குறள் 161
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு
[அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை]
பொருள்
ஒழுக்கு - ஒழுகுகை; நீர்முதலியனஓடுகை, நீரோட்டம்; வரிசை; நடைமுறை; நன்னடை, ஆசாரம்; oḻukku n. ஒழுகு-. [M. oḻukku.]1. Leaking, dripping; பொள்ளல்வழியாக நீர்கொட்டுகை. 2. Flowing; நீரோட்டம் ஆற்றொழுக்கு (நன். 19). 3. See ஒழுக்கம், 1. பொல்லாவொழுக்கும் (திவ். இயற். திருவிருத். 1).
ஒழுக்குநீர்ப்பாட்டம் oḻukku-nīr-p-pāṭ-ṭam, n. ஒழுக்கு- +. Tax on running waterthat is used for irrigation, opp. to நிலைநீர்ப்பாட்டம் ஆற்றுக்காற் பாசனவரி. (Insc.)
ஆறாக் - ஆறு - நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை
கொள்க - கொள்ள வேண்டும்
ஒருவன் - ஒருத்தர்; ஒரு மனிதன்
தன் - தன்னுடைய
நெஞ்சத்து - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.
அழுக்காறு - பிறர் ஆக்கம் பொறாமை; மனத்தழுக்கு
இலாத - இல்லாத
இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று.

முழுப்பொருள்
தங்கு தடையின்றி ஓடும் நீரோட்டம் போன்று அழுக்குகளை ஓதுக்கிவிட்டுச்செல்லும் ("ஓடும் நதியில் கலங்கம் இல்லை") நதியை போன்று நாம் உள்ளம் கொள்ள வேண்டும். ஒரு நதியின் துவக்கத்தில் தூய்மையாகவே இருக்கும் ஆனால் வழியில் சில அழுக்குகள் வந்து கலக்கும். ஆயினும் நதி கலங்காது. அழுக்குகளை ஓரம் தள்ளும். அதனால் தான் நீரோட்டம்(ஒழுக்கு) போன்று அறத்தை (ஆறு-ஆக) கொள்க
அதுப்போல தன்னுடைய நெஞ்சத்தில் பிறர்மேல் பொறாமை கொள்ளாமல் இருக்க வேண்டும். பிறர் மேல் நமக்கு ஒரு சில நொடிகள் பொறாமை எண்ணம் வரக்கூடும் (அது இயல்பே). ஆனால் அதனை மனதில் தங்க விடாமல், பொறாமையுடன் வாழ்வில் பயணிக்காமல் இருக்க வேண்டும். அவ்வாறு பொறாமை இல்லாத நெஞ்சத்தின் இயல்பு நதிப்போன்று தூய்மையாக இருக்கும். உள்ளத்திற்கும், உடலிற்கும், வாழ்விற்கும் கேடு இருக்காது.
அதுவே பொறாமை இருந்தால் அதில் இருந்து வஞ்சகம், நிம்மதியின்மை பிறக்கும். தன்னுடைய அறத்தில் இருந்து தவரக்கூடும். நம் அழிவும் துவங்கும். ஆகவே பொறாமை முளைக்கும் பொழுதே அதனை கிள்ளி எரிந்துவிட வேண்டும். மரமாய் வளர்ந்த பின் வெட்டி சாய்ப்பத்தை விட முளையிலேயே கிள்ளி எரிவது எளிதானது.

உதாரணமாக பள்ளிக்கூடங்களில், உனக்கு என்னடா நீ நல்ல மார்க் (mark/மதிப்பெண்கள் எடுக்குற) முதல் ரெங்க் (rank) மாணவன் நீ, அல்லது உனக்கு என்ன உனக்கு கார் இருக்கு உனக்கு என்ன கவலை எனக்கு ஒன்னும் இல்லையே என்று பொறாமை கொள்வதிற்கு பதிலாக நாம் நமது பாடத்தை கவனமாக படித்தால் நாமும் முன்னேறலாம். பொறாமைக்கொண்டால் செயலில் கவனம் செலுத்த முடியாது.
யோசித்துப்பார்த்தால் இன்று சாதனை செய்த பெரிய மனிதர்களில் பெரும்பாலானோர் ஏழைக்குடும்பங்களில் இருந்தோ அல்லது நடுத்தர வர்கத்தில் இருந்தோ வந்தவர்களே. அமேரிக்காவில் 80% (சதவிகித) மில்லியனர்ச் (millionaires) / பெரும் பணக்காரர்கள் தங்கள் தாய் தந்தையிடம் இருந்து சொத்துக்களை பெறவில்லை. அவர்களாகவே உழைத்து சம்பாத்திப் பெற்றார்கள். ஏனெனில் அவர்கள் பணக்காரர்களை கண்டு பொறாமை கொள்ளாமல் செயலில் கவனம் செலுத்தினார்கள்.
திரிகடுகத்தின் ஆசிரியர், அழியாப்புகழைப் படைப்பவர்களுள், பகைமை உண்டான காலத்தும் பிறர் வளமையைக் கண்டு பொறாமை கொள்ளாதவர்களையும் சொல்லுவார்.
“என்றும் அழுக்காறு இகந்தானும், – இம் மூவர்நின்ற புகழ் உடையார்”. ஆசாரக்கோவை, “பொய், குறளை, வெளவல், அழுக்காறு, இவை நான்கும் ஐயம் தீர் காட்சியார் சிந்தியார்” என்று சிந்திக்கக்கூடாத நான்கினுள் ஒன்றாக அழுக்காறைக் கூறுகிறது.
ஆனால் அழுக்காறு என்பதை ஒரு கவிதை நயமாக எடுத்து ஆண்ட புலவர்களும் உண்டு. சீதையைக்கண்டு மயில் பகை உணர்வு அடைந்ததை கி.வா.ஜ அவர்கள் , கம்பரின் பம்பைபடலப் பாடலை எடுத்துக்காட்டுகிறார். “ஓடா நின்ற களிமயிலே! சாயற்கு ஒதுங்கி உள்ளழிந்து கூடா தாரின் திரிகின்ற நீயும் ஆகம் குளிர்ந்தாயோ?”. முன்பெல்லாம் சீதையைக் கண்டால் மயில் முன்னே நிற்காமல் ஓடும்; அவளுடைய சாயலைக்கண்டு, ‘இந்தச்சாயல் நமக்கு இல்லையே!’ என்று அழுக்காறு அடைந்து ஒதுங்கி மனம் வெதும்பிப் பகைவரைப் போலே திரியும்”
தொல்காப்பியம் போலி ஆசிரியர்களுக்கு உண்டான குணக் குறைகளைக் கூறும்போது, அழுக்காறு கொண்டவர்கள் ஆசிரியராகும் சிந்தனை கூட இல்லாதவர்கள் என்கிறது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதனுள் 'அழுக்காறு' என்பது ஒருசொல்.அதற்குப் பொருள் மேலே (குறள்: 35) உரைத்தாம். அச்சொல் பின் அழுக்காற்றைச் செய்யாமை என்னும் பொருள்பட எதிர்மறை ஆகாரமும் மகர ஐகார விகுதியும் பெற்று 'அழுக்காறாமை' என நின்றது. இப்பொறாமையும் பொறைக்கு மறுதலையாகலின், இதனை விலக்குதற்கு இது பொறை உடைமையின்பின் வைக்கப்பட்டது.)
ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு - ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு என்னும் குற்றம் இல்லாத இயல்பினை; ஒழுக்காறாக் கொள்க - தனக்கு ஓதிய ஒழுக்க நெறியாகக் கொள்க. [இயல்பு - அறிவோடு கூடிய தன்மை. அத்தன்மையும் நன்மை பயத்தலின், ஒழுக்க நெறி போல உயிரினும் ஓம்புக என்பதாம்.].
மணக்குடவர் உரை
ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாத வியல்பைத் தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க. இஃது அழுக்காறு தவிரவேண்டு மென்றது.
மு.வரதராசனார் உரை
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.
Thirukkural - Management - Not Being Envious
Feeling of inadequacy and feeling of deserving more have been universal grudges of people universally. The result of these two feelings is the longing for something a person does not possess. He becomes envious. “Envy,” according to Oxford Advanced Learner’s Dirtionoy (1996, p. 387), “is the feeling of wishing to have what somebody else has or to be like somebody else.” That sort of longing causes many mental diseases. Valluvar visualized that people would complicate their lives by desiring for things that do not belong to them and suggested cures for that mental disease. Kurals elaborate on the importance of not being envious.
When a person is disciplined not to have any desire for others' possessions in his heart, he can consider that quality as his personal discipline to achieve many greater and admirable things in his life. Kural 161 presents this thought succinctly.
Matte it a way of life to expel
Envy from your heart.
Envy, that is., longing for others' possessions, has psychological and physical consequences. Envy is similar to acid as acid always damages the container. So, do not harbor that negative quality in you and damage yourself.
No comments:
Post a Comment