குறள் 1263
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்
[காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்]
பொருள்
உரன் - திண்மை; பற்றுக்கோடு வெற்றி வலி ஊக்கம், உள்ளமிகுதி மார்பு அறிவு
நசைஇ - நசை - ஆசை; அன்பு; நம்பிக்கை; எள்ளல்; குற்றம்; ஈரம்.
உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.
துணையாகச் - துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).
சென்றார் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.
வரல் - வருவதற்கு
நசைஇ - ஆசை; அன்பு; நம்பிக்கை; எள்ளல்; குற்றம்; ஈரம்.
இன்னும் - இவ்வளவுகாலம்சென்றும்; மறுபடியும் மேலும் அன்றியும்
உளேன் - இருக்கிறேன் ; உயிர்வாழ்கிறேன்
முழுப்பொருள்
தன்னுடைய தொழிலில் (போர், வணிகம், வாணிபம்) வெற்றிப் பெறுவதை விரும்பி தனது உள்ளதை ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு சென்றுவிட்டார் தலைவன். ஆனால் நானோ பிரிந்துசென்றவர் விரைவில் என்னிடம் வந்து சேர வேண்டும் என்று ஆசையாக அவருக்காக இன்றளவும் காத்திருக்கிறேன். அதனால் தான் உயிர் வாழ்கிறேன்.
1. தலைவனுக்கு தலைவியிடம் இன்பம் நுகர்தலைவிட வேறு ஆசைகள் இருக்கின்றன. ஆனால் தலைவிக்கோ தலைவன் மட்டுமே போதும். அவள் எண்ணங்கள் ஆசைகள் எல்லாம் தலைவன் மட்டும் தான். தலைவனைப்போல் தொழில் வெற்றி என்றெல்லாம் ஆசை மற்ற இடங்களில் இல்லை.
2. தலைவனுக்கு பிரிந்துசெல்லக்கூடிய ஊக்கம் மனத்திண்மை இருக்கிறது. ஆனால் தலைவிக்கோ அந்த மனத்திண்மை இல்லை. அதனால் தான் தலைவி பிரிந்துசெல்லவில்லை. தலைவனும் அதனை பொருட்படுத்தவில்லை.
மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”நவையறு குணங்கு ளென்னும்
பூணெலாம் பொறுத்த மேனிப் புண்ணிய மூர்த்தி தன்னைக்
காணலா மின்னு மென்னும் காதலா லிருந்தேன் கண்டாய்” (கம்ப.மாயாசனகப் 22)
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) உரன் நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் - இன்பம் நுகர்தலை நச்சாது வேறலை நச்சி நாம் துணையாதலை இகழ்ந்து தம்ஊக்கம் துணையாகப் போனார்; வரல் நசைஇ இன்னும் உளேன் - அவற்றை இகழ்ந்து ஈண்டு வருதலை நச்சுதலான், யான் இவ்வெல்லையினும் உளேனாயினேன். ('உரன்' என்பது ஆகுபெயர். 'அந்நசையான் உயிர் வாழா நின்றேன்,அஃதில்லையாயின் இறந்துபடுவல்', என்பதாம்.).
மணக்குடவர் உரை
இன்பத்தை நச்சாது வலிமையையே நச்சிப் பேசுகின்ற மனமே துணையாகச் சென்றவர் வருவாரென்கின்ற ஆசைப்பாட்டினால் இன்னும் உளேனானேன். இஃது அவர் வாராரென்று கூறியது.
மு.வரதராசனார் உரை
வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.
சாலமன் பாப்பையா உரை
என்னுடன் இன்பம் நுகர்வதை விரும்பாமல், நான் துணையாவதையும் வெறுத்துத் தன் ஊக்கத்தையே துணையாக எண்ணி, வெற்றி பெறுவதையே விரும்பி என்னைப் பிரிந்தவர், அவற்றை இகழ்ந்து என்னிடம் திரும்ப வருவதை நான் விரும்புவதால் இவ்வளவு காலமும் இருக்கிறேன்.

No comments:
Post a Comment