குறள் 1182
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு
[காமத்துப்பால், கற்பியல், பசப்புறுபருவரல்]
பொருள்
அவர் -அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்; தலைவியின் காதலர்/தலைவன்
தந்தார் - தருதல் - கொடை; கொடை அளித்தவர்
என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.
தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு.
தகையால் -குணத்தினால் ; தகுதியால் ' ஒப்பினால் ; பெருமையால்
இவர்தந்து - இவர் தந்து ;இவர் கொடுத்து
என் - என்
மேனி - நிறம்; வடிவம்; உடல்; அழகு; நன்னிலைமை; நிலத்தின்சராசரிவிளைச்சல்; காண்க:குப்பைமேனி.
மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.
ஊரும் - ஊர்-தல் - ūr- 4 v. [M. ūr.] intr. 1. Tomove slowly; to creep, as an infant; to crawl,as a snake; நகர்தல் நந்தூரும் புனனாட்டின் (பாரத.கிருட்டிண. 11). 2. To spread, circulate, as blood;to extend over a surface, as spots on the skin;பரவுதல். இவக்காணென் மேனி பசப்பூர் வது (குறள்,1185). 3. To flow, as juice from the sugar-cane; வடிதல் கரும்பூர்ந்த சாறுபோல் (நாலடி, 34).4. To come to close quarters; அடர்தல் வெஞ்சமமூர்ந்தம ருழக்கி (சிலப். 27, 27, அரும்.). 5. To beunloosed, relaxed; கழலுதல் அவிர்தொடி யிறையூர(கலித். 100). 6. To itch; தினவுறுதல். உடம்பெல்லாம் ஊருகின்றது.--tr. 1. To mount; ஏறுதல் பாசடும்பு பரியவூர் பிழிபு . . . வந்தன்று . . . தேர்(ஐங்குறு. 101). 2. To ride, as a horse; to drive,as a vehicle; ஏறிநடத்துதல். சிவிகை பொறுத்தானோடூர்ந்தானிடை (குறள், 37).
பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்.
காதலர் / தலைவன் பிரிந்து இருக்கும் பொழுது காதலி / தலைவி மீத பசலை என்னும் நோய் வந்து விடுகிறது. இந்த நோய் அவர்/காதலர் தந்தது. இந்த பசலை நோய் காதலர் தந்தது என்னும் பெருமையால் அல்லது குணத்தினால் அது தலைவி மேனி முழுவதும் விருப்பி படர்ந்துவிடுகிறது. அவர் தரும் எதுவாக இருந்தாலும் இந்த உடம்பு ஏற்றுக்கொள்ளும் அது நோயாக இருப்பினும்.
பி.கு: பொதுவாக நோய் என்பது ஒரு பாகத்தை மட்டும் தாக்கும். ஆனால் இந்த பசலை உடல் முழுவதும் படர்ந்து இவ்வுலகிற்கு என் மனவருத்தத்தை காட்டிவிடுகிறதே.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.) (யான் ஆற்றியுளேனாகவும்) பசப்பு - இப்பசப்புத்தான்; தந்தார் அவர் என்னும் தகையால் - என்னையுண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தான்; என் மேனிமேல் இவர்தந்து ஊரும் - என் மேனியை மேற்கொண்டு செலுத்தா நின்றது. ('குருதி கொப்புளிக்கும் வேலான் கூந்தன்மா இவர்ந்து செல்ல' (சீவக.விமலை.1) என்புழியும் இவர்தல் இப்பொருட்டாதல்அறிக. 'அஃது உரிமைபற்றி ஊர்கின்றது. இதற்கு நீ கவலல் வேண்டா' என்பதாம்.).
மணக்குடவர் உரை
காதலர் வரவிட்டாரென்னும் மிகுதியானே, பசப்பு என்னுடம்பின்மேலே பரந்து ஊரும். இஃது இப்பசலையை நீக்கவேண்டுமென்ற தோழிக்கு இஃது என் குறிப்பினாலே வந்ததல்ல: நீக்கவேண்டுவாயாயின் அவர்க்குச் சொல்லென்று கூறியது.
மு.வரதராசனார் உரை
அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.
சாலமன் பாப்பையா உரை
இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன.
No comments:
Post a Comment