன்றார்.
விதுரர் “ஆம், நான் துறக்க விரும்புவது இதைத்தான்” என்றார். இளைய யாதவர் “வெறுத்தலும் விரும்புதலும் இல்லாதவன் எங்கிருந்தாலும் துறவியே. அகம் அசையா நிலையே யோகம். உலகியலையும் யோகத்தையும் வெவ்வேறெனக் கருதுபவர்கள் அறியாதவர்களே. உலகியலில் யோகத்திலமைபவன் இரண்டின் பயனையும் அடைகிறான். செயல்களில் ஒட்டாதவன் செயல்களின் பயனால் சிறப்புறுகிறான். மெய்யறிந்தவன் நான் எதையும் செய்யவில்லை என்று உணர்ந்தவன்” என்றார்.
சூஃபியில் இறைவனைப் பற்றி: (எமதுள்ளம் சுடர் விடுக 29: உறங்குபவனால் இன்னொரு உறங்குபவனை எழுப்ப முடியாது!’ - எழுத்தாளர் பிரபஞ்சன்)
கீழ்க்காணும் வரிகள் எழுத்தாளர் பிரபஞ்சன் தனது கட்டுரையில் கூறியது. அவ்வரிகளை படிக்கும் பொழுது இக்குறள் நினைவிற்கு வந்தது. ஆதலால் அதை அங்கிருந்து கத்தறித்து இங்கே ஒட்டி இருக்கிறேன் :)
சூஃபியாக மிகு புகழ் - நியாயமான புகழ் - கொண்ட பெண்மணி ராபியா பற்றிய அறிமுகமான பகுதி. மிக அழகியது. அவர் எழுதுகிறார்.
‘இறைவா.. நரகத்துக்குப் பயந்து உன்னை நான் வணங்கினால் என்னை நரகில் எரித்துவிடு. சொர்க்கத்தின் நம்பிக்கையில் உன்னை நான் வணங்கினால் எனக்கு சொர்க்கம் தராமல் விட்டுவிடு. உனக்காகவே உன்னை நான் வணங்கினால் உனது அழகை எனக்கு மறைக்காதே...’
பரிமேலழகர் உரை
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.).
மணக்குடவர் உரை
இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர்.பொருளுங் காமமுமாகாவென்றற்கு "வேண்டுதல் வேண்டாமையிலான்" என்று பெயரிட்டார்.
மு.வரதராசனார் உரை
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
சாலமன் பாப்பையா உரை
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
விருப்பு வெறுப்பு இல்லாவிட்டால் துன்பம் இல்லை.
English Meaning - As I taught a kid - Rajesh
God doesn't have likes and dislikes, desires and hatred among people. Those who surrender to God will not have any form of unhappiness or sufferings in life.
We can see this in a different light. The God'ly state is not having likes and dislikes, desires and hatred among people and materialistic stuffs in life. One who is in such state will not have any suffering because if one doesn't likes or desires then he will not suffer when desires are not met or not fulfilled. Similarly, one doesn't suffer when he doesn't dislike or doesn't hate anyone because hate or dislike itself is a suffering in the heart as it creates lot of negative emotion inside the mind and heart thereby consuming lot of mental energy.
So,One can lift oneself to a God like stature if one practices and doesn't have likes or dislikes and desires or hatred in general and for materialistic stuffs and dislikes or hatred among people/money etc. .
Also, remember God can perform limitlessly and has no boundaries. So, if one elevates himself to the level of God, one can perform all that is possible in a human life.
But, one should not confuse with ambition or goals. Goals and Ambitions are necessary for doing a WORK. because as discussed before, one's mettle / fame is measured by their work."
Questions that I ask to the kid
Who is GOD?
How can you become a God?
What is the result of being surrendered to GOD?
No comments:
Post a Comment