Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

கூறாமை நோக்கக் குறிப்பறிவான்

குறள் 701
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி
[பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல்.

கூறாமை - சொல்லாமல் இருத்தல்; விளக்கு சொல்லாமல் குறிப்பால் உணர்த்துவது 

நோக்கக் - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

குறிப்பு - அறிகுறி; உட்கருத்து; மனத்தால் உணரப்படுவது; ஒன்பது வகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை; மன ஒருமை; குறிப்புக்குறி; சைகை; கூரியஅறிவு; சுருக்கம்; ஓசை; நிறம் முதலிய பொருளைக்குறிப்பது; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ்சொல்; அடையாளம்; கைக்குறிப்பு; ஏடு; சாதகம்; சிறப்பியல்பு; இலக்கு.

அறிவான் - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

குறிப்பறிவான்  - வெளிப்படையாக சொல்லப்படாதா குறிப்புகளை அறிந்து உணரும் அமைச்சர்

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.

மாறாநீர் - māṟā-nīr   n. id. + ஆ neg. +.Sea, ocean; கடல். மாறாநீர் வையக் கணி (குறள்,707, மணக்.).

வையக்கு  - வையகம் ; பூமி ; உலகம்

அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு.

முழுப்பொருள் 
ஒரு அரசர் என்பவர் எல்லாவற்றையும் வெளிப்படையாக கூற மாட்டார். குறிப்பாக வருத்தங்களை அதிப்ருத்திகளை. சில பல சமயங்களில் தனது எண்ணங்களை பொது இடத்திலோ அல்லது அயலவர் முன்னோ  வெளிப்படையாக அமைச்சரிடம் கூறவும் முடியாது கூறவும் கூடாது. ஆதலால் அமைச்சர் என்பவர் மன்னர் கூறாமல் குறிப்பால் உணர்த்தியவற்றை குறிப்பின் கருத்து உணர்ந்து அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும். அவ்வாறு குறிப்பறிந்து செயல்களில் செவ்வெண செய்யும் அமைச்சர் என்பவர் என்றும் வற்றாதகடல் உலகிற்கு அணிகலன் போன்று நாட்டிற்கு அணிகலன் ஆவார்.

அணிகலன் என்றால் அதை நேரடியாக கூறிவிடலாம் திருவள்ளுவர். ஆனால் ஏன் மாறாநீர் வையக்கு அணி என்று கூற வேண்டும்? ஏனெனில் இக்கடல் ஆனது இவ்வுலகத்தில் நாம் சுவாசிக்கும் காற்றில் (oxygen)  பாதிக்கும் மேலாக கொடுக்கிறது. நமது ஆகாசம் இழுத்துக்கொள்ளும் carbondioxide'ன் பங்கை விட 50 மடங்கு பங்கினை கடலானது இழுத்துக்கொள்ளும். ஆனால் பொதுவாக கடலை பார்ப்போருக்கு இது தெரியாது. அது தன வேலையை அமைதியாக செய்யும். ஆதலால் கடல் என்பது இவ்வுலகிற்கு ஒரு அணிகலன். அது போல அமைதியாக அரசரின் குறிப்பு அறிந்து நடக்கும் அமைச்சர் அந்த நாட்டிற்கு ஒரு அணிகலன் ஆவார்


“சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பு”
என்பது பழமொழி (255).

கம்பராமாயணக் காட்சியொன்று, திருவடி தொழுத படலத்தில் வருவது. அனுமான் இலங்கையிலிருந்து வந்ததும் செய்தியைச் சொல்லி, தென்னிலங்கை திசை நோக்கித் தொழுததால், சீதையின் கற்புநெறியையும் குறிப்பால் இராமன் உணர்ந்ததை இப்பாடல் சொல்கிறது.

திண்திறல் அவன் செயல் தெரிய நோக்கினான்;’
வண்டு உறை ஓதியும் வலியள்; மற்று இவன்
கண்டதும் உண்டு;அவள் கற்பும் நன்று’ எனக்
கொண்டனன்,குறிப்பினால் உணரும் கொள்கையான். (கம்ப.திருவடிதொழுக.56)

இராமன் குறிப்பால் உணர்ந்தாலும், குறிப்பால் உணர்த்தியது அனுமனே அன்றோ?

ஔவையும் மூதூரையில், “அவைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவன் நல் மரம்” என்பார்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
குறிப்பு கூறாமை நோக்கி அறிவான் - அரசனால் குறித்த கருமத்தை அவன் கூறவேண்டா வகை அவன் முகத்தானும் கண்ணானும் நோக்கி அறியும் அமைச்சன்; எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி - எஞ்ஞான்றும் வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம். (ஒட்பமுடையனாய் எல்லார்க்கும் அழகுசெய்தலான், 'வையக்கு அணி' என்றார். குறிப்பும் வையமும் ஆகுபெயர். வையத்திற்கு என்பது விகாரப்பட்டு நின்றது.).

மணக்குடவர் உரை
ரசன் மனநிகழ்ச்சியை அவன் கூறுவதன்முன்னே நோக்கி அறியுமவன், எல்லா நாளும் மாறாநீர் சூழ்ந்த வையத்துக்கு அணிகலனாவான். இது மக்களிற் சிறப்புடையனா மென்றது.

மு.வரதராசனார் உரை
ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவன் மனக்கருத்தை அறிந்து கொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் வளைக்கப்பட்ட இவ்வுலகத்தவர்க்கு ஆபரணம் போன்றவன்.


Thirukkural - Management - Managing Emotions
A person who can read and interpret the meanings of facial expressions and feelings in others' eyes by being sensitive to their needs and their thoughts is always an asset to an organization and a jewel in this world. He does that without being told by others, as he is highly sensitive to the needs of others. Face reading  is a fair reading to get the emotions of others. Kural 701 appreciates this skill.

He is a jewel on this sea-girt earth
Who can read a thought without being told.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who can read and interpret the meanings of facial expressions and feelings in other's eyes by being sensitive, empathetic, conscious of their needs and thoughts is always an asset to an organization/family and is a jewel in this world. Because 
1) other person may not say everything explicitly or may hide something due diplomacy or to avoid uncomfortable situation
2) other person may avoid saying certain things in front of others

Thiruvalluvar uses the metaphor Ocean here. He refers Ocean has a jewel. Because, many Ocean provides more than 50% of the oxygen that the earth breathes. Ocean absorbs more Carbon dioxide than the sky/atmosphere. Ocean does all these things silently. Hence, when we see an Ocean, we can't observe all these things.  Similarly a  person has to silent observe the untold signals and take appropriate action. 

Questions that I ask to the kid
Untold feelings, expressions, signals. How should they be handled? 
Follow up: Why a metaphor Ocean is used?

No comments:

Post a Comment