Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பெயலாற்றா நீருலந்த உண்கண்

குறள் 1174
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]

பொருள்
பெயல் - பொழிகை; மழை; மழைத்துளி; மேகம்.

ஆற்றுதல் -   வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஆற்றா - ஆற்றாமல் - பொழியாமல்

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

உலந்த - உலர்தல் - காய்தல்; வாடுதல் அழிதல்

உண்கண் - மைதீட்டியகண்

உயல் - தப்புகை; உளதாதல் உயிர்வாழ்தல்

ஆற்றா - ஆற்றாமல்

உய்வு - உய்தி; (Escaping fromdanger) உயிர்தப்புகை; பிழைப்பு ஈடேற்றம் இடுக்கண்களினின்றும்நீங்கும்வாயில்; உய்தல்

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

என்கண் -என்னுடைய கண்ணில்

நிறுத்து - niṟuttu   III. v. t. raise, erect, நிற்கச்செய்; 2. detain, stop, discontinue, cause to stand still, தடு; 3. defer, put off, தாமதப்படுத்து; 4. put an end to, cause to cease, முடியச்செய்; 5. reestablish, restore one to better circumstances, re-form, சீர்திருத்து; 6. reinstate, place one in office; 7. establish, maintain, support, ஸ்தாபி; 8. make proper pauses, accent, emphasis, cadence etc. in reading or singing. ; இசைப்பாட்டின்சிறுபகுதி

முழுப்பொருள்
தலைவனைப் பிரிந்துள்ளதால் தலைவனை காணமுடியாமல் தலைவி வாடிக்கொண்டிருக்கிறாள். அவளால் உயிர்வாழவும் முடியவில்லை இந்த துன்பத்தில் இருந்துத் தப்பவும் முடியவில்லை. ஏனெனில் இந்த காதல்நோய் தலைவனை அவள் கண்களிலேயே நிறுத்தியுள்ளது.

ஆனால் இக்கண்களின் நிலைமையை பாரும். அழுது அழுது துன்பத்தை ஆற்றிக்கொண்டிருந்தேன். இப்பொழுது அவ்வழுகையும் வற்றிப்போய்விட்டது. என்னால் இப்பொழுது அழக்கூட முடியவில்லை. ஆதலால் மைதீட்டிய என் கண்கள் உலர்ந்துபோய் பொலிவும் இழந்துவிட்டன.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது). உண்கண் -உண்கண்கள்; உயலாற்றா உய்வு இல் நோய் செய்வன. என் கண் நிறுத்து-அன்று யான் உய்ய மாட்டாமைக்கு ஏதுவாய ஒழிவில்லாத நோயை என் கண்ணே நிறுத்தி; பெயலாற்றா நீர் உலந்த - தாமும் அழுதலை மாட்டாவண்ணம் நீர் வற்றிவிட்டன. (நிறுத்தல்: பிரிதலும் பின் கூடாமையும் உடையாரைக் காட்டி அதனால் நிலைபெறச் செய்தல். 'முன் எனக்கு இன்னாதன செய்தலாற் பின் தமக்கு இன்னாதன தாமே வந்தன' என்பதாம்.)

மணக்குடவர் உரை
உயல் ஆற்றாத என்மாட்டு உய்வில்லாத நோயை உண்கண்கள் நிறுத்தித் தாமும் அழமாட்டாவாய் நீருலந்தன. கண்கள் தாம் நினைத்தது முடித்துத் தொழின்மாறினவென்று கூறியவாறு.

மு.வரதராசனார் உரை
என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.

சாலமன் பாப்பையா உரை
மை தீட்டப்பட்ட இந்தக் கண்கள் நான் தப்பிக்கவும், வாழவும் முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் அழ முடியாமல் நீர் வற்றிப் போய்விட்டன.

No comments:

Post a Comment