உருளாயம் ஓவாது கூறின்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், நட்பியல், சூது குறள் 933 உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும்
குறள் 933
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்
[பொருட்பால், நட்பியல், சூது]

பொருள்
உருள் -  தேருருளை; வண்டி உரோகினி; வட்டம்
(வி)புரள்; உருட்டு திரள் அழி

ஆயம்  - கமுக்கம்; தோழியர்கூட்டம்; வருத்தம் மேகம் மல்லரிப்பறை; 34அங்குலஆழமுள்ளகுழி; வருவாய் குடியிறை கடமை சூதுகருவி கவற்றிற்றாயம்; சூதாட்டம் பசுத்திரள்; நீளம் மக்கள்தொகுதி; பொன்

ஓவாது - ஓவுதல் - ஒழிதல், நீங்குதல்; நீக்குதல்; முடிதல்; ஓயாது

கூறின் - கூறினால்

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை

ஆயம் - கமுக்கம்; தோழியர்கூட்டம்; வருத்தம் மேகம் மல்லரிப்பறை; 34அங்குலஆழமுள்ளகுழி; வருவாய் குடியிறை கடமை சூதுகருவி கவற்றிற்றாயம்; சூதாட்டம் பசுத்திரள்; நீளம் மக்கள்தொகுதி; பொன்

ஒய் - oy   I v. i. pass away, depart, ஒழி; 2. escape, தப்பு; v. t. cause to go, செலுத்து; 2. give, கொடு; 3. wipe off போக்கு.

போஒய்ப் - சென்று

புறமே - புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்.

படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
சூதாட்டத்தில் பகடையை உருளுவார்கள். சூதாட்டத்தில் சில சமயங்களில் வருவாய் வரும். அந்த வருவாயை நம்பி அல்லது தான் ஒரு முறை (அல்லது ஒரு சில முறை) சூதாட்டத்தில் பெற்ற வருவாயை நம்பி அதனை சொல்லி சொல்லி அதிலேயே மூழ்கி சூதாடிக்கொண்டிருந்தால் தன்னிடம் இருக்கும் செல்வங்களெல்லாம் பிறரிடம் (பகைவரிடம்) சென்று விடும். அதாவது நாம் சூதில் எல்லாசெல்வத்தையும் இழந்துவிடுவோம். ஆதலால் சூதாடாதே.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”பொருளாயம் எய்துதற்குப் புகழ் குடந்தை அம்பலத்தே
உருளாய்ச் சூதாடி” (பெரிய.மூர்க்க.8)


பரிமேலழகர் உரை
உருள் ஆயம் ஓவாது கூறின் - உருளும் கவற்றின்கண் பட்ட ஆயத்தை இடைவிடாது கூறிச் சூதாடுமாயின்; பொருள் ஆயம் போஒய்ப் புறமே படும் - அரசன் ஈட்டிய பொருளும் அவன் பொருள் வருவாயும் அவனை விட்டுப்போய்ப் பகைவர் கண்ணே தங்கும். (கவற்றினது உருட்சியை அதனினாய ஆயத்தின்மேல் ஏற்றியும், சூதாடலை அது கூறலாகிய காரணத்தின்மேலிட்டும் கூறினார். பொருளாயம் என்பது உம்மைத்தொகை. ஆயம் - வடமொழித் திரிசொல், காத்தற்கண்ணும் இயற்றற் கண்ணும் கருத்திலனாகலின் அவை இரண்டும் பகைவர்பாற் செல்லும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
புரளும் கவற்றை இடைவிடாது எக்காலத்தும் கூறுவானாயின், பொருள்வரவு தன்னைவிட்டுப் போய்ப் பிறர்பாற் செல்லும்.

மு.வரதராசனார் உரை
ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.

சாலமன் பாப்பையா உரை
சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain