குறள் 172
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்
[அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை]
பொருள்
வெஃகாமை - அவாவின்மை, வெறுப்பு, பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாமை
படு - கள்; மரத்தின்குலை; குளம்; மடு; மருதயாழ்த்திறத்துள்ஒன்று; உப்பு; பெரிய; கொடிய; இழிவான; கெட்டிக்காரன்; பேரறிவு; நன்மை.
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்
வெஃகி
வெஃகல் - veḵkal n. வெஃகு-. 1. Excessivedesire; மிகுவிருப்பம். (பிங்.) 2. Avarice, greed;பேராசை. (சது.
வெஃகுதல் - மிகவிரும்புதல்; பிறர்பொருளைஇச்சித்தல்.
பழிப்படுவ
பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.
படு - (வி)படுத்துக்கொள்; விழு; கள்; மரத்தின்குலை; குளம்; மடு; மருதயாழ்த்திறத்துள்ஒன்று; உப்பு; பெரிய; கொடிய; இழிவான; கெட்டிக்காரன்; பேரறிவு; நன்மை.
பழிப்படுவ - பழி விழும்
செய்யார்- காரியம் செய்ய மாட்டார்கள்
நடுவு - naṭuvu n. id. [T. naḍumu. K.naḍuvu.] 1. Middle, that which is intermediate; இடை 2. Impartiality, uprightness; நடுவுநிலைமை நன்பல் லூழி நடுவுநின் றொழுக (பதிற்றுப்.89, 8). 3. Justice; நீதி (W.) 4. Loins or waist,especially of a woman; மாதரிடை. நடுவு துய்யன(கம்பரா. நகரப். 31).
அன்மை - aṉmai n. அல்-மை. 1. Reciprocal negation or difference, negation ofidentity, dist. fr. இன்மை அல்லாமை (தொல்.சொல். 25.) 2. Evil; தீமை அன்மை கடியுந் தவவலியால் (சேதுபு. முத்தீர். 8).
நாணுபவர் - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்
முழுப்பொருள்
படுபயன் என்றால் பெரிய பயன், பெரிய செல்வம். வெஃகி என்றால் பேராசைக் கொள்ளுதல் - அளவுக்கு மேலான ஆசை. ஆக எவன் ஒருவன் மிக பெரிய ஒரு செல்வத்தின் மீது ஆசைக்கொண்டு அறம் (நடுவுநிலைமை) தவறி தவறான வழியில் சென்று அப்பொருளை அடைய வேண்டும் என்று அதற்கான அறமற்ற செயல்களை செய்கிறானோ அவன் மீது பழி (குற்றம்) வந்து விழும். அதனை அவன் சுமந்தாக வேண்டும்.
ஆதலால் நடுவுநிலைமை தவறுவதால், தவறான வழியில் செல்லுவதால், செய்யக்கூடாதச் செயல்களைச் செய்வதால் வரும் பழிப் பாவங்களுக்கு அஞ்சுபவர், நாணுபவர் பெரியப் பயன்கள் (பேராசைகளுக்கு) மீது பேராசை கொண்டு தவறான செயல்களை செய்யாமாட்டார்கள்.
’உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்று சொல்லும் திருவள்ளுவர் ஆசைக்கொள்வதை தவறு என்று சொல்ல மாட்டார். ஆனால் பேராசை கொள்வதே தவறு என்கிறார். உயர்வான எண்ணங்கள் இருக்கலாம். அதற்கான நேர்மையான உழைப்பு இருக்க வேண்டும். நேர்மையான செயல்கள் மூலம் அதனை அறுவடை செய்யவேண்டும்.
இங்கே மற்றொன்று காண வேண்டும். ”வெஃகிப் பழிப்படுவ” என்று சொல்கிறார். பேராசையே தவறு செய்ய தூண்டுகிறது என்று பொருள். ஆதலால் பேராசை தனை அறுக்க வேண்டும்
மேலும்:
பிறர்குரிய பொருளைக் கவர்வதற்கும், நடுவு நிலைமைக்கும் என்ன தொடர்பு? வள்ளுவரைப் படிக்கும் போது, பல்வேறு குணநலன்களையும், குணக்குற்றங்களையும் அவற்றிற்கு இணையான செயல்களோடு பொருத்தி, செய்வதை வலியுறுத்துதலும், விலக்குதலை வலிந்துச் சொல்லியிருப்பதையும் காணலாம். குணநலன்கள் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடையவையோ, அதேபோல்தான் குணக்குற்றங்களும். நடுவு நிலை நின்றவர், பிறர் பொருளை கவர்தல் பயனே தந்தாலும், அது ஒழுக்கக்கேடு என்பதையும் உணர்வதால், அதாவது ஒருபக்கமாக சிந்தியாமல், நல்லது, அல்லது இரண்டையும் ஆராய்ந்து, அச்செயலை செய்யவும், ஏன் நினைக்கவுமே நாணுவார்.
வெஃகல் என்பது மிக்கவிரும்பி கவர்தல், பேராசை கொண்டு வவ்வல் என்ற பொருளிலேயே இவ்வதிகாரத்தில் கையாளப்பட்டிருக்கிறது. வவ்வல், வவ்வுதல், அவ்வுதல், கவ்வுதல், இணுக்கம், பறித்தல் எல்லாமே தங்களுகுடமையில்லாத ஒன்றை தனக்குரியதாக்கிக் கொள்ள விழைதல்.
வள்ளுவர் ஆசையை விலக்கச் சொல்லவில்லை, பேராசையும் அதன்காரணமாக எவ்வழியிலேனும் தமக்குரியதாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்கிற தீக்குணத்தைக் கண்டிக்கத்தான் இவ்வதிகாரத்தைச் செய்துள்ளார்.
சூர்பனகை இராமனைக்கண்டு இச்சைகொண்டு கவர நினைத்ததும், இராவணன் சீதையழகிலே மதிமயங்கி அவளைக்கவர்ந்து சென்றதும், வாலி தன்னுடைய தம்பியின் மனையாளைக் கவர்ந்து சென்றதும், கௌரவர்கள் பாண்டவருக்குச் சொந்தமான நாட்டினை முறையற்ற வழியிலே கவர்ந்துகொண்டதும் வெஃகலின் நிகழ்வுகள்தான்.

மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் - பிறர் பொருளை வௌவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வௌவுதற்குப் பழியின்கண்ணே படுஞ்செயல்களைச் செய்யார்; நடுவு அன்மை நாணுபவர் - நடுவு நிலைமை அன்மையை அஞ்சுபவர். ('நடுவு' ஒருவன் பொருட்குப் பிறன் உரியன் அல்லன் என்னும் நடுவு.).
மணக்குடவர் உரை
தமக்குப் பயனுண்டாக வேண்டிப் பழியொடுபடுவன செய்யார், நடுவன்மைக்கு நாணுபவர். இது நடுவுநிலைமை வேண்டுபவர் செய்யாரென்றது.
மு.வரதராசனார் உரை
நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.
சாலமன் பாப்பையா உரை
பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.
No comments:
Post a Comment