குறள் 113
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்
[அறத்துப்பால், இல்லறவியல், நடுவு நிலைமை]
பொருள்
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.
ஏதர் - தீயோர், கெட்டவர்கள், குற்றமுடையோர்.
இனும் - இன்னும்; இருப்பினும்
தர் - தருதல் - trutl v. noun. Giving, &c. See தா, தா-. Gift; கொடை (சூடா.)
ஏதர் - தீயோர், கெட்டவர்கள், குற்றமுடையோர்.
இனும் - இன்னும்; இருப்பினும்
தர் - தருதல் - trutl v. noun. Giving, &c. See தா, தா-. Gift; கொடை (சூடா.)
நடுவு - naṭuvu n. id. [T. naḍumu. K.naḍuvu.] 1. Middle, that which is intermediate; இடை 2. Impartiality, uprightness; நடுவுநிலைமை நன்பல் லூழி நடுவுநின் றொழுக (பதிற்றுப்.89, 8). 3. Justice; நீதி (W.) 4. Loins or waist,especially of a woman; மாதரிடை. நடுவு துய்யன(கம்பரா. நகரப். 31).
இகந்துழி - தூரமானஇடம்.
இகந்துபடு-தல் - ikantu-paṭu- v. intr. இக- +. (Gram.) To vary from a rule, asan exception; விதியைக் கடத்தல் எய்தியதிகந்துபடாமைக்காத்தலும் (நன். 176, விருத்.).
இகத்தல் - தாண்டுதல்; கடத்தல் அடக்குதல்; கைப்பற்றுதல் பிரிதல் பொறுத்தல் போதல் நீங்குதல் புடைத்தல் காழ்த்தல் நெருங்குதல்
இக - ika VII. v. t. leave behind, pass over, go beyond, கட; 2. transgress, deviate, மீறு.
இகந்து - கடந்து; மீறி(மீறுதல்)
ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.
ஆக்கத்தை - ஆக்கம் - காண்க:ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து
அன்றே - aṉṟē ind. அன்மை-று + ஏ Is itnot so?, a neg. interrogative, equivalent to anemphatic affirmative; அல்லவா? (தொல். சொல் 282, சேனா )
ஒழிய - தவிர, நீங்க; கெட.
ஒழிய - தவிர, நீங்க; கெட.
விடல் - முற்றும்நீங்குகை; ஊற்றுகை; குற்றம்.
முழுப்பொருள்
(ஒரு பக்கம் சார்பு எடுப்பதனால் (அல்லது சார்பு எடுக்க வைக்ககூடிய சூழ்நிலை வரலாம்)) நன்மை பயக்குமே என்றாலும் நடுவு நிலை மீறச்(தவர வைக்கக்கூடிய) செய்யக்கூடிய ஆக்கத்தில் இருந்து செயலில் இருந்து அன்றே முற்றும் நீங்கிவிட வேண்டும்.
இரு அர்த்தங்களில் இதனை எடுத்துக்கொள்ளலாம். இரண்டையும் பார்ப்போம்.
1) நடுவுநிலைமை விட்டு விலகிய ஒரு செயல் என்றால் அது நமக்கு நன்மையே பயத்தாலும் அதனை விட்டு விலக வேண்டும்.
2) நம்மை நடுவுநிலைமையில் இருந்து விலக்க கூடிய செயல் என்றால் நடுவுநிலைமை ஆற்றும் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும். [உதாரணமாக: ஒருவர் ஒரு (குடும்ப) பஞ்சாயத்தை முன்நின்று நடத்த (அதாவது நீதி சொல்ல) வேண்டும் என்றால் அவர் எத்தகைய சார்பும் இல்லாமல் இருக்க வேண்டும். இருபக்கமும் அவருக்கு எவ்வித (சார்பு எடுக்கவைக்க கூடிய) தொடர்பும் இருக்கக் கூடாது. ஏனெனில் சில சந்தர்பங்களில் நீதிபதி ஸ்தானத்தில் இருப்போருடைய பெண்கள் ஒரு பக்கத்தாருடன் திருமணம் போன்ற உறவில் இருந்தாலோ அல்லது நீதிபதி ஸ்தானத்தில் இருப்போர் ஒரு பக்கத்தாருக்கு நிதி(பணம்) கடன் பட்டு இருந்தால் அவரால் சுதந்திரமாக நீதி அளிக்க முடியாது. ஒரு சாரார் அவரை பயம் முறுத்தலாம் அல்லது அவரே கூட கற்பனையாக தீய விளைவுகளை யோசித்து சார்பு எடுக்கக்கூடும். ஆதலால் அந்த நீதிபதி ஸ்தானம் எடுக்காமல் விலகிக்கொள்ள வேண்டும். வேறு ஒரு நடுநிலையாளரை தேர்வு செய்யவேண்டும்.]
இக்குறளுக்கு இரண்டு பொருள்கள் போல் தோன்றியது. ஆனால் உண்மையாக சொன்னால் (இரண்டாவது பொருளான) நடுவுநிலை பொறுப்பை ஒருவர் தட்டிக்கழிப்பது நடுவுநிலை ஆகாது. அது அறமும் அல்ல. எத்தகைய சூழ்நிலையிலும் நடுவுநிலை தவறக்கூடாது. அறம் தவறக்கூடாது. இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் நம்மைவிட வேறு ஒரு சார்பற்ற நடுநிலையாளரை தேர்வு செய்வது நடுவுநிலைமையை இன்னும் மேல் ஓங்க செய்யக்கூடும் என்றால் அதுவும் சிறந்தது ஆகும். ஆதலால் மேலோட்டமாக இரண்டாவது பொருள் தவறு என்று சொல்ல முடியாது.

உதாரணமாக ஒரு அரசர் ஏழைகளிடம் இருந்து வரி வராது என்பதற்காக அவர்களின் நிலத்தை ஆக்ரமித்து தொழிற்சாலைகள் கட்டி இலாபம் சம்பாதிக்க எண்ணக்கூடாது. ஏனெனில் இலாபத்திற்காக ஏதுமற்ற ஏழைகளின் நிலத்தை கையக படுத்தக்கூடாது.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
“செம்மையின் இகந்தொரீ இப் பொருள்செய்வார்க் கப்பொருள்
இம்மையும் மறுமையும் பகையாவ தறியாயோ” (கலி 14:14-5)
பரிமேலழகர் உரை
நன்றே தரினும் - தீங்கு அன்றி நன்மையே பயந்ததாயினும்; நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழியவிடல் -நடுவு நிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக. (நன்மை பயவாமையின் நன்றே தரினும் என்றார். இகத்தலான் என்பது இகந்து எனத் திரிந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் முறையே நடுவு நிலைமையான் வந்த செல்வம் நன்மை பயத்தலும், ஏனைச்செல்வம் தீமை பயத்தலும் கூறப்பட்டன.).
மணக்குடவர் உரை
பெருமையே தரினும் நடுவுநிலைமையை நீங்கி வரும் ஆக்கத்தை அவ்வாக்கம் வருதற்குத் தொடக்கமான அன்றே யொழிய விடுக
மு.வரதராசனார் உரை
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நடுநிலை தவறுவதால் நன்மையே விளைந்தாலும் ஏற்காதே.
நடுநிலை தவறுவதால் நன்மையே விளைந்தாலும் ஏற்காதே.
Thirukkural - Management - Ethical Behavior
Wealth acquired through improper means or unrighteous ways or at the cost of pain or injury to someone, should be done away with immediately, advises Kural 113.
Wealth ill-got, however useful,
Should not be touched.
Even if there is a possibility for justification that the wealth will be beneficial at a later point or for some just cause, that sort of justification should not be entertained. One right act does not make a wrong act a right one. Any act unfair once is unfair always. Remember, unimproved means do not lead to improved ends.
No comments:
Post a Comment