குறள் 1055
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது
[பொருட்பால், குடியியல், இரவு]
பொருள்
கரப்பு - மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி
இலார் - இல்லை என்றால்
கரப்பிலா -> கரைகள் இல்லாதவர்கள்; ஒளிவு மறைவு இல்லாதவர்கள் .
வையகத்து - மண்ணுலகம்; விலங்குஇழுக்கும்வண்டி; கூடாரவண்டி; சிவிகை; ஊர்தி; உரோகிணிநாள்.
உண்மையான் - என்கின்ற மெய்யான நிலை
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்
நின்று - எப்பொழுதும்; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்படவரும்ஒர்இடைச்சொல்.
இரப்பவர்
இரப்பு - வறுமை; பிச்சை; யாசிக்கை
இரப்பன்-இரப்பாளன், s. A beggar, one who lives by begging, பிச் சைக்காரன். (p.)
இரப்பன்- யாசகம் செய்வேன்
இரப்பாரை - யாசகம் செய்யும் நபர்கள்
மேற்கொள்வது - மேற்கொள்ளுதல் - மேலேறுதல்; மேம்படுதல்பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல்.
முழுப்பொருள்
மறைத்துக்கொள்வதற்கும் வஞ்சிப்பதற்கும் ஏதுமில்லாத இவ்வுலகத்தின் தன்மையால் தான் இவ்வுலகத்தின் கண் முன்னே நம்பிக்கையுடன் நின்று மற்றவர் மூலம் அல்லாமல் நேரடியாக வறுமையிலும் துன்பத்திலும் (அவமானத்திற்கு அஞ்சுகின்ற) இரப்போர் யாசிக்கின்றனர். ஆதலால் அவர்களுக்கு உதவ வேண்டியது இவ்வுலகத்தின் கடமை. இல்லையேல் இவ்வுலகம் என்னும் மெய் நிலை இல்லை. இது நரகம் எனக்கருதப்படும் என்று சொல்லாமல் சொல்லுகிறார் திருவள்ளுவர்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
கண்ணின்று இரப்பவர் மேற்கொள்வது - சொல்லுதன் மாட்டாது முன் நிற்றல் மாத்திரத்தான் இரப்பார் உயிரோம்பற்பொருட்டு அதனை மேற்கொண்டு போதுகின்றது; கரப்பு இலார் வையகத்து உண்மையான் - அவர்க்கு உள்ளது கரவாது கொடுப்பார் சிலர் உலகத்து உளராய தன்மையானே, பிறிதொன்றான் அன்று. (அவர் இல்லையாயின், மானம் நீக்க மாட்டாமையின் உயிர் நீப்பர் என்பதாம்.).
மணக்குடவர் உரை
ஒருவன் முன்னே நின்று இரத்தலை இரப்பார் மேற்கொள்வது, கரப்பில்லாதார் உலகத்து உண்டாதலானே; மற்றொன்றாலன்று. மேல் கரவாதார்மாட்டு இரக்கவென்றார்; உலகத்தில் அவரைப் பெறுத லரிதென்றார்க்கு இது கூறினார்.
மு.வரதராசனார் உரை
ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.
சாலமன் பாப்பையா உரை
கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர் இவ்வுலகத்தில் இருப்பதால்தான்.

No comments:
Post a Comment