குறள் 1315
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்
[காமத்துப்பால், கற்பியல், புலவி நுணுக்கம்]
பொருள்
மை - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஐ); கண்ணுக்கிடும்அஞ்சனம்; மசி; வண்டிமசகு; கருநிறம்; இருள்; பசுமை; களங்கம்; கருமேகம்; வானம்; குற்றம்; பாவம்; அழுக்கு; பிறவி; மலடு; மலடி; மலட்டுஎருமை; மேடராசி; ஆடு; இளமை; நீர்; மந்திரவாதத்தில்பயன்படுத்தும்மை; பண்புப்பெயர்விகுதி; தொழிற்பெயர்விகுதி; வினையெச்சவிகுதிகளுள்ஒன்று; அறியாமை.
இம்மைப் - இப்பிறப்பு; இவ்வுலகவாழ்வு.
பிறப்பில் - பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.
அல-த்தல் - ala- 12 v. intr. 1. Tosuffer, to be in distress; துன்பமுறுதல். அலந்தாரை யல்லனோய் செய்தற்றால் (குறள், 1303). 2. Tosuffer privation, to be in want; வறுமைப்படுதல். அலந்தவர்க் குதவுதல் (கலித். 133).
பிரியலம் - பிரிவு + அலம் (அலத்தல்) - பிரிந்து துன்பப் படுத்தல்
என்றேனா - என்பதால்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
நிறை - பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டுதாக்குடையதாளவகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்துஅமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூஉக்குணம்நான்கனுள்காப்பனகாத்துக்கடிவனகடியும்திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால்.
நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.
கொண்டனள் - கொண்டாள் தலைவி
முழுப்பொருள்
தலைவன் தலைவியிடம் ஆசையாக இருக்கும்பொழுது அன்பின் மிகுதியால் இப்படி கூறுகிறான் : என் பேரன்பிற்குரிய தலைவியே நான் இப்பிறவியில் இவ்வுலக வாழ்வில் உன்னை விட்டு பிரிந்து பிரிவு தரும் துன்பத்தை தரமாட்டேன் என்கிறான். ஆனால் தலைவியோ தன் கண் முழுவதும் குளம்போன்று கண்ணீரை நிறைத்து அழுது கண்ணை கசக்கினாள். ஊடலுக்கான சமிஞை என்றுணர்ந்த தலைவன் ஏன் அழுகிறாய் என்று தலைவியிடம் கேட்டான். தலைவி சொன்னாள்: இப்பிறவியில் பிறவியில் பிரியமாட்டேன் என்று கூறினீர்கள். அப்படியானால் அடுத்த பிறவியில் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவீர்களா ? திடுக்கிட்டான் தலைவன்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனா - காதல் மிகுதியான் இம்மையாகிய பிறப்பின்கண் யாம் பிரியேம் என்று சொன்னேனாக; கண் நிறை நீர் கொண்டனள் - அதனான் ஏனை மறுமையாகிய பிறப்பின்கண் பிரிவல் என்னும் குறிப்பினேனாகக் கருதி, அவள் தன் கண்நிறைந்த நீரினைக் கொண்டாள் ( 'வெளிப்படுசொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொள்கின்றதல்லது என்பால் தவறில்லை', என்பதாம்.).
மணக்குடவர் உரை
இப்பிறப்பிலே யாம் பிரியோமென்று சொன்னேனாக, அதனால் மறுபிறப்பின்கண் பிரிவுண்டென்று கருதிக் கண்ணிறைய நீர் கொண்டாள்.
மு.வரதராசனார் உரை
இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.
சாலமன் பாப்பையா உரை
காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்.

No comments:
Post a Comment