Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்

குறள் 732
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு
[பொருட்பால், அரணியல், நாடு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பெரும் - பெரிதான; மூத்த; இன்றியமையாத, பெருமை

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

பெட்டல் - விருப்பம்

பெட்டக்கது - பெட்டகம் - பெட்டி; வரிசைப்பெட்டி.

ஆகி - கொண்ட, ஆகுதல், ஆதல்.

பெட்டக்கது ஆகி   எல்லோராலும் (அயல் நாட்டினராலும்) விரும்பத்தக்கதாகி (பெட்டல் – விரும்புதல்)

கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.

அருங்கேட்டால் - பெரிய கேடுகள் இல்லாமல் ; கேடில்லாமை

ஆற்ற āṟṟa   adv. ஆற்று¹-. 1. Greatly, exceedingly; மிக அவனறி வாற்ற வறியு மாகலின்(தொல். பொ 147). 2. Entirely; முற்ற (குறள், 367.)  

விளைவது - விளைதல் - தானியம்முதலியனஉற்பத்தியாதல்; பயன்தருதல்; உண்டாதல்; முதிர்தல்; நிகழ்தல். 

நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

முழுப்பொருள்
செல்வங்களான அறிவு பொன் படை இயற்கை வளங்களான நீர்வளம் காடு  மக்கட் செல்வங்கள் (இன்னும் பல) என எல்லா செல்வங்களும் அதிகமாக இருக்கப்பெற்று மற்ற நாட்டவர்களும் நம்மை விரும்பும் படி (அதாவது நமது செல்வத்தின் மீதும் நமது நாட்டின் மீதும் நன்மதிப்பு கொண்டு நம் நாட்டிலேயே தங்கி விட வேண்டும் என்று வருவது) நம் நாட்டை உருவாக்க வேண்டும். அத்தகைய நாட்டில் வறுமை அழிவு கீழ்மை வேறுபாடுகள் கெடுதல்கள் அழகில்லாத செயல்கள் என்ற கேடுகள் முற்றிலும் நடக்காத அல்லது மிக அரிதாக நடைபெறக்கூடியதாக இருக்க வேண்டும். அந்நாட்டில் நாட்டிற்கு தேவையான தானியங்களை செழிப்பாக விளைவித்துக்கொள்ளும் திறனையும் விவசாயிகளையும் வளர்த்தெடுக்க வேண்டும். அவ்வாறு செய்து தானியங்களை விளைவிக்க வேண்டும். அந்த தானியங்கள் பஞ்சகாலத்திலும் மக்களுக்கு உதவக்கூடியதாக இருக்க வேண்டும். 

ஆக எல்லா செல்வங்களும் அதிகமாய் கொண்ட நாடாக கேடுகள் மிக அரிதாக நடக்கும் அல்லது கேடுகள் நடக்காத நாடாக அன்றாட உணவுதேவைக்கும் பஞ்சகாலத்தை தாக்குபிடிக்ககூடிய அளவிற்கு தானியங்களை செழிப்பாக விளைவித்துக்கொள்ளும் நாடாக அயல் நாட்டவர்கள் நம் நாட்டை விரும்பக்கூடிய நாடாக இருக்கும் நாடே நாடு எனப்படும். 

அமெரிக்கா போன்ற நாடுகள் செல்வங்கள் பல கொண்டாலும் அவற்றை நாடு என்று கூறி விட முடியாது ஏனெனில் அவை உலகிற்கு அளித்த கொடை என்பது மிக சில என்றே சொல்லலாம் அதுவும் அவர்களின் லாபத்திற்கு தான் கொடுத்தார்கள். வரலாற்றில் அவர்கள் கொன்றுகுவித்த மக்களின் எண்ணிக்கை போர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். அவர்கள் கைகளில் உள்ள ரத்த கறைகளை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அழிக்க முடியாது. 

ஆனால் இந்தியா போன்ற ஒரு நாடு எல்லோரும் விரும்பக்கூடிய நாடாக வளர்ந்துவிடும். ஏனெனில் இந்தியா நான்கு நூற்றாண்டுகளில் இழந்த செல்வங்களை மீட்க இன்னும் சில காலம் ஆகும். ஆனால் வேதங்கள், உபநிடதங்கள், தமிழில் திருக்குறள் தேவாரம், திருவாசகம், பதஞ்சலி யோகா முறைகள், தியானம் என்று உலகிற்கு கொடுத்து கொடை மிக ஏராளம். பல வேற்றுமைகள் கொன்ற இந்தியா போன்ற ஒரு நாடு காலத்தின் பல மாற்றங்களையும் கண்ட போதிலும் மிக மிக குறைந்த உயிர் சேதங்களையே சந்தித்துள்ளது. உலகிற்கு அஹிம்சை முறையின் வலிமை பறைசாற்றியது. ஆதலால் தான் Martin  Luther  King, Steve Jobs, George Harrison போன்ற பொருளாதாரத்தில் முன்னிலையில் இருக்கும் பல நாடுகளில் இருந்து  இந்தியா வந்து  அல்லது இந்திய துறவிகளிடமும் தலைவர்களிடமும் இருந்து கற்றுக்கொண்டுள்ளனர். அமெரிக்கா போன்ற முன்னேறிய வல்லரசு நாட்டில் கருப்பினர்கள் அவர்களுக்கான உரிமைகளை போராடும் நிலை இன்னமும் உள்ளது. பல முன்னேறிய நாடுகளில் மிக பெரிய பொருட்ச்செலவில் பெரிய காவல் துறையை குற்றங்களின் விகிதாச்சாரம் மிக அதிகமாக இன்றும் உள்ளது. ஆனால் இந்திய போன்ற நாட்டில் குற்றங்களில் விகிதாச்சாரம் ஒப்பீட்டு அளவில் குறைவே. ஆனால் ஒரு நாடாக இந்தியா செல்லவேண்டிய தொலைவும் மிக அதிகம் என்பதும் உண்மை. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி - அளவிறந்த பொருளுடைமையால் பிற தேயத்தாரானும் விரும்பத்தக்கதாய்; அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு - கேடின்மையோடுகூடி மிகவிளைவதே நாடாவது. (அளவிறப்பு, பொருள்களது பன்மைமேலும் தனித்தனி அவற்றின் மிகுதி மேலும் நின்றது. கேடாவது, மிக்க பெயல், பெயலின்மை, எலி, விட்டில், கிளி, அரசண்மை என்றிவற்றான் வருவது. 'மிக்க பெயலோடு பெயலின்மை எலி விட்டில் கிளி அக்கண் அரசண்மையோடு ஆறு'. இவற்றை வடநூலார் 'ஈதிவாதைகள'¢என்ப. இவற்றுள் முன்னையவற்றது இன்மை அரசன் அறத்தானும், பின்னையது இன்மை அவன் மறத்தானும் வரும். இவ்வின்மைகளான் மிகவிளைவதாயிற்று.) .

மணக்குடவர் உரை
பெரும்பொருளாலே விரும்பத்தக்கதாகிக் கேடரிதாதலோடே மிகவும் விளைவது நாடு. பெரும்பொருள்- நெல்லு. கேடாவது விட்டில், கிளி, நால்வாய், பெரும் புயலென் றிவற்றான் வரும்நட்டம்.

மு.வரதராசனார் உரை
மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

சாலமன் பாப்பையா உரை
மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.


English Meaning - As I taught a kid - Rajesh
A country should be 
1) Desirable due to its huge wealth by its citizens as well as foreigners 
Wealth here means the wealth generated due to their knowledge, production, agricultural produce, trade, etc., as well as natural resources mountains, forests, coastal resources, dams, rivers, animals, birds,  as well as in terms of knowledge w.r.t any field such as science, mathematics, medicine, pharma, arts, music, literature, philosophy etc., And this wealth is sufficient enough to eradicate hunger, poverty, as well as manage critical times such as pandemic, natural calamites such as heavy rain, droughts etc. 

2) Devoid of detriments
Detriments here mean heavy rain, scorching sun/summer, crime, poverty, poor governance, bribes, red tapes, inequality, injustice, dangerous animals and birds, etc., For e.g., countries such as USA, United Kingdom might be very wealth however, they have lots of blood stains in their hands which can never be removed because they have indulged in lots of wars, atom bombs, looting foreign resources/labor etc.,   Whereas countries like India despite being looted has bounced back strongly and has involved very very less collateral damage (and India has given abundance of knowledge, man power, yoga, Ayurveda, meditative techniques, non-violence movements to rest of the world) 

Questions that I ask to the kid
How should a country be?

No comments:

Post a Comment