மறைப்பேன்மன் யானிஃதோ நோயை

thirukkural meaning விளக்கம் காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல் குறள் 1161 மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்
குறள் 1161
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்
[காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்]

பொருள்
மறைப்பேன் - மறைதல் - ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல்.

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

யான் - தன்மையொருமைப்பெயர்

இஃதோ - இது; அஃறிணைஒருமைஅண்மைச்சுட்டு; இதுவோ

நோயை - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு

இறை - இறை - (வி)இறைத்துவிடு; தூவு எறி, வீசு தங்கு
இறை-த்தல் - iṟai-   11 v. tr. caus. of இறை&sup4;-.[K. eṟacu, M. iṟa.] 1. To splash, spatter,dash; நீரை வீசித்தெளித்தல். அவன்முகத்தில் நீரையிறைத்தான். 2. To scatter abroad, strew, castforth; சிதறுதல் பண்டங்களை யெல்லாம் இறைத்துவிட்டான். 3. To draw and pour out water,irrigate, bale out; நீர் பாய்ச்சுதல் இறைப்பவர்க்கூற்றுநீர் போல மிகும் (குறள், 1161). 4. To fill, asone's ears with strains of music; நிறைத்தல் வீணைய ரின்னிசை செவிதொறு மிறைப்ப (உபதேசகா.சிவபுண்ணிய. 318). 5. To lavish, squander; மிகுதியாகச் செலவிடுதல் பணத்தை வாரி யிறைக்கிறான். 

இறைப்பவர்க்கு - எறிபவர்கக்கு ; தூவுபவர்க்கு ; வீசுபவர்க்கு

ஊற்று -சுரக்கை; கசிவு; நீரூற்று; ஊன்றுகோல்; பற்றுக்கோடு, ஆதரவு.

ஊற்றுநீர் - ūṟṟu-nīr   n. id. +. Inflowingwater from a spring.

போல - போல - ஓர்உவமவுருபு

மிகும் -மிகுதல் -அதிகமாதல்; பெருகுதல்; மிஞ்சுதல்; பொங்குதல்; எழுத்துஅதிகரித்தல்; நெருங்குதல்; சிறத்தல்; ஒன்றின்மேம்படுதல்; செருக்கடைதல்; எஞ்சுதல்; தீமையாதல்.

முழுப்பொருள்
என்னைவிட்டு பிரிந்துள்ள காதலரையும் காதலையும் மறைக்கதான் முயற்சி செய்கிறேன். ஆனால் பிரிவென்னும் இந்த நோயினை நான் மறைப்பது என் காதலருக்கு ஏதுவாக தான் இருக்கிறது. ஏனெனில் அவர் நினைவுகளை ஞாபகங்களை மறைக்க மறைக்க அவர் நினைவுகள் ஊற்றுநீர் போல சுரந்துகொண்டே இருக்கிறது, என்னுள் அவர் வளர்ந்துகொண்டே இருக்கிறார். மறைத்து பலனில்லை. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது என்ற தோழிக்குச் சொல்லிது.) நோயை யான் மறைப்பேன் - இந்நோயைப் பிறரறிதல் நாணி யான் மறையா நின்றேன்; இஃதோ இறைப்பவர்க்கு ஊற்று நீர் போல மிகும் - நிற்பவும், இஃது அந்நாண்வரை நில்லாது நீர் வேண்டும் என்று இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுமாறு போல மிகாநின்றது. ('அம்மறைத்தலால் பயன் என்'? என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'இஃதோ செல்வர்க் கொத்தனென் யான்' என்புழிப் போல ஈண்டுச் சுட்டுப் பெயர் ஈறு திரிந்து நின்றது. 'இஃதோர் நோயை'என்று பாடம் ஓதுவாரும் உளர். அது பாடமன்மை அறிக. 'இனி அதற்கடுத்தது நீ செயல் வேண்டும' என்பதாம்.]

மணக்குடவர் உரை
இந்நோயை யான் மறைப்பேன்; மறைப்பவும் இஃது இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல மிகாநின்றது. தலைமகள் ஆற்றாமை கண்டு இதனை இவ்வாறு புலப்பட விடுத்தல் தகாதென்று தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.

சாலமன் பாப்பையா உரை
என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain