குறள் 201
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
தீவினை - பாவம்; கொடுஞ்செயல்; அக்கினிகாரியம்; தீவழிபாடு.
தீவினையார் - தீவினைகளில் திளைப்பவர்கள்;
அஞ்சார் - அஞ்ச மாட்டார்கள்
விழு - viḻu adj. விழு¹-. 1. cf. vara.Excellent; sublime; சிறந்த. விழுப்பேற்றி னஃதொப்ப தில்லை (குறள், 162). 2. Distressing,grievous; துன்பமான. (சீவக. 2355.)
விழுமியோர் - viḻumiyōr n. id. Excellent persons; சிறந்தோர். வானகங் கையுறினும்வேண்டார் விழுமியோர் (நாலடி, 300).
விழுமியார் - சிறந்த குணம் உடையோர்
அஞ்சுதல் - பயப்படுதல்.
அஞ்சுவர் - பயப்படுவார்கள்
தீவினை - பாவம்; கொடுஞ்செயல்; அக்கினிகாரியம்; தீவழிபாடு.
என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.
செருக்கு - cerukku s. pride, vanity, haughtiness, arrogance, self-impartance, அகங்கா ரம்; 2. exultation, excessive joy, களிப்பு; 3. ostentation, இடம்பம்; 4. mettle, intrepidity, rashness, ஆண்மை; 5. infatuation, illusion, மருள், மயக்கம், 6. aspiration, high hope, மனோராச்சியம்.
முழுப்பொருள்
தீவினை என்பது பாவச்செயல், கொடுஞ்செயல். அதனை செய்வது தீவழிபாடு ஆகும். அதன் ஊற்றுக்கண் என்பது செருக்கு. அதாவது அகங்காரம் ஆகும். நான் என்னும் அகங்காரம். நம்மை யாரும் எதுவும் கேட்க முடியாது, நாம் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை என்ற அகங்காரம் ஆகும்.
அத்தகைய அகங்காரத்தையும் தீவினைகளையும் கண்டு அதனை செய்யவும் அஞ்சுவார்கள் உயர்ந்த பண்புகளையும் மாண்புகளையும் உடைய சான்றோர்களும் பெரியோர்களும். ஆனால் தீவினை செய்பவர்கள் தீவினையை கண்டு அஞ்சமாட்டார்கள்.
தீவினைகளை அஞ்சுவதால் அவர்கள் அகங்காரம் தன்னை அண்ட விடாமால், தீவினை செய்யாமல் உயர்கிறார்கள். அதனாலே அவர்கள் விழுமியார்.

பரிமேலழகர் உரை
[அஃதாவது, பாவங்களாயின செய்தற்கு அஞ்சுதல். இதனான் மெய்யின்கண் நிகழும் பாவங்கள் எல்லாம் தொகுத்து விளக்குகின்றார் ஆகலின்.இது பயன்இல சொல்லாமையின்பின் வைக்கப்பட்டது.)
தீவினை என்னும் செருக்கு - தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் - முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் - அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர். ('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்து அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.).
மணக்குடவர் உரை
என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர், தீவினையாகிய களிப்பை. இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.
மு.வரதராசனார் உரை
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
சாலமன் பாப்பையா உரை
தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.
English Meaning - As I taught a kid - Rajesh
Bad work/activities or terrible things are considered as Sin. The root of bad activities is EGO. Self ego makes us such that no one can question us as one thinks that we don't have to respond to anyone. Hence, such people whon't be afraid of bad activities.
Hence, the one who is scared of bad activities will focus on doing good things and build good character. They are considered as scholarly people
Questions that I ask to the kid
Root of Bad activities is EGO. Who is afraid of it? Who is not afraid of it? What does people who are afraid of this EGO/bad activities do?
No comments:
Post a Comment