Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

ஈட்டம் இவறி இசைவேண்டா வாடவர்

குறள் 1003
ஈட்டம் இவறி இசைவேண்டா வாடவர்
தோற்றம் நிலக்குப் பொறை
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஈட்டம் - சம்பாதிக்கை, மிகுதி; திரள் கூட்டம் தேட்டம் பொருளீட்டுகை; வலிமை

இவறியார் - கைவிடாதவர்; ஆசைப்பட்டோர்.
இவறி - கைவிடாது; ஆசைப்பட்டு, விரும்பி

இசை - இசைவு; பொன் ஊதியம் ஓசை சொல் புகழ் இசைப்பாட்டு நரம்பிற்பிறக்கும்ஓசை; இனிமை ஏந்திசை தூங்கிசை, ஒழுகிசை சீர் சுரம் வண்மை திசை

வேண்டா - வேண்டாது

ஆடவர் - இளையோர்;  ஆண்மக்கள்; 2. Men between the ages of thirty-two and forty-eight, புருடர்

தோற்றம் - காட்சி; விளக்கம்; சாதி; படைப்பு; சாயை; புகழ்; பார்வை; உயர்ச்சி; உற்பத்தி; பிறப்பு; உருவம்; தன்மை; வலிமை; சொல்மாலை; உறுப்பு; உத்தேசம்; நாடகப்பிரதேசம்; எண்ணம்; மாயை; இருவகைத்திணை; காண்க:உயிர்த்தோற்றம்.

நிலக்குப் - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

பொறை - பாரம், சுமை; கனம்; மலை; சிறுகுன்று; கல்; பூமி; பொறுமை; அடக்கம்; கருப்பம்; வலிமை.

முழுப்பொருள்
வாழ்வில் நிலையில்லாத பொருட்செல்வம் /ஊதியம் ஈட்டுதலை மட்டுமே விரும்பு அதை இடைவிடாதுப் பற்றிக்கொண்டு (இவ்வுலகிற்கு பயனுள்ளதை செய்வதனால் வரும்) மெய்யான அரிய புகழ் வேண்டாமெனும் மனிதர்கள் இந்த நிலத்திற்கு ஒரு சுமை.

ஊதியம் மட்டும் வேண்டும் என்று கூறி நிறுத்தாமல் புகழ் வேண்டாம் என்று கூறுவதால் அத்தகையவர் ஒரு சுயநல வாதி என்பதை நாம் இங்கு உணரலாம். சுயநல வாதிகள் இவ்வுலகிற்கு ஒரு சுமை.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”..........ஒன்றீக லான்பொருள்
காத்தவன் புகழெனத் தேயும் கற்பினாள்” (கம்ப.சூர்ப்பனகை 26)

குறள் 572


பரிமேலழகர் உரை
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர் தோற்றம் - யாம் பிறரின் மிக ஈட்டுதும் என்று பொருளினது ஈட்டல் மாத்திரத்தையே விரும்பி, அதன் பயனாய புகழை விரும்பாத மக்களது பிறப்பு; நிலக்குப் பொறை - நிலத்திற்குப் பாரமாம் அத்துணையே. (இசை, இருமைக்கும் உறுதியாய அறமாகலின், ஈகையான் அதனையே வேண்டல் செய்யாது ஈட்டல் துன்பத்தையும், காத்தல் துன்பத்தையும் வேண்டிய அறிவின்மைபற்றி, 'நிலக்குப் பொறை' என்றார். பிறப்பு என்றது அதற்கு உரிய உடம்பினை.)'.

மணக்குடவர் உரை
பொருளீட்டுதலை விரும்பிப் புகழை விரும்பாத மாந்தர், தாம் பிறந்த நிலத்துக்குப் பாரமாவர். இஃது இவர் பிறப்பதினும் பிறவாமை நன்றென்றது.

மு.வரதராசனார் உரை
சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
மற்றவரைவிட நாம் அதிகம் பொருள் சேர்க்க வேண்டும் என்று பொருள் சேர்ப்பதையே விரும்பிப் புகழை விரும்பாத மனிதரின் பிறப்பு இப்பூமிக்குப் பாரமே.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who loves only earning money and does like to earn other things like respect, goodwill etc. by doing service to people, by being kind to people etc. is considered a burden to this land. Because they are selfish person. They only extract from the world. The world doesn't benefit anything from them. 

Questions that I ask to the kid
Who is considered a burden? Why?
How are the people who only extract from the world are considered by others? Why?

No comments:

Post a Comment