Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற்

குறள் 1212
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்
[காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்]

பொருள்
கயல் - கெண்டைமீன்

உண்கண் - மைதீட்டியகண்

யான் - தன்மையொருமைப்பெயர்

இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

இரப்பத் - விரும்பி

துஞ்சின் - துஞ்சுதல் - தூங்குதல்; துயிலுதல்; சோம்புதல்; தொழிலின்றிஇருத்தல்; சோர்தல்; இறத்தல்; வலியழிதல்; குறைதல்; தொங்குதல்; தங்குதல்; நிலைபெறுதல்

கலத்தல் - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல்.

கலந்தார்க்கு - சேர்ந்தோர்க்கு ; புணர்ந்தோர்க்கு 

உயல் - தப்புகை; உளதாதல் உயிர்வாழ்தல்

உண்மை - உள்ளது; இயல்பு உள்ளதன்மை; மெய்ம்மை நேர்மை ஊழ்

சாற்று - cāṟṟu   -கிறேன், சாற்றினேன், வேன், சாற்ற, v. a. To say, speak, declare, tell, men tion, சொல்ல. 2. To publish, announce, to publish by beat of drum, பறைசாற்ற. (p.)
சாற்று, v. noun. Telling, saying, சொல் லுகை.

சாற்றுவேன்- விளம்பரப்படுத்துகை, ஓசை.

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

முழுப்பொருள் 
தலைவி தலைவனை பிரிந்து இருக்கிறாள். அப்பொழுது அவளது உள்ளம் மட்டும் உறங்காமல் இல்லை அவளது மைதீட்டிய அழகிய கண்களும் மீன்கள்போல அங்குமிங்கும் அலைபாய்ந்து உறங்காமல் விழித்திருக்கிறது. அவள் தன் கண்களை  மன்றாடி உறங்க சொல்கிறாள் (வேண்டுகிறாள்). ஆனால் கண்களோ உறங்கமாட்டேன் என்கிறது. அவள் ஏன் உறங்கச் சொல்கிறாள் என்றால்? கண்கள் உறங்கினால் தான் தன்னுடன் கூடி புணர்ச்சியின்பம் தந்த காதலன் கனவில் வருவான். கனவில் வரும் பொழுது அவனிடம் சொல்வேன் நான் பிரிவாற்றாமையையும் தாங்கிக்கொண்டு தப்பிப் பிழைத்து இன்னும் உயிருடன்தான் இருக்கிறேன் என்று. என்னிடம் சீக்கிரம் வந்து சேர் என்று. கண்கள் உறங்கினால் கனவில் அவள்  தன்நிலையை காதலனிடம் உறைப்பால் . 

பி.கு: காதலில் இருக்கும் பொழுது அவள் உறுப்புகள் அவள் பேச்சை கேட்க மாட்டேன் என்கிறது. அவள் கட்டுப்பாடில் அவள் உடல் இல்லை. காதல் வந்த பின்பு பலர் கூடுவது (புணர்ச்சி கொள்வது) தங்களை (தங்கள் ஒழுக்க நெறிகளை) மீறி நடக்கும் இயற்கையான ஒன்று. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தூது விடக் கருதியாள் சொல்லியது, ) கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின் - துஞ்சாது வருந்துகின்ற என் கயல் போலும் உண்கண்கள் யான் இரந்தால் துஞ்சுமாயின்; கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன் - கனவிடைக் காதலரைக் காண்பேன், கண்டால் அவர்க்கு யான் ஆற்றியுளேனாய தன்மையை யானே விரியச் சொல்வேன். ('கயலுண்கண்' என்றாள்,கழிந்த நலத்திற்கு இரங்கி. உயல் - காம நோய்க்குத் தப்புதல். தூதர்க்குச் சொல்லாது யாம் அடக்குவனவும், சொல்லுவனவற்றுள்ளும் சுருக்குவனவற்றின் பரப்பும் தோன்றச் சொல்வேன் என்னும் கருத்தால், 'சாற்றுவேன்'என்றாள். இனி, அவையும் துஞ்சா: சாற்றலுங்கூடாது என்பது படநின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. முன்னும் கண்டாள் கூற்றாகலின், கனவு நிலை உரைத்தலாயிற்று.).

மணக்குடவர் உரை
என்னுடைய கயல்போலும் உண்கண் யான் வேண்டிக் கொள்ள உறங்குமாயின் நம்மோடு கலந்தார்க்கு நாம் உய்தலுண்மையைச் சொல்லுவேனென்று உறங்குகின்றதில்லையே. மன்- ஒழியிசையின்கண் வந்தது. கயலுண்கண்- பிறழ்ச்சி யுடைய கண்.

மு.வரதராசனார் உரை அல்லது சாலமன் பாப்பையா உரை:
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
  இரந்து தான் நிற்கின்றேன் தினம் தினமும்
           இரு விழிகள் கேட்கிறதா எந்தன் பேச்சை
  வரந்தருக என்றெல்லாம் வாயிழந்தேன்
          வகை வைக்க மறுத்ததெந்தன் வேண்டுதலை
  நிரந்தரமாய் இவை தூங்க மறுத்ததென்றால்
         நெஞ்சத்தார் கனவினிலே வருவதெங்கே
  இறந்து பட மாட்டாமல் நானும் இங்கே
        இருப்பதனைச் சொல்லுதற்கு வழி தான் ஏது

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
உறங்கென்று கண்களிடம் இரந்து நின்றேன்
உறங்கவில்லை மீன்கள் போல புரளுதிங்கு
வரங் கொண்டு வந்த எந்தம் காதலரின்
வரவின்றிச் செய்வதிந்தக் கண்கள் ரெண்டும்
தினம் கொஞ்ச நேரம் மட்டும் உறங்கி விட்டால்
தேடி அவர் கனவினிலே வந்திடுவார்
இனம் இங்கே உயிரோடு இருப்பதனை
எடுத்துரைப்பேன் உதவியில்லை கண்கள் தம்மால்

No comments:

Post a Comment