Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

நிறைநீர நீரவர் கேண்மை

குறள் 782
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு
[பொருட்பால், நட்பியல், நட்பு]

பொருள்
நிறை - பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டுதாக்குடையதாளவகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்துஅமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூஉக்குணம்நான்கனுள்காப்பனகாத்துக்கடிவனகடியும்திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால்

நீர  - nīra   s. (pl.) (நீர்மை) those which have properties, குணத்தையுடையன.
நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

நீரவர் - குணம் உடையவர்

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.

பிறை - இளஞ்சந்திரன்; மகளிர்தலையணிவகை; அபிநயவகை.

மதிப் - சந்திரன்; மாதம்; ஒன்றுஎன்னும்எண்ணைக்குறிக்கும்குழூஉக்குறி; இராசி; குபேரன்; இடைகலை; காண்க:மதிநாள்; மதிஞானம்; கற்கடகராசி; இயற்கையறிவு; பகுத்தறிவு; வேதத்தின்படிநடத்தல்; மதிப்பு; காசியபரின்மனைவி; அசோகமரம்; அதிமதுரம்; ஒருமுன்னிலையசைச்சொல்; ஒருபடர்க்கையசைச்சொல்; யானை.

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

நீர  - nīra   s. (pl.) (நீர்மை) those which have properties, குணத்தையுடையன.

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

பேதையார் - அறிவில்லாதவர்கள்

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

முழுப்பொருள்
நிறை என்றால் முழு நிறைவு கொண்ட என்று பொருளும் உண்டு. அதுபோல அறிவு என்ற பொருளும் உண்டு. அறிவென்பது நாளும் வளரும் தன்மை கொண்டது என்பதும் உண்மை. ஆதலால் பிறைநிலவு நாளும் வளர்ந்து முழுநிலவாகுவதை போல அறிவுடையவர்கள் கொள்ளும் நட்பானது உறவானது நாளும் வளரும். ஆனால் அறிவில்லாதவர்கள் கொள்ளும் நட்பானது நாளும் தேய்ந்து அமாவாசை போன்று ஆகி விடும்.

வளர்மதி, தளர்மதி இவற்றை உவமையாகக் கொண்ட இலக்கிய எடுத்துக்காட்டுகளும், காட்சிகளும் ஏராளம். கி.வா.ஜா-வின் ஆராய்ச்சி பதிப்பு இக்கருத்தையொட்டிய பலபாடல்களைக் எடுத்துக்காட்டினாலும், கீழ்கண்ட பாடல் குறள்கருத்தையொட்டியே உள்ளது.

“பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் – வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே

தானே சிறியார் தொடர்பு”

1) பெருகுதலுக்குப் பிறை உவமை
“குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்
வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றம்” (மதுரை 193-4)

“வளர்பிறை போல வழிவழிப் பெருகி” (குறுந்.289:1)

“ஆநாள் நிறைமதி யலர் தரு பக்கம்போல்
நாளின் நாளின் நளிவரைச் சிலம்புதொட்டு
நிலவுப் பரந்தாங்கு நீர்நிலம் பரப்பி” (பரி.11:31-3)

“சுடர்ப்பிறை போலப் பெருக்கம் வேண்டி” (பெருங் 2.6:35-6)

2) மதி குறைதல் குறைதலுக்கு உவமை
”குணமுதல் தோன்றிய ஆரிருள் மதியின்
தேய்வன கெடுகநின் தெவ்வர் ஆக்கம்” (மதுரைக் 195-6)

“மதி நிறைவுபோல் நிலையாது” (கலி.17:7)

“முறைமையின் தேயும் நிறைமதி நீர்மை
நண்பு” (பெருங்.1.46:309-10)

3) நீரவன் கேண்மை
”சான்றவர் கேண்மை சிதைவின்றாய் ஊன்றி
வலியாகிப் பின்னும் பயக்கும்” (ஐந்திணையெழுபது.5)

“ஒருபகல் பூசின் ஓராண் டொழிவின்றி விடாது நாறும்
பெரியவர் கேண்மை போலும் பெறற்கரும் வாசம்” (சீவக.2737)

“கொட்புறு கலினப் பாய்மா.. மேலோர்
நட்பினின் இடைய றாவாய்” (கம்ப.மிதிலைக் காட்சி.13)


4) பேதையார் நட்பு
“பின்இன்னா பேதையார் நட்பு” (பழமொழி 113)
“பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்
ஒருபொழுதும் சொல்லாதே நந்தும்....
பந்தமி லாளர் தொடர்பு” (நாலடி 234)

“சிறியார் கொண்ட தொடர்பில்
செல்லச் செல்ல அஃகும் நெறி” (சீவக.1416)

5) நீரவர் கேண்மையும் பேதையார் நட்பும்
”கனைகடல் தண்சேர்ப்ப கற்றறிந்தார் கேண்மை
நுனியில் கரும்புதின் றற்றே - நுனிநீக்கித்
தூரில்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரமி லாளர் தொடர்பு” (நாலடி 138)

“நளிகடல் தண்சேர்ப்ப நாள்நிழற் போல
விளியும் சிறீயவர் கேண்மை - விளிவின்றி
அல்கு நிழற்போல் அகன்றகன் றோடுமே
தொல்புக ழாளர் தொடர்பு” (நாலடி 166)

“உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா
சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை - நிலைதிரியா
நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்
ஒற்கமி லாளர் தொடர்பு” (நாலடி 204)

“கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ்ஞான்றும்
குருத்திற் கரும்புதின் றற்றே - குருத்திற்
கெதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ என்றும்
மதுரமி லாளர் தொடர்பு” (நாலடி 211)

6)முற்றும்
“பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு” (நாலடி 125)
மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நீரவர் கேண்மை பிறை நிறை நீர - அறிவுடையார் நட்புக்கள் பிறை நிறையும் தன்மைபோல நாள்தோறும் நிறையுந் தன்மையவாம்; பேதையார் நட்பு மதிப் பின் நீர - மற்றைப் பேதைமையுடையார் நட்புக்கள் நிறைந்த மதி பின் குறையுந் தன்மை போல நாள்தோறும் குறையுந்தன்மையவாம். '('நீரவர்' என்றார், இனிமை பற்றி. கேண்மை, நட்பு என்பன ஒரு பொருட்கிளவி. செய்தாரது பன்மையான் நட்பும் பலவாயின. அறிவுடையாரும் அறிவுடையாரும் செய்தன முன் சுருங்கிப் பின் பெருகற்கும், பேதையாரும் பேதையாரும் செய்தன முன் பெருகிப் பின் சுருங்கற்கும் காரணம் தம்முள் முன் அறியாமையும் பின்' அறிதலும் ஆம்.).

மணக்குடவர் உரை
பிறை நிறையும் நீர்மைபோல, ஒருநாளைக் கொருநாள் வளரும் அறிவுடையார்.

மு.வரதராசனார் உரை
அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

சாலமன் பாப்பையா உரை
பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.


Thirukkural - Management - Relationship
Valluvar, through Kural 782, uses moon as a simile to differentiate the types of relationships. The relationship with a learned, educated,  and wise person grows like a waxing moon. On the contrary, the relationship with a person who is not learned, educated, and unwise diminishes like a waning moon.

Wise men's friendship waxes tile the crescent
And fools,’ like the fullmoon, wanes.

There is a connection between a person's level of knowledge and the quality of his relationships with others. Knowledge of the importance and methods of relationships leads to relationships that last longer. 

No comments:

Post a Comment