குறள் 1311
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
[காமத்துப்பால், கற்பியல், புலவி நுணுக்கம்]
பொருள்
புலவிநுணுக்கம் - pulavi-nuṇukkam n. id. +. Sulks of a wife on flimsy grounds; அற்பகாரணத்தைக்கொண்டு தலைவி ஊடுகை. (குறள், 132,அதி.)
புலவிநுணுக்கம் - pulavi-nuṇukkam n. id. +. Sulks of a wife on flimsy grounds; அற்பகாரணத்தைக்கொண்டு தலைவி ஊடுகை. (குறள், 132,அதி.)
பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.
இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று.
இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று.
இயலார் - இயல்புடையோர்
எல்லாரும் - யாவரும்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
கண்ணின் - கண்களால்
பொது - பொதுமையானது; சிறப்பின்மை; சாதாரணம்; வழக்கமானது; நடுவுநிலை; ஒப்பு; குறிப்பானபொருளின்மை; வெளிப்படையானது; சபை; தில்லையம்பலம்.
உண் - uṇ V. & I. v. t. (fut. உண்பேன், உண்ணு வேன்), eat, suck, take food. Some times it serves to form a passive verb, as in தள்ளுண்ண, to be rejected.
உண்பர் - உண்பார்கள்
நண்மை - அண்மை, naṇmai n. perh. id. Proximity;சமீபம். நட்பெதிர்ந் தோர்க்கே யங்கை நண்மையன்(புறநா. 380, 11).
நண்ணேன் - தொடமாட்டேன், அருகில் வரமாட்டேன்
பரத்த - பரபரத்தல் - paraparattal பரபரப்பு, v. n. hurrying hastening, தீவரித்தல்; 2. feeling a sensation of crawling or tingling, தினவு; 3. rumbling in the intestines; 4. activity, energy, avidity, முயற்சி.; பரவுதல்; தட்டையாதல்; அலமருதல்.
நின் - உன்னுடைய
மார்பு - நெஞ்சு; முலை; வடிம்பு; தடாகம்; அகலம்; கருப்பூரவகை; நான்குமுழஅளவுள்ளநீட்டலளவை.
முழுப்பொருள்
தலைவி தலைவனின் அழகு மிகுந்த வசிகரிக்கும் பரந்த மார்பு மீது கோபம் கொள்கிறாள். அதனால் தலைவனின் மீதும் கோபம் கொள்கிறாள். ஏனெனில், இவர் வெளியே மக்களுடன் மக்களாக பொது இடங்களுக்கு செல்லும் பொழுது பெண் இயல்புடையவர்கள் இவரின் வசிகரிக்கும் மார்பை பொதுவானை உண்பதுபோல உண்ணுவார்கள். இந்த மார்பு எனக்கானது மட்டும் அள்ளவா? இதை பிறர் காண்பதைக் கூட நான் விரும்பவில்லை. இதுப் போன்ற சிறு காரணங்களுக்காக தலைவனின் மீது கோபம் கொண்டு ஊடலிற்கு வழிவகுக்கிறாள் தலைவி. இன்னொரு கோணத்தில் பார்த்தால், தலைவி தலைவன் வீட்டைவிட்டு வெளியே (வெளியே சென்றால் தானே பிற பெண்கள் பார்ப்பார்கள்) செல்லக்கூடாது தன்னுடனே இருக்க வேண்டும் என்று விரும்பிகிறாள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
ஒப்புமை
”கருந்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கென்
றொருங்கொப்பக் கொண்டானாம் ஊரன் - ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரை மார்பன் நீராடா
தென்னையும் தோய வரும்” (நாலடி 387)
“பரத்தையார் தோய்ந்த மார்பம்
பத்தினி மகளிர் தீண்டார்” (சீவக.2722)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
[அது , ' புலவியது ' நுணுக்கம் என விரியும் .அஃதாவது , தலைமகனும் தலைமகளும் ஒர் அமளிக்கண் கூடியிருந்துழி அவன் மாட்டுப் புலத்தற் காரண மில்லையாகவும் , காதல் கைம்மிகுதலான் நூண்ணியதோர் காரணமுளதாக உட்கொண்டு , அதனை அவன்மேலேற்றி அவள் புலத்தல். காரணத்தின் நுணுக்கம் காரியத்தின்மேல் நின்றது . அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]
(உலாப்போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது.) பரத்த - பரத்தைமையுடையாய்; பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர் - நின்னைப் பெண் இயல்பினையுடையார் யாவரும் தம் கண்ணான் பொதுவாக உண்பர்; நின் மார்பு நண்ணேன் - அதனால் அவர் மிச்சிலாய நின் மார்பினைப் பொருந்தேன். (கற்பு நாண் முதலிய நற்குணங்களின்மையின் பரத்தையர்க்குள்ளது பெண் இயற்கை மாத்திரமே என்னுங் கருத்தால், 'பெண் இயலார்' என்றாள். பொதுவாக உண்டல் - தஞ்சேரிச் செலவின் முறையானன்றி ஒரு காலத்து ஒருங்கு நோக்குதல்; அதுவும் ஓர் குற்றம். தாம் நோக்கி இன்புற்றவாறே அவரும் நோக்கி இன்புறுவர் என ஆசங்கித்து அவர்பாற் பொறாமை எய்துதலின், நுணுக்கமாயிற்று.).
மணக்குடவர் உரை
என் புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு என்னெஞ்சு, கூடுவேமென்று நினைக்கின்றது தன்னாசைப்பாட்டால். இத புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.
மு.வரதராசனார் உரை
பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.
சாலமன் பாப்பையா உரை
பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை நான் இனிச் சேரேன்.
No comments:
Post a Comment