Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அகனமர்ந்து செய்யாள் உறையும்

குறள் 84
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]

பொருள்
அகன் - akaṉ   n. அகல். Breadth; அகற்சி.சிலம்பாற் றகன்றலை (சிலப். 11, 108).; இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

அமர்ந்து - அமர்தல் - உட்காருதல்; இளைப்பாறல்; அடங்குதல் பொருந்தல் விரும்புதல்

செய்யாள் - செந்நிறமுடையதிருமகள்; தாயின்தங்கையானசிறியதாயார்.

செய் - வயல்; ஒன்றேமுக்கால்ஏக்கர்கொண்டநன்செய்நிலவளவு; 100சிறுகுழிகொண்டநிலவளவு.

உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை; காரம்; போர்வை; உறுப்பு; இருப்பிடம்; பாலிடுபிரை; ஓர்இலக்கக்குறிப்பு; வாழ்நாள்; துன்பம்; கிணற்றின்அடியில்வைக்கும்மரவளையம்; பொன்; பாம்பின்நச்சுப்பை.

உறையும் - உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல்.

முகன் - mukaṉ   s. poet, form of முகம், face; தலையில் நெற்றி முதல் மோவாய் வரையுள்ள முன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

அமர்ந்து - அமர்தல் - உட்காருதல்; இளைப்பாறல்; அடங்குதல் பொருந்தல் விரும்புதல்

நல் - நல்ல; வறுமை

விருந்து - புதியராய்வருபவரைஉணவளித்துப்போற்றுதல்; காண்க:விருந்தினன்; புதுமை; நூலுக்குரியஎண்வகைவனப்புகளுள்ஒன்று.

ஓம்புவான் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
செய் என்றால் வயல் என்று பொருள். வயல் எனப்படுவது வளத்தை குறிக்கும் ஒரு சொல். ஆதலால் செய்யாள் என்றால் வளம் செழிப்பு ஆகியவற்றை குறிக்கும் செல்வத்தின் நாயகியான திருமகள். 

எல்லோரும் நமது வீட்டில் செல்வமும் வளமும் நிலையாக தங்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். ஆனால் அப்படிப்பட்ட வளம், அகம் மலர்ந்து/ மகிழ்ந்து நமது வீட்டில் தங்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் ? நமது வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு நாம் முகம் (அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ஆதலால் முகம்) மலர்ந்து உணவு (மற்றும் தங்க இடம், தேவையான உதவிகள் ஆகியவற்றை) உபசரித்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அகம் மலர்ந்து திருமகள் நம் வீட்டில் தங்குவாள். 

மேலும்: அஷோக் உரை

உண்மையிலேயே சமைப்பதும் விளம்புவதும் உள்ளத்தை மாற்றிவிடுகின்றன


எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மற்றும் குறிப்பாக (main-ஆக) அவரது துணைவியார் கணவதி அம்மாள் பற்றி கி.ரா.இணைநலம் (எஸ்.பி.சாந்தி எழுதியது) நூலில் இருந்து சில பகுதிகள்
கணவதி அம்மாள் (கி.ராவின் மணைவி): கவிஞர் நாவன்னா காமராஜ்னு ஒருத்தர். அய்யாவுக்கு வேண்டியவர். காதி போர்டு இருந்தவர். அவர் ஒரு தடவை கன்னியாகுமரியிலிருந்து ஒரு முப்பது பேருடன் பாதயாத்திரை சென்று திரும்பி வந்துகிட்டிருப்பதாவும், இடைசெவல் வழியா வாரதாகவும், இரவு சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்யும்படியும் சேதி சொல்லி அனுப்பிவிட்டார். கேப்பைக்களியும், கருவாட்டுக் குழம்பும் போதும் என்று செய்ய வேண்டிய சமையல் அயிட்டத்தையும் அவரே சொல்லிவிட்டார். 
“முப்பது பேர்னா சும்மாவ. இரண்டு நாள் முன்னாடிதான், மத்தளம்பாறை வீட்டில் இருந்து வெள்ளைக் கேழ்வரகு ஒரு பத்து கிலோ போல கொடுத்து விட்டிருந்தாங்க.அதை அரைச்சி வெச்சிருந்தேன். எங்க ஊர்ல “பெத்த பூச்சி”ன்னு ஒரு பெரிய அம்மா கேப்பக் களி கிண்டுவதில் ரொம்ப திறமைசாலி. அவங்கள கூப்பிட்டு கேப்பைக்களி பண்ணி, கருவாட்டுக் குழம்பு தயார் பண்ணோம், தோசை ஊற்றி, அதையும் தயாரா வைச்சிருந்தோம். பிறகு பத்துமோ, பத்தாதோன்று உப்புமாவும் கிண்டி எல்லாருக்கும் வயிறார பசியாற்றினோம்.

வீட்டுக்கும் வர்ரவங்க யாரா இருந்தாலும், சாப்பிடற நேரத்துக்கு வந்துட்டாங்கன்னா, அவங்களுக்கும் பசியாத்தினாத்தான் எங்களுக்கு நிம்மதியா சோறு இறங்கும்.

அவர்கள் பேசி முடித்தவுடன் நானும்(எஸ்.பி.சாந்தி) நினைத்துப் பார்க்கிறேன். அய்யா பாண்டிச்சேரியில் மாறிய அத்தனை வீடுகளுக்கும் போயிருக்கிறேன். நான் அவர்கள் வீட்டில் ஒரு வேளையாவது உண்ணாமல் வந்ததில்லை. அதோடு, பல சமயங்களில் யாராவது கூடுதல் நண்பர்கள் வந்திருப்பார்கள்.

நான் ஒரு முறை சென்றபோது, திரு மாசிலாமணி, Ex.MLA, ஜெயங்கொண்டம் அவர்கள் குழந்தைகளுடன் பெண்ணின் திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு வந்திருந்தார். நல்ல வெய்யில் நேரம்.

சிறிது நேர உரையாடலுக்குப் பின் விருந்து உபச்சாரம் ஆரம்பித்து விடுகிறது. என்ன, பருப்பும் நெய்யும், வடையும், பாயாசமும் இல்லை. புளிக்குழம்பு,கீரைக்கூட்டு, வெண்டைக்காய் வறுவல், முட்டை என சாதாரண சாப்பாடுதான். ரொம்ப திருப்தியான சாப்பாடும்மா என்கிறார் விருந்தினர்.

அய்யா உடனே, “இங்கு வர்ரவங்க எல்லாருமே சாப்பாடு ருசியா இருக்குன்னு சொல்றாங்க. இது சாதாரண சாப்பாடுதானே” என்கிறார். சாப்படு என்பதின் ருசி சாப்பாட்டில் மட்டும் இல்லை. கூட இருக்கும் மனிதர்களின் கபடமில்லாத மனம், அவர்களின் இனிய உபசரிப்பு, பரிமாறும் விதம், உறுத்தல் இல்லாத, கலப்படமில்லாத எளிய பேச்சு,  இப்படி நிறைய்ய.

(19 செப் 2006 அன்று எடுத்த ‘அவள் விகடன்’ பேட்டியில் இருந்து ஒரு கேள்வி): இன்றும் உங்கள் மனைவியிடம் நீங்கள் வியந்து ரசிக்கும் விஷயம் எது?
கி.ரா: கவிஞர் நா.காமராசன் அவர்கள் தனது “படை பட்டாள”த்துடன் ஒரு நடைப்பயணம் வந்தார் (சுமார் 30 பேர் இருக்கலாம்). “ராத்திரி நாங்கள் இடைசேவல் தங்கல். எங்களுக்கு கேப்பைக் களியும் கருவாட்டுக் குழம்பும் போதும் வேற எந்த விருந்தும் வேண்டாம் என்று துண்டுச்சீட்டு கொடுத்தனுப்பி இருந்தார்.

என் நண்பர் மத்தளம் பாறை ராமசாமி அவர்கள் அவருடைய தோட்டத்தில் விளைந்த வெள்ளைக் கேப்பை (ராகி) கொடுத்துனுப்பியிருந்தார். அன்றுதான் அதை மாவு அரைத்து வைத்திருந்தோம். ராமேஸ்வரம் பால் நெத்திலிக் கருவாடு வீட்டில் இருப்பு இருந்தது. ஒரு சிரமும் இல்லை; முப்பது பேருக்கு அளவில் களி கிண்டுவது தான் சிரமம். சொந்தக்காரப் பெண்கள் வந்து உதவினார்கள். காணுமோ காணாதோ என்று அரிசியைக் கொஞ்சம் நனைய வைத்து ஆட்டி ஒரு திடீர் உப்புமா செய்தாள். பிறகுதான் தெரிந்தது இதும் சரிதான் என்று. நடந்து வந்த பசி அவர்களுக்கு. கேப்பைக் களியும் கருவாட்டுக் கொழம்புக்கும் ஒரே கொண்டாட்டம்; உப்புமாவும் போன மூலை தெரியவில்லை. ஒரு தார் கதலிப்பழமும் சேர்ந்து கைகொடுத்தது.




ஒப்புமை
குறள் 92, 93,
முருகு 251, நெடுதல் 183

“முகனமர்ந்து......
ஆனா விருப்பில் தானின் றூட்டி” (பெரும்பாண் 478-9)

பரிமேலழகர் உரை
செய்யாள் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் - முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண். (மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.).

மணக்குடவர் உரை
திருவினாள் மனம்பொருந்தி உறையும்: நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண். இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது.

மு.வரதராசனார் உரை
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை
இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.



Thirukkural - Management - Communication - Pleasant speech
Kural 92 also supports the importance of pleasant speech. It presents a comparison to differentiate 
the importance of pleasant words. Uttering pleasing words in your conversations
is far better than a gift wholeheartedly presented to someone.

More pleasing than a gracious gift 
Are sweet words with a smiling face.

There can be values attached to a gift or present. However, pleasant words are invaluable as they last longer. They create ripples and keep ringing in the ears of listeners. A cheerful countenance and pleasing words transform both the speaker and the listener. Therefore, a wholehearted speech is more valuable than a wholehearted gift.

No comments:

Post a Comment