Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

எனைத்து நினைப்பினும் காயார்

குறள் 1208
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு
[காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல்]

பொருள்
எனைத்தும் - எனைத்து - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு

நினைப்பினும் - நினைப்பு - நினைவு - எண்ணம்; ஆலோசனை; ஞாபகம்; பாவனை; நோக்கம்; கவனம்; தியானம்; வருத்தம்; ஞாபகக்குறிப்பு; அரசர்கட்டளை.

காய் - kāy   II. v. i. be hot or heated, சுடு; 2. burn, எரி; 3. be feverish, சுரங்காய்; 4. grow dry, lose moisture, வறளு; 5. wither, உலரு; 6. shine, be bright பிர காசி; 7. speak angrily, rage or burn with passion, சின; 8. suffer, as an empty stomach; v. t. burn, consume; 2. kill, அழி; 3. dislike, hate, வெறு; 4. cut, sever. வெட்டு; 5. harass, worry, tease, வருத்து; 6. scold, rebuke, கடிந்து பேசு.
காய்வார் - those who scold people.

காயார் - கடிந்து பேசாதவர்

அனைத்து - அவ்வளவு; அத்தன்மையது; எல்லாம்

அன்று -அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.

அன்றோ - அதுவல்லவா 

காதலர் - கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள்.

செய்யும்  - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

சிறப்பு? - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு

முழுப்பொருள் 
பிரிந்து இருக்கும் எனது காதலரை (தலைவனை) நான் ஓயாது நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்கிறாள் தலைவி. நான் ஓயாமல் அவரை நினைத்துக்கொண்டிருப்பதை அவர் தடை செய்யாமல் என்னிடம் கோபம் கொள்ளாமல் இருக்கிறாரே அதுவே எனக்கு போதும். ஏனெனில் அவர் நினைப்பாகவே நான் இருப்பதை அவரும் விரும்புகிறார் (அதனால் தான் என்னிடம் கடிந்துக்கொள்ளவில்லை). அதுவே காதலர் எனக்கு ஆற்றும் அன்பளிப்பு/ சிறப்பு/ பெருமை/ இன்பம்.

பி.கு: என் வாழ்விலே சில சமயம் எனது மனைவியின் அதீத அன்பினில் திளைக்க முடியாமல் ஏன் என்னை தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறாய்? நான் வேறு வேலை பார்க்க வேண்டாமா என்று அவளிடம் கடித்துக்கொண்டு இருக்கிறேன். இப்போது தான் ஐயனின் திருக்குறள் படித்தபிறகு தான் தெரிகிறது அவளை கடிந்துக்கொள்ள கூடாது என்று. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பம் செய்வர் என்றாட்குச் சொல்லியது.) எனைத்து நினைப்பினும் காயார் - தம்மை யான் எத்துணையும் மிக நினைந்தாலும் அதற்கு வெகுளார்; காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ-காதலர் எனக்குச் செய்யும் இன்பமாவது அவ்வளவன்றோ? (வெகுளாமை:அதற்கு உடன்பட்டு நெஞ்சின் கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின் அதனைச் 'சிறப்பு' என்றாள். 'காதலர் நம்மாட்டருள்' என்றும் 'செய்யுங் குணம்' என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறிய அதனைக் குறிப்பான் இகழ்ந்து கூறியவாறு.).

மணக்குடவர் உரை
யாம் காதலரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார்; அவ்வளவன்றோ அவர் செய்யும் அருள். அருள் செய்தலாவது குற்றம் கண்டாலும் வெகுளாமை.

மு.வரதராசனார் உரை
காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!.

சாலமன் பாப்பையா உரை
அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ!.

பிரிந்து சென்ற காதலனைப் பேதைப் பெண்ணாள்
பெருமையுடன் மனத்திற்குள் வைத்து வைத்து
நினைந்தவனை அதனாலே வாழுகின்றாள்
நெஞ்சமதின் சிறப்பான உதவியுடன்
பெருந்தன்மை கொண்டவனாம் காதலனும்
பிதற்றுகின்றாள் பெண்ணவளும பித்தாய் ஆகி
தினம் தினமும் அவனையே நினைத்த போதும்
திருமகனோ கோபமின்றி அனுமதித் தானாம்

No comments:

Post a Comment