Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை

குறள் 1223
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்
[காமத்துப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்]

பொருள்
பனி - குளிர்ந்துவிழுந்துளி; காண்க:பனிக்கட்டி; குளிர்:குளிர்ச்சிநீர்:கண்ணீர்; மழை; மஞ்சு; இனிமையானது; அச்சம்; நடுக்கம்; நோய்வகை; சுரம்; துன்பம்.

அரும்பிப் -அரும்பித்தல் - தோன்றுதல்.

பைதல் -இளையது; சிறுவன்; குளிர்; துன்பம்.
paital   n. id. 1. That whichis young or small; இளையது. பைதல் வெண்பிறை(தேவா. 628, 5). சிறுகிளிப் பைதலே (திவ். திருவாய்.9, 5, 6). 2. Boy; சிறுவன். பைதலை யித்தனைபொழுதுகொண் டிருப்பதோ (கம்பரா. பிணிவீட். 2).3. Sorrow, affliction; துன்பம். பைத லுழப்பதெவன் (குறள், 1172). 4. Cold, chilliness; குளிர்.பனிப்படு பைதல் (பரிபா. 11, 75).

பைதல் - paital   v. n. of பை, sorrow, affliction, துன்பம்; 2. change of colour from love-sickness; 3. (பையல்) a boy.

பை - pai   -s. Bag, sack, purse, satchel, சாக்கு. 2. Hood of a cobra, பாம்பின்படம். 3. Any bladder, duct or sack in animal bodies, குடற்பை. (c.) 4. [ex பசு.] Color, நிறம். 5. Beauty, அழகு. 6. Green, பச்சை.

பைத்தல், v. noun. Sorrow, affliction. துன்பம். 2. Change of color from love- sickness, &c., as the verb.

கொள் - கொள்ளும் - koḷ   கொள்ளு, I v. t. take, receive in the hand, வாங்கிக்கொள்; 2. contain, hold, பிடி; 3. have, bear, வைத்திரு; 4. buy, வாங்கு; 5. take food, medicine etc. உட்கொள்; 6. marry, take a wife, பெண் கொள்; 7. get, obtain, பெறு; 8. resemble, ஒத்திரு; v. i. suit or befit, பொருந்து; 2. strike, hurt:-Note-As an auxiliary it either has a reflexive sense or denotes continuation. In the latter sense often கொண்டிரு & கொண்டுவா is used (see examples below).

மாலை - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண்.

துனி - வெறுப்பு; சினம்; புலவிநீட்டம்; பிரிவு; துன்பம்; அச்சம்; நோய்; குற்றம்; இடையூறு; ஆறு; வறுமை.

அரும்பித் - அரும்பித்தல் - தோன்றுதல்.

துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

வளர - vaḷar-   4 v. intr. [K. baḷe,M. vaḷaruka.] 1. To grow; பெரிதாதல். வளர்வதன் பாத்தியுள் (குறள், 718). 2. To lengthen, tobe elongated; நீளுதல். 3. To increase; to wax,as the moon; மிகுதியாதல். துன்பம் வளர வரும்(குறள், 1223). 4. To rejoice; களித்தல். வேனல்வளரா மயில் (திணைமாலை. 111). 5. To sleep; கண்டுயிலுதல். ஆலிலையின் மேலன்று நீவளர்ந்தது (திவ்.இயற். 1, 69). 6. To dwell, rest; தங்குதல். திருவளர் தாமரை (திருக்கோ. 1).

வரும் - வருமானம்

முழுப்பொருள்
பொதுவாக காலையில் (பகலில்) சூரியன் இருப்பதனால் வெம்மை இருக்கும். அதுவே மாலை மற்றும் இரவு நேரங்களில் சூரியன் இருக்காதென்பதனால் மாலை வேளையில் (காலையை விட சற்று) குளிர்ச்சியாக இருக்கும். அதனால் மாலையில் பனி அரும்பி என்று கூறப்பட்டுள்ளது. பைதல் என்றால் இங்கே பசலை நோய் என்று பொருள். (பை பச்சை நிறத்தை குறிக்கும். பச்சை நிறம் பசலை நோயை குறிக்கும்)

மாலையில் குளிர் தோன்ற தோன்ற அது பசலை நோயாக தலைவி மீது படரும். ஏனெனில் மாலை பொழுதில் காதலருடன் பழகிய கூடிய நினைவுகள் எல்லாம் மீண்டும் மீண்டும் வரும். அது தலைவனை பிரிந்திருக்கும் பொழுது பசலைநோயாக அவள்மேல் படர்கிறது. இப்படி பட்ட மாலை பொழுது வரும் தோறும் பிரிவால் வாடுவதால் துன்பம் தோன்றி வளர்ந்துகொண்டே இருக்கும். என்னுடைய துன்பம் வளர்வதற்காகவா இந்த மாலை வருகிறது ? அவள் மாலையே வேண்டாம் என்கிறாளோ ?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) பனி அரும்பிப் பைதல்கொள் மாலை - காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்து வந்த மாலை; துனி அரும்பித் துன்பம் வளர வரும் - இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்து தோன்றி அதற்கு உளதாம் துன்பம் ஒரு காலைக்கு ஒருகால் மிக வாராநின்றது. (குளிர்ச்சி தோன்ற மயங்கிவருமாலை என்னுஞ் செம்பொருள் இக்குறிப்புணர நின்றது. துனி - உயிர் வாழ்தற்கண் வெறுப்பு. 'அதனால் பயன் ஆற்றுமாறு என்னை'? என்பது குறிப்பெச்சம்.).

மணக்குடவர் உரை
நெருநல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது இன்றும் எனக்கு வெறுப்புத்தோன்றி வருத்தம் மிகும்படியாக வாரா நின்றது. இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது.

மு.வரதராசனார் உரை
பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.

சாலமன் பாப்பையா உரை
அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.

No comments:

Post a Comment