போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்

thirukkural meaning விளக்கம் குறள் 693 போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது பொருட்பால், அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறள் 693
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது
[பொருட்பால்,  அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்]

பொருள் 
போற்றின் - வணங்குதல்; துதித்தல்; பாதுகாத்தல்; வளர்த்தல்; பரிகரித்தல்; கடைப்பிடித்தல்; உபசரித்தல்; விரும்புதல்; கருதுதல்; மனத்துக்கொள்ளுதல்; கூட்டுதல்.

அரியவை - அரிது - அரியது, அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

போற்றல் - pōṟṟl   v. noun. Cherishing, prais ing, adoring, maintaining, &c.

கடு - கடுக்காய்மரம்; கசப்பு; நஞ்சு; முள்; கார்ப்பு; துவர்ப்பு; முதலை; பாம்பு.

கடுத்த - கடுப்பு, v. n. pains, throbbing; 2. anger, 3. spead, impetuosity. ;  6. A contraction of கடுமை;

பின் - பின்பு , பிற்பாடு

தேற்றுதல் - தெளிவித்தல்; தெளிந்தறிதல்; சூளுறுதல்; ஆற்றுதல்; தேறுதல்கூறுதல்; தூய்மைசெய்தல்; குணமாக்குதல்; பலமுண்டாக்குதல்; ஊக்கப்படுத்துதல்.

யார்க்கும் - அனைவருக்கும்

அரிது - கடுமையான ஒன்று

முழுப்பொருள் 
ஒரு அமைச்சர் (அல்லது ஒரு குழுவில் ஊழியர்) தனது அரசரிடம் (அல்லது தனது மேலாளரிடம்) தனது பணியில் எப்படி இருக்கவேண்டும் என்றால்? அவ்வமைச்சர் தன் செயல்களில் முழுகவனுத்துடன் இருந்துக்கொண்டு தன்னுடைய பொறுப்பில் கட்டிக்காக்க வேண்டிய எல்லாவற்றையும் பாதுகாக்க வேண்டும். அதுவும் அரிதாக கிடைக்க கூடியவற்றை அரும்பாடு பட்டு ஈன்ற செல்வத்தை கட்டிக்காக்க வேண்டும். அவ்வாறு காக்காமல் செயல்களில் ஏதாவது தவிர்க்கக்கூடிய பிழை நடந்தால் பின்பு அந்த அமைச்சரை அரசரின் கோபத்தில் இருந்து அரசரின் நடவடிக்கையில் இருந்து காப்பாற்றுவது யாராலும் முடியாத அரிய கடினமான செயலாகிவிடும். ஏனெனில் மன்னருக்கு அதனை அவ்வளவு எளிதாக விளக்கி தப்பித்து விட  முடியாது.தவறு எனில் தவறு. அதற்கு முழு பொறுப்பு அச்செயலை செய்த அமைச்சர்.

இதுவே ஒரு அலுவலகமாக இருந்தால் மேலாளாலர் தன் கீழ் இருக்கும் ஊழியரை  தவிர்க்கக்கூடிய பிழை செய்தால் வேலையில் இருந்து தூக்கிவிடுவார்.

ஆதலால் தன் வேலையில்  பொறுப்புடன் இருந்து கட்டிக்காக்கக்க வேண்டும். பிழை நேராமல் தவறு செய்யாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.  செய்யும் செயலில் சுத்தம் வேண்டும். அவ்வாறு இருந்தால் மன்னருடன் நன்கு சேர்ந்தொழுக முடியும். அதுபோல் அலுவலகத்தில் மேலாளரிடம் நன்கு சேர்ந்தொழுக முடியும்

நாலடியார் 161 பாடலொன்று, இவ்வாறு செல்கிறது.

பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும் – வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட
பேர்க்குதல் யார்க்கும் அரிது.

பொறுப்பார்க்கே வெறுப்பன செய்யாதிருக்கவேண்டுமெனின், அரசன் அவ்வாறு பொறுமையைக் கடைபிடிப்பான் என்றிராதபோது, ஐயம் வந்துற்றாலே, தவறே நடக்கவில்லையென்றாலும், அரசனின் அவ்வையத்தை தீர்ப்பது யாருக்குமே அரிது.


“நீர்த்தன் றொருவர் நெறியன்றிக் கொண்டக்கால்
பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே” (பழமொழி.195)

மேலும் அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
போற்றின் அரியவை போற்றல் - அமைச்சர் தம்மைக் காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வாராமல் காக்க; கடுத்த பின் தேற்றுதல் யார்க்கும் அரிது - அவற்றை வந்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஐயுற்றால் அவரைப் பின் தௌ¤வித்தல் யாவர்க்கும் அரிது ஆகலான். (அரிய பிழைகளாவன: அவரால் பொறுத்தற்கு அரிய அறைபோதல், உரிமையொடு மருவல், அரும்பொருள் வெளவல் என்றிவை முதலாயின. அவற்றைக் காத்தலாவது, ஒருவன் சொல்லியக்கால் தகுமோ என்று ஐயுறாது தகாது என்றே அவர் துணிய ஒழுகல். ஒருவாற்றான் தௌ¤வித்தாலும் கடன்கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறுபோலக் கண்டுழியெல்லாம் அவை நினைக்கப்படுதலின் யார்க்கும் அரிதென்றார். இவை மூன்று பாட்டானும் அது பொதுவகையால் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
காப்பின், காத்தற்கு அரியனவற்றைக் காப்பாற்றுக: ஐயப்பட்ட பின்பு தௌ¤வித்தல் யாவர்க்கும் அரிது. இஃது அடுத்தொன்று சொல்லாம லொழுகவேண்டும்மென்றது.

மு.வரதராசனார் உரை
(அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.

சாலமன் பாப்பையா உரை
ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதினால் மோசமான பிழைகள் தம் பங்கில் நேர்ந்து விடாமல் காக்க; பிழைகள் நேர்ந்துவிட்டதாக ஆட்சியாளர் சந்தேகப் பட்டுவிட்டால் அவரைத் தெளிவிப்பது எவர்க்கும் கடினம்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain