Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

செறிவறிந்து சீர்மை பயக்கும்

குறள் 123
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்
[அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை]

பொருள்
செறிவு - நெருக்கம்; மிகுதி; கூட்டம்; உறவு; பொந்து; கலப்பு; உள்ளீடு; தன்னடக்கம்; எல்லைகடவாநிலைமை; நெகிழிசையின்மையாகியசெய்யுட்குணம்.

அறிந்து  - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

சீர்மை  - சிறப்பு; புகழ்; கனம்; அளவிற்படுகை; வழவழப்பு; காண்க:சீமை; நன்னடை.

பயக்கும் - பயத்தல் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத்தல்; இயற்றுதல்; நிறம்வேறுபடுதல்; அச்சமுறுதல்.

அறிவு  - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

அறிந்து  - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

ஆற்றின்  - ஆற்று - āṟṟu   III. v. t. cool, refresh, குளிரச் செய்; 2. appease, comfort, தணி; 3. slacken, loosen what is too tight, தளர்த்து; 4. act, செய்; 5. carry, bear, தாங்கு, v. i. be possible as in ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி); 2. be sufficient; 3. be equal to, compare with, உவமையாகு.-

அடங்கப்  - அடங்குதல் - அமைதல்; நெருங்குதல் கிடத்தல் கீழ்ப்படிதல் சுருங்குதல் நின்றுபோதல் படிதல் மறைதல் புலன்ஒடுங்குதல்; உறங்குதல் சினையாதல்.

பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்

முழுப்பொருள் 
தன்னடக்கத்துடன் வாழ்வில் நடந்துக்கொள்ளுதலும், எந்த ஒரு செயலையும் அடக்கத்துடன் அமைதியாக (ஓர் கற்போருக்கு உண்டான மனதுடன்) செய்தலும் மிக அவசியம், என்று அறிந்து உணர்ந்தோர், தன்னடக்கத்துடன் எந்த ஒரு செயலையும் செய்து, அதில் வெற்றியும் கண்டு, பின்பு இன்னும் பல செயல்களில் வெற்றிகளையும் பெற்று, இன்னும் அடக்கத்துடன் இருப்போரின் அடக்கத்தை, சான்றோர்கள் அறிந்து அவர்களை போற்றுவார்கள். அவ்வாறு அடக்கத்துடன் இருந்தால் புகழ் கிட்டும். அடக்கம் இல்லை என்றால் புகழ் இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறார்  திருவள்ளுவர்.

புகழ்வந்தாலும் சரி, தொடர்ந்து வாழ்வில் வெற்றிகளும் புகழும் வந்தாலும் சரி, அதனை தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல், தன்னடக்கத்துடன் கற்றல் நிலையில் இருந்து அடுத்த என்ன செயல் என்று செயல்புரிந்துக்கொண்டு இருந்தால் ஒருவருக்கு புகழ் இல்லை என்றென்பதே இல்லை.

Amazon அலுகத்தில் ஒவ்வொரு நாளும் முதல் நாளே. The Day 1 mentality means that even though Amazon is nearly 25 years old, the company treats every day like it's the first day of their new startup.

நன்னெறிச்சாரத்திலிருந்து இரண்டுவரிகள் அடக்கமுடைமை பற்றி:
தன்னைத் தன் நெஞ்சம் கரி ஆகத் தான் அடங்கின் 
பின்னைத் தான் எய்தா நலன் இல்  (கரி – சாட்சி) (அறநெறி. 206)
தன்னுடைய மனமே தன்னுடைய செயல்களுக்கு சாட்சியாகக் கொண்டு, தன்னடகத்துடன் இருக்கும் ஒருவரால் அடையமுடியாத நலன்கள் பின்னர் ஏதுமில்லை. 

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் - அடங்குதலே நமக்கு அறிவாவது என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின்; செறிவு அறிந்து சீர்மை பயக்கும் - அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும். (இல்வாழ்வானுக்கு அடங்கும் நெறியாவது, மெய்ம்முதல் மூன்றும் தன்வயத்த ஆதல்.).

மணக்குடவர் உரை
அறியப்படுவனவும் அறிந்து அடக்கப்படுவனவும் அறிந்து நெறியினானே யடங்கப்பெறின் அவ்வடக்கம் நன்மை பயக்கும். அறியப்படுவன- சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்: அடக்கப் படுவன- மெய் வாய் கண் மூக்கு செவி.

மு.வரதராசனார் உரை
அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.

சாலமன் பாப்பையா உரை
அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.

No comments:

Post a Comment