குறள் 1252
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்
[காமத்துப்பால், கற்பியல், நிறையழிதல்]
பொருள்
நிறை - நிறை, பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டுதாக்குடையதாளவகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்துஅமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூஉக்குணம்நான்கனுள்காப்பனகாத்துக்கடிவனகடியும்திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால்.
நிறையழிதல் - மனவடக்கம் அழிதல்
காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.
என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு
ஒன்றோ - oṉṟō part. id. + ஒ&sup5;. 1. Not only,but also; connective between nouns and some-times verbs; எண்ணிடைச்சொல் பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836). 2. Either-or; விகற்பப் பொருள்தரும் இடைச்சொல் ஏவலா னரச னொன்றோ விருபிறப்பாளன் (சீவக. 1682).
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
இன்று - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல்.
என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.
நெஞ்சத்தை - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.
யாமத்தும் - யாமம் - நள்ளிரவு; சாமம்; இரவு; இடக்கைமேளம்; மாலைப்பொழுதின்பின்பத்துநாழிகை; அகலம்; தெற்கு.
ஆளும் - ஆள்(ளு)-தல் -āḷ- 2 v. tr. [T. ēlu, K.M. āl.] 1. To rule, reign over, govern;அரசுசெய்தல். (திவ். பெரியதி. 6, 2, 5.) 2. Toreceive or accept, as a protégé; ஆட்கொள்ளுதல் ஆள்கின்றா னாழியான் (திவ். திருவாய். 10, 4, 3).3. To control, manage, as a household; அடக்கியாளுதல். 4. To use a word in a particularsense and so give currency to it; வழங்குதல் சான்றோரா லாளப்பட்ட சொல் 5. To cherish,maintain; கைக்கொள்ளுதல் நாணாள்பவர் (குறள்,1017). 6. To keep or maintain in use; கையாளுதல் எடுத்தாளாத பொருள் உதவாது.
தொழில் - செயல்; அலுவல்; தந்திரம்; பெருமை; வினைச்சொல்; ஏவல்; திறமை; களவு.
முழுப்பொருள்
காமம் என்ற ஒன்று அறிவில்லாதது கருணையில்லாதது இரக்கமற்றது. ஏனெனில் நடுஇரவானாலும் என் நெஞ்சை ஆள்வதை தொழிலாய் செய்கிறது. இரவில் தான் எல்லோரும் ஓய்வெடுப்பார்கள். ஆனால் இரவு என்றுகூட பாராமல் எனக்கு அன்றாடம் வந்து துன்பம் தருகிறது இந்த பொல்லா காமம்.
பி.கு: தினமும் / அன்றாடம் வந்து செய்வதால் அது தொழிலாகியது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சால் அடக்கப்படும் என்றாட்குச் சொல்லியது.) யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழில் ஆளும் - எல்லாரும் தொழிலொழியும் இடை யாமத்தும் என் நெஞ்சத்தை ஒறுத்துத் தொழில் கொள்ளா நின்றது; காமம் என ஒன்று கண் இன்று - ஆகலாற் காமம் என்று சொல்லப்பட்ட ஒன்று கண்ணோட்டம் இன்றாயிருந்தது. ('ஓ' என்பது இரக்கக் குறிப்பு. தொழிலின்கண்ணேயாடல் - தலைமகன்பாற் செலவிடுத்தல். தாயைப் பணி கோடல் உலகியலன்மையின் 'காமம் என ஒன்று' என்றும் அது தன்னைக் கொள்கின்றது அளவறியாது கோடலின் 'கண்ணின்று' என்றும் கூறினாள். அடக்கப்படாமை கூறியவாறு.).
மணக்குடவர் உரை
காமமென்றொன்று கண்ணோட்டமுடைத்தன்று: என்னெஞ்சத்தை நடுநாள் யாமத்தினும் தொழில்கொள்ளா நின்றது. தொழில் கொள்ளுதலாவது அப்பொழுது அவர்மாட்டுப் போக விடுத்தல். இது நெஞ்சின் மிக்கது வாய்சோர்ந்து ஆற்றாமையால் தலைமகள் தோழிக்குக் கூறியது.
மு.வரதராசனார் உரை
காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.
சாலமன் பாப்பையா உரை
எல்லாரும் வேலையின்றி உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல் என்று சொல்லப்படும் ஒன்று இரக்கமற்றதாக இருக்கிறது.

No comments:
Post a Comment