குறள் 254
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்
[அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்]
பொருள்
அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்
அல்லது - தீவினை; தவிர
யாது? - எது; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு.
எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்.
கொல்லாமை - உயிர்க் கொலை செய்யாமை
கோறல் - கொல்லுதல்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.
அல்லது - தீவினை; தவிர
அவ் - அந்த ; சுட்டுச்சொல்; அவை
ஊன் - தசை, இறைச்சி; கொழுப்பு; உடம்பு.
தினல் - தின்னுதல் - உண்ணுதல்; கடித்தல்; மெல்லுதல்; அரித்தல்; அழித்தல்; வருத்துதல்; வெட்டுதல்; அராவுதல்; பெறுதல்.
முழுப்பொருள்
நல்வினை அல்லாதது எது என்றால்? அது பிறர் உயிர்களை (மனிதர்கள், விலங்குகள்) கொல்லல் ஆகாது என்னும் கொள்கையை கொள்வது. அதாவது பிறர் உயிர்களை கொள்வது நல்வினை ஆகாது. மதிக்கத்தக்கது அல்ல வீடுபேறு பெறக்கூடியது அல்ல அறிவானது (சான்றோன் செய்வது) அல்ல அந்த ஊனை தின்பது. அதாவது "கொன்றால் பாவம் தின்னா போச்சு" என்று கூறுவோர்க்கு மறுப்பாக திருவள்ளுவர் அன்றே கூறிய பதில்.
கொள்ளாமை கோறல் என்று ஏன் சொல்கிறார் ? கொல்லாமை எனப்படுவது அடிப்படையாக கடைபிடிக்கவேண்டிய கொள்கை என்பதை கூறவே.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
அருள் யாது எனின் கொல்லாமை - அருள் யாது எனின், கொல்லாமை : அல்லது (யாதெனின்) கோறல் - அருள் அல்லது யாது எனின் கோறல்: அவ்வூன் தினல் பொருள் அல்லது - ஆகலான் அக்கோறலான் வந்த ஊனைத் தின்கை பாவம். (உபசாரவழக்கால் 'கொல்லாமை, கோறல்' ஆகிய காரியங்களை 'அருள் அல்லது' எனக் காரணங்கள் ஆக்கியும் 'ஊன் தின்கை' ஆகிய காரணத்தைப் 'பாவம்' எனக் காரிய மாக்கியும் கூறினார். அருளல்லது - கொடுமை. சிறப்புப்பற்றி அறமும் பொருள் எனப்படுதலின், பாவம் பொருள் அல்லது எனப்பட்டது. 'கோறல்' என முன் நின்றமையின் 'அவ்வூன்' என்றார். இனி இதனை இவ்வாறன்றி 'அருளல்லது' என்பதனை ஒன்றாக்கிக், 'கொல்லாமை கோறல்' என்பதற்குக் 'கொல்லாமை என்னும் விரதத்தை அழித்தல்' என்று உரைப்பாரும் உளர்.).
மணக்குடவர் உரை
அருளல்லது யாதெனின், கொல்லாமையைச் சிதைத்தல்; பொருளல்லது யாதெனின் அவ்வூனைத் தின்றல். இஃது அதனை யுண்டதால் அருள் கெடுதலேயன்றிப் பெறுவதொரு பயனுமில்லை என்றது.
மு.வரதராசனார் உரை

அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
சாலமன் பாப்பையா உரை
இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே.
No comments:
Post a Comment