குறள் 613
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]
பொருள்
தகைமைக் - தன்மை, தகுதி; பெருமை; பொறுமை; குணம்; மதிப்பு; அழகு; ஒழுங்கு; நிகழ்ச்சி.
செருக்கு - அகந்தை; மகிழ்ச்சி; ஆண்மை; மயக்கம்; செல்வம்; செல்லம்.
சம்பந்தரும் ஆக்கூர் தாந்தோன்றி மாடத்தேவாரத்தில் (3), “வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கும் தாளாளர்” என்பர்.
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]
பொருள்
தாளாண்மை - ஊக்கம்; விடாமுயற்சி
என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்
தகைமைக் - தன்மை, தகுதி; பெருமை; பொறுமை; குணம்; மதிப்பு; அழகு; ஒழுங்கு; நிகழ்ச்சி.
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
தங்கிற்றே - தங்குதல் - வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல்
வேளாண்மை - பயிர்த்தொழில்; உதவிபுரிதல்; கொடை; உண்மை
என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்
செருக்கு - அகந்தை; மகிழ்ச்சி; ஆண்மை; மயக்கம்; செல்வம்; செல்லம்.
முழுப்பொருள்
தாளாண்மை எனப்படுகின்ற விடாமுயற்சி மிகுந்த உயரிய குணம். அத்தகையவரிடம் செருக்கு எனப்படுகின்ற வளம், செல்வம் ஆகியவை வந்து சேரும். முக்கியமாக பிறருக்கு உதவிட வேண்டும் என்னும் வேளாண்மை எனப்படுகிற கொடைத்தன்மை அவரிடம் நிலைத்துநிற்கும். அது அவருக்கு மகிழ்ச்சியை தரும். ஆக்கம் கொண்டவர்க்கே அடுத்தார்க்கு உதவுவது சாத்தியமாகும் என்பதினால் வேளாண்மைக்குத் தாளாண்மை அவசியமாகிறது.
சம்பந்தரும் ஆக்கூர் தாந்தோன்றி மாடத்தேவாரத்தில் (3), “வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கும் தாளாளர்” என்பர்.
"தாளாண்மை யில்லாதான் வேளாண்மை” (குறள் 614)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்று - முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தின்கண்ணே நிலை பெற்றது; வேளாண்மை என்னும் செருக்கு - எல்லார்க்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு. (பொருள் கைகூடுதலான், உபகரித்தற்கு உரியார் முயற்சி உடையார் என்பார், அவ்வக் குணங்கள்மேல் வைத்தும், அது பிறர்மாட்டு இல்லை என்பார் 'தங்கிற்றே' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
முயற்சியாகிய நன்மையின்கண்ணே கிடந்தது: பிறர்க்கு உபகரித்தலாகிய பெருமிதம். இஃது அறஞ் செய்தலும் இதனாலே யாகுமென்றது.
மு.வரதராசனார் உரை
பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை
முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.
No comments:
Post a Comment