Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பொருளானாம் எல்லாம்என்று ஈயாது

குறள் 1002
பொருளானாம் எல்லாம்என்று ஈயாது இவறும்
மருளானா மாணாப் பிறப்பு
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]

பொருள் 
பொருள் சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

ஆன் - āṉ   part. 1. An instr. ending,as in மண்ணானியன்ற குடம் மூன்றனுருபு. (தொல்சொல். 75, உரை ) 2. Ending common to nounsand verbs of the 3rd pers. masc. sing.; ஆண்பாற் பெயர்வினைகளின் விகுதி ஊரான், வந்தான். 3.An euphonic increment, used with a modification of பத்து `ten', as in இருபான் ஒரு சாரியை (நன். 244.)  ; பெற்றம், எருமை, மரைஇவற்றின்பெண்; காளை அவ்விடம் மூன்றனுருபு; ஆண்பாற்பெயர்வினைகளின்விகுதிஒருசாரியை

பொருளான்  - பொருளினால் எல்லாம் நடக்கும் என்று எண்ணுகிறவன்

ஆம் - ām   part. 1. A connecting increment between the parts of a compoundword; சாரியை மண்ணாங்கட்டி (நன். 244, உரை).2. An expletive; அசைநிலை பணியுமா மென்றும்பெருமை (குறள், 978). 3. V. term.: (a) 1st pers.pl., as in வந்தாம்; தன்மைப்பன்மை விகுதி (b) 1stpers. pl. including the person or persons spokento; உளப்பாட்டுத் தன்மைப்பன்மை விகுதி யாமும்நீயும் செல்வாம்.  ; நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

எல்லாம் - முழுதும்

என்று - என்று

ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

ஈயாது -ஈதல் செய்யாது, பிறருக்கு உதவி செய்யாது

இவறும் - இவறுதல் - ஆசையுறல்; விரும்புதல் மறத்தல் மிகுதல் உலாவுதல் கைவிடாதிருத்தல்; வேண்டும்வழிப்பொருள்கொடாமை.

மருள் - மயக்கம்; திரிபுணர்ச்சி; வியப்பு; உன்மத்தம்; கள்; குறிஞ்சியாழ்த்திறம்எட்டனுள்ஒன்று; பண்வகை; எச்சம்எட்டனுள்பிறவிமுதல்அறிவின்றிமயங்கியிருக்கும்நிலை; சிறுசெடிவகை; புதர்; பேய்; ஆவேசம்; புல்லுரு.

மருளான் - மயக்கத்தில் உள்ளவர்

ஆம் -  ām   part. 1. A connecting increment between the parts of a compoundword; சாரியை மண்ணாங்கட்டி (நன். 244, உரை).2. An expletive; அசைநிலை பணியுமா மென்றும்பெருமை (குறள், 978). 3. V. term.: (a) 1st pers.pl., as in வந்தாம்; தன்மைப்பன்மை விகுதி (b) 1stpers. pl. including the person or persons spokento; உளப்பாட்டுத் தன்மைப்பன்மை விகுதி யாமும்நீயும் செல்வாம்.  ; நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

மாண் - மாட்சிமை; மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர்.

மாணாப் - மாட்சிமை இல்லாத

பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

முழுப்பொருள்
செல்வம் / பொருள் / பணம் தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கும் என்று செல்வதை ஈட்டுவது அதனை பேணுவதே எல்லாம் என்று இறுமாந்து பிறருக்கு உதவி என்று எதுவும் செய்யாது தன் செல்வதை பிறருக்கு பகிர்ந்தளிக்காமால் தன் செல்வதை இறுக பற்றிக்கொண்டு இருக்கின்றவர் பண மயக்கத்தில் உள்ள (பேய் போன்றவர்) மாட்சிமை இல்லாதவர். இவர் பிறப்பு என்றும் நிறை (முழுமை) அடையாத பிறப்பாகும் என்கிறார் திருவள்ளுவர். இறுகப் பற்றி செல்வத்தைப் பூட்டி வைக்கும் அறிவு மயக்கத்தில் உள்ளோர்க்கு மீண்டும் கருவறையில் உழண்டு பிறக்கும் விதியுண்டு அதுவும் மாட்சிமை இல்லாத ஈனப் பிறவியே என்கிறது இக்குறள்.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பொருளான் எல்லாம் ஆம் என்று - பொருளொன்றும் உண்டாக அதனால் எல்லாம் உண்டாம் என்றறிந்து அதனை ஈட்டி; ஈயாது இவறும் மருளான் - பின் பிறர்க்கு ஈயாது பற்றுள்ளம் செய்யும் மயக்கத்தாலே; மாணாப் பிறப்பு ஆம் - ஒருவனுக்கு நிறைதலில்லாத பேய்ப்பிறப்பு உண்டாம். (இருமையினும் எய்தும் இன்பங்கள் பலவும் அடங்க 'எல்லாம்' என்றும், ஈட்டுதற்கு முன் உண்டாய அறிவு பின் மயங்குதலின், 'மருள்' என்றும், பொருளுண்டாயிருக்கப் பிறர் பசி கண்டிருந்த தீவினைபற்றி உணவுகள் உளவாயிருக்கப் பசித்து வருந்தும் பிறப்பு உளதாம் என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
பொருளினாலே யெல்லாச்சிறப்பும் எய்தலாமென்று பிறர்க்கு யாதொன்றும் ஈயாது உலோபஞ் செய்கின்ற மயக்கத்தினாலே மாட்சிமையில்லாத பிறப்பு உண்டாம். இது தீக்கதியுள் உய்க்குமென்றது.

மு.வரதராசனார் உரை
பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.

சாலமன் பாப்பையா உரை
பொருளால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று எண்ணி அதைத் தேடிய பின் தானும் அனுபவிக்காமல், பிறர் தேவைக்கும் அதைத் தராமல் கஞ்சனாக வாழ்பவனின் மயக்கத்தால் அவனுக்கு முழுமையற்ற பேய்ப்பிறப்பு உண்டாகும்.

No comments:

Post a Comment