Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அரியகற்று ஆசற்றார் கண்ணும்

குறள் 503
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு
[பொருட்பால், அரசியல், தெரிந்துதெளிதல்]

பொருள்
அரிய - அருமையான; அரு-மை. Precious,dear, excellent, rare, difficult;அரியது

கற்று - கற்கை - படித்தல்.

ஆசு - குற்றம்; ஆணவமலம் புல்லிது நுட்பம் ஐயம் துன்பம் பற்றுக்கோடு வாளின்கைப்பிடி; கவசம் கைக்கவசம் பற்றாசு நேரிசைவெண்பாவின்முதற்குறளின்இறுதிச்சீர்க்கும்தனிச்சொற்கும்இடையில்கூட்டப்படும்அசை; எதுகைஇடையில்வரும்ய், ர், ல், ழ்என்னும்ஒற்றுகள்; நூலிழைக்கும்கருவிகளுள்ஒன்று; இலக்கு விரைவு ஆசுகவி இடைக்கார்நெல்வகை; அச்சு

அற்றார் - பொருள் இல்லாதவர்; முனிவர் ( 2. Those who have dedicatedthemselves to the service of God; தம்மைஒன்றற்கென்றே யொப்படைத்தவர்.) அல்லாதவர் ; aṟṟār   n. id. 1. Destitute persons; பொருளில்லாதவர். அற்றா ரழிபசி தீர்த்தல்(குறள், 226). 2. Those who have dedicatedthemselves to the service of God; தம்மைஒன்றற்கென்றே யொப்படைத்தவர். முதல்வன் பாதத்தற்றா ரடியார் (தேவா. 396, 10).

கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல்.

கால் - கால் - kāl   part. 1. (Gram.) A locativeending; ஏழனுருபுளொன்று. (நன். 302.) 2. Endingof the verbal participle meaning if, provided,while, when; ஒரு வினையெச்சவிகுதி. பழவினை வந்தடைந்தக் கால் (நாலடி, 123). 3. A prefix meaningin, at, about, in the vicinity of; ஓர் உபசர்க்கம்நூல் கால்யாத்த (பி. வி 45).

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

அரிதே - அரிது- அருமை; பசுமை

வெளிறு - வெண்மை; நிறக்கேடு; வெளிச்சம்; வெளிப்படுகை; பயனின்மை; அறியாமை; இளமை; திண்மையற்றது; குற்றம்; வயிரமின்மை; மரவகை; காண்க:அலிமரம்.

முழுப்பொருள்
அரிதான பலநூல்களை நுண்மையாக ஆராய்ந்துக் கற்றுணர்ந்து ஐயமும் குற்றமும் அல்லாதவர் ஆயினும் அவரிடமும் கூர்ந்து நோக்கினால்/ஆராய்ந்தால்  தெரியும்  அவரிடமும் அறியாமை, இல்லாமை, வறுமை ஆகியவை இல்லாது இருப்பது மிக மிக அரிது.

ஆசு என்றால் ஐயம் என்றப் பொருளும் உண்டு. வெளிறு என்றால் அறியாமை என்ற பொருளை கொள்ள வேண்டும்.

பி.கு: எல்லோரிடமும் குறை ஐயம் வறுமை அறியாமை என்று ஏதாவது ஒன்று உண்டு. ஆதலால்
1) நமக்கு பணிவுத்தேவை.

2) எது ஒன்றை கற்றாலும் அதனை ஆழமாக கற்க வேண்டும். சில காலம் கழித்து மறுபடியும் கற்று நமது அறிதலை இன்னும் ஆழமாக்கிக்கொள்ள வேண்டும்.

3) "கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு" என்ற மனதுடன் எப்பொழுதும் கற்கும் மனநிலையை வைத்துக்கொள்ள வேண்டும்.

4) யாரையும்/பெரியோரையும்/சான்றோரையும் (அளவுக்கு அதிகமாக) வியந்துப் பார்க்கவும் கூடாது. அப்படி வியந்து பார்த்தோரைப் பற்றி பின்பு இன்மை/தவறாக அறிந்தால் அவரை தூற்றக்கூடாது. குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் வேண்டும். உதாரணமாக மஹாத்மா காந்தி போன்றோர் உதாரணபுருஷர்களாய் விளங்கினாலும் அவருக்கும் குறைகள் உண்டு. அக்குறைகளுக்காக அவர்களை முற்றிலும் நிராகரிக்காமல் அவர்கள் குறைகளை மட்டும் நிராகரித்து அவர்களுடைய நிறைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”விற்றாங்கு வெற்பன்ன விலங்கெழில் தோள மெய்ம்மை
உற்றார் சிலர் அல்லவ ரேபலர் என்ப துண்மை
பெற்றா ருழைப் பெற்ற பயன்பெறும் பெற்றி யல்லால்
அற்றார் நவையென்றலுக் காகுநர் ஆர்கொல் என்றான்’ (கம்ப.வாலி.35)

பரிமேலழகர் உரை
அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும் - கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும், தெரியுங்கால் வெளிறு இன்மை அரிது - நுண்ணியதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது.
(வெண்மை: அறியாமை, அஃது அவர்மாட்டு உளதாவது, மனத்தது நிலையாமையான் ஒரோவழியாகலின், 'தெரியுங்கால்' என்றார். காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம். இவ்வளவைகளான் இக்குணமும் குற்றம் தெரிந்து குணமுடையாரைத் தெளிக என்பது, இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றமற்றார்மாட்டும் ஆராயுங்கால் குற்றமின்மை இல்லை.

மு.வரதராசனார் உரை
அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.

சாலமன் பாப்பையா உரை
அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.

No comments:

Post a Comment