குறள் 121
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
[அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை]
பொருள்
அடக்கம் - மனமொழிமெய்கள்அடங்குகை; கீழ்ப்படிவு பணிவு அடங்கியபொருள்; மறைபொருள் கொள்முதல் பிணம்அடக்கம்செய்தல்.
அமரத்துவம் - அழியாமை
அமர் - விருப்பம்; கோட்டை போர் போர்க்களம் மூர்க்கம்
அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்
அமரருள் - விருப்பத்திற்குரிய நல்வினை எனப்படும் வீடுபேறு
உய்க்கும் - உய்த்தல் - செலுத்துதல்; கொண்டுபோதல் சேர்த்தல் நடத்துதல் அமிழ்த்தல் நுகர்தல் கொடுத்தல் அனுப்புதல் குறிப்பித்தல் அறிவித்தல் ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல்
அடங்காமை - அடங்காது இருத்தல்; அடக்கம் இல்லாது இருத்தல்
ஆர் - நிறைவு; பூமி கூர்மை அழகு மலரின்பொருத்துவாய்; காண்க:ஆத்தி; திருவாத்தி ஆரக்கால் தேரின்அகத்தில்செறிகதிர்; அச்சுமரம் செவ்வாய் சரக்கொன்றை அண்மை ஏவல் பலர்பால்படர்க்கைவினைமுற்றுவிகுதி; மரியாதைப்பன்மைவிகுதி; ஓர்அசை; அருமையான.
இருள் - அந்தகாரம்; கறுப்பு மயக்கம் அறியாமை துனபம்; நரகவிசேடம்; பிறப்பு குற்றம் மரகதக்குற்றம் எட்டனுள்ஒன்றாகியகருகல்; மலம் யானை இருவேல் இருள்மரம்
உய்த்து விடும் - உய்த்தல் - செலுத்துதல்; கொண்டுபோதல் சேர்த்தல் நடத்துதல் அமிழ்த்தல் நுகர்தல் கொடுத்தல் அனுப்புதல் குறிப்பித்தல் அறிவித்தல் ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல்
முழுப்பொருள்
அமரருள் என்ற சொல்லை அமர் அருள் என்று பிரிக்கலாம். அமர் என்றால் விருப்பம். அருள் என்றால் நல்வினை. ஆதலால் அமரருள் என்பது நாம் விரும்புகின்ற நல்வினையாகும். எல்லோரும் விருப்பப் படுவது வீடுபேறு ஆகும். ஆதலால் அதுவே இங்கே பொருளாக கொள்ள வேண்டும்.
ஆர் என்றால் நிறைவு அதுப்போல் இருள் என்றால் துன்பம்/மயக்கம்/அறியாமை. ஆரிருள் என்றால் மிகுந்த துன்பம்/மயக்கம்/அறியாமை யாகும்.
அடக்கம் என்பதற்கு நாம் இரு பொருள்களை கொள்ளலாம்
1) பணிவு. வாழ்வில் எவ்வளவு பெரிய இடத்திற்கு சென்றாலும், எவ்வளவு பொருள் ஈட்டினாலும், சாதனைகள் பல படைத்தாலும் இந்த உலகில் நாம் செய்தது எள் அளவு கூட இல்லை என்ற அறிதல் வேண்டும். ஏனெனில், அ) நம்முடைய முன்னோர்கள் நம்மைவிட அதிகம் சாதித்து இருக்கிறார்கள். ஆ) அப்படியே சாதிக்கவில்லை என்றாலும் நாம் எதனையும் முழுவதுமாக சாதிக்கவில்லை. ஏனெனில் அவர்கள் ஒரு துறையில் அல்லது ஒரு தருக்கத்தை பல்லாயிரம் ஆண்டுகளாக முன்னெடுத்து கொண்டு வந்ததின் பலனை நாம் அனுபவித்து நாமும் அதனை சிறிது அளவே முன்னெத்து உள்ளோம். இ) நம்முடைய வருங்கால சந்ததியினர் நம்மையும் விஞ்சக்கூடும்
2) மனமொழிமெய்கள்அடங்குகை. நமது ஐந்து புலன்களையும் அடக்கி ஆளுதல். ஏனெனில் நமது ஐம்புலன்களே நமக்கு மிகப்பெரிய எதிரி. ஒரு சிறுகணம் கிடைத்தாலும் நம்மை எளிதாக அசைத்து நம்மை திசைத்திருப்பி நம்மை சரியான பாதையில் இருந்து விலக்கிவிடும். அது நமக்கு துன்பத்தையும் தரும்.
அடக்கம் இல்லை என்றால் அங்கே அறியாமையும் மயக்கமும் குடிக்கொண்டு உள்ளது என்றே பொருள். அறியாமையும் மயக்கமும் துன்பத்தையே தரும். துன்பம் நம்மை சுழன்றுக்கொண்டு இருக்கும். அப்படி இருக்கும் பொழுது நமக்கு பொருள், இன்பம், வீடுபேறு ஆகியவை கிட்டாது.
இக்குறளின் பொருள்: ஒருவர் என்னிலையிலும் அடக்கத்துடன் இருந்தால் என்றால் அவரை அமரருள் என்னும் வீடுபேறு வந்து சேரும். அதுவே அடக்கம் இல்லாமல் இருந்தால் அவருக்கு மிக கடுமையான துன்பம் என்னும் அறியாமையும் மயக்கமும் வந்து சேரும். ஆதலால் அவருக்கு பொருள், இன்பம், வீடுபேறு ஆகியவை கிட்டாது.
முனைப்பாடியார் பாடிய அறநெறிச்சாரப் பாடல் ஒன்று மெய்மையின்கண் நின்று அறமுறைக்கும் பண்புடையாளரின் நட்பினால், இம்மையில் வருவது அடக்கம் என்றும், அவ்வடக்கம் புகழைத்தந்து உயர்கதியில் உய்க்கும் என்கிறது. அப்பாடல் இதோ!
இம்மை யடக்கத்தைச் செய்து புகழாக்கி
உம்மை உயர்கதிக்கு உய்த்தலால் – மெய்மையே
பட்டாங்கு அறமுரைக்கும் பண்புடை யாளரே
நட்டா ரெனப்படு வார் (அறநெறி 43)

மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
[அஃதாவது, மெய், மொழி, மனங்கள் தீநெறிக்கண் செல்லாது அடங்குதல் உடையன் ஆதல். அஃது ஏதிலார் குற்றம்போல் தம் குற்றமும் காணும்(குறள்.190) நடுவுநிலைமை உடையார்க்கு ஆகலின், இது நடுவு நிலைமையின்பின் வைக்கப்பட்டது.)
அடக்கம் அமரருள் உய்க்கும் - ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும் ; அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும். ( 'இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்" (நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.).
மணக்குடவர் உரை
மன மொழி மெய்களை யடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்: அவற்றை யடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும். மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார்.
மு.வரதராசனார் உரை
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.
சாலமன் பாப்பையா உரை
அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.
No comments:
Post a Comment