குறள் 1261
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்
[காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்]
பொருள்
வாள் - ஒளி; கத்தி; கத்தரிகை; கூர்மை; ஈர்வாள்; விளக்கம்; புகழ்; கொல்லுகை; கலப்பை; உழுபடையின்கொழு; கயிறு; நீர்; கச்சு.
அற்றுப் - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.
புற்கு - puṟku n. புன்-மை. Tawnycolour, dimness; கபிலநிறம். (திவா.)
புற்கென்ற - புற்கு என்ற
கண்ணும் - கண்
அவர் - காதலர்
சென்ற - பிரிந்துச் சென்ற
நாள் - நாள், பொழுது, தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.
ஒற்றித் - ஒற்றுதல் - oṟṟu- 5 v. ஒன்று-. [T.K. ottu.]tr. 1. To bring into contact; to press, hug close;ஒன்றிற்படும்படி சேர்த்தல் வீணை . . . மாத ரணிமுலைத் தடத்தி னொற்றி (சீவக. 1746). 2. To stamp, asa seal; முத்திரையிடுதல். கொடுவரியொற்றி (சிலப். 5,98). 3. To spy out; உளவறிதல். கண்மா றாடவரொடுக்க மொற்றி (மதுரைக். 642). 4. To beat, ascymbals in keeping time; தாளம்போடுதல் காமருதாளம் பெறுதற் கொற்றுவதுங் காட்டுவபோல் (பெரியபு.திருஞான. 46). 5. To strike; அடித்தல் வேணுக்கோலின் மிடைந்தவ ரொற்றலின் (சீவக. 634). 6. Topress down; to press upon; அமுக்குதல் வெங்கணைசெவிட்டி நோக்கியொற்றுபு திருத்தி (சீவக, 2191). 7.To attack; தாக்குதல் பழனத்த புள்ளொற்ற வொசிந்தொல்கி (கலித். 77, 5). 8. To touch; தீண்டுதல் கதவொற்றிப் புலம்பியா முலமர (கலித். 8, 2). 9. Toembrace; தழுவுதல் சேஎச் செவிமுதற் கொண்டுபெயர்த்தொற்றும் (கலித். 103, 51). 10. To wipeaway, as tears; துடைத்தல் கொடியனாடன் கண்பொழி கலுழி யொற்றி (சீவக. 1397). 11. To pryinto; உய்த்துணர்தல் உள்ளொற்றி
தேய்ந்த - உரைசுதல்; குறைதல்; மெலிதல்; வலிகுன்றல்; கழிதல்; அழிதல்; சாதல்.
விரல் - viral n. perh. விரவு-. [T. vrēlu, K.Tu. berel, M. viral.] 1. Finger; toe; கைகால்களினிறுதியில் ஐந்தாகப் பிரியும் உறுப்பு. விரலுளர்நரம்பின் (பொருந. 17). 2. See விரற்கிடை. பாதாதிகேசாந்தம் முக்காலே நால்விரலே ஆறுதோரை உசரமும் (S. I. I. ii, 395).viral n. perh. விரவு-. [T. vrēlu, K.Tu. berel, M. viral.] 1. Finger; toe; கைகால்களினிறுதியில் ஐந்தாகப் பிரியும் உறுப்பு. விரலுளர்நரம்பின் (பொருந. 17). 2. See விரற்கிடை. பாதாதிகேசாந்தம் முக்காலே நால்விரலே ஆறுதோரை உசரமும் (S. I. I. ii, 395).
முழுப்பொருள்
தலைவனும் தலைவியும் பிரிந்து உள்ளார்கள். அப்போழுது தலைவி தலைவனின் வரவை எதிர்நோக்கி இருக்கிறாள். அப்பொழுது அவர் வரக்கூடும் வழி(களை) நோக்கி கண்களை பதித்துக்கொண்டு இருக்கிறாள். ஆனால் பலநாள் கழிந்தும் தலைவன் இன்னும் வரவில்லை. அதனால் கவலையில் அவள் கண்கள் ஒளி இழந்து அதவாது அழகிழந்து, கண்களின் புகழ் இழந்து கபில நிறம் கொண்டன.
மேலும், அவர் விட்டுச்சென்ற நாள்களை (சுவற்றில் கோடுகளாய் போட்ட வரிகளை) அவள் கைவிரல்கள் எண்ணி எண்ணி தேய்ந்தன. அப்படி ஆனால் அவள் எத்தனை நாட்கள் தலைவனைப் பிரிந்து இருக்க வேண்டும். இல்லை எனில் அவள் பிரிவு தாங்காது எத்தனை முறை அதனை மறுபடியும் மறுபடியும் எண்ணி இருக்க வேண்டும்.
வரவை நோக்கி கண்கள் மங்கி ஒளியிழத்தலை பல கவிஞர்கள் கூறிவிட்டனர். குறுந்தொகைப் பாடல் வரியான “கண்ணே நோக்கி நோக்கி வாளிழந்தனவே” என்கும். சீவக சிந்தாமணியும், “கண்ணும் வாளற்ற” என்கும். விரல் தேய்தலை, “ஆய்கோ டிட்டுச் சுவர்வாய் பற்றுநின் படா” என்கிறது குறுந்தொகைப் பாடல். நாலடியார் பாடல், “நாள்வைத்து நம்குற்றம் எண்ணும்கொல்” என்கிறது.
”நீளிடை யத்தம் நோக்கிவா ளற்றுக்
கண்ணுங் காட்சி தௌவின” (நற் 397:2-3)
“கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந் தனலே” (குறுந் 44,1-2)
“வெளிறுகண் போகப் பன்னாட் டிரங்கி” (புறநா 177:2)
“கண்ணும் வாளற்ற” (சீவக் 998)
“ஆய்கோ டிட்டுச், சுவர்வாய் பற்றுநின் படர்” (குறுந் 358:2-3)
“நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந்
தாழல் வாழி தோழி” (அகநா 61:4-5)
“சேணுறை புலம்பின் நாண்முறை இழைத்த
திண்சுவர் நோக்கி நினைந்து” (அகநா 289:9-10)
“மெல்விரலின்
நாள்வைத்து நம்குற்றம் எண்ணும்கொல்” (நாலடி 394)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
[அஃதாவது , சேயிடைப் பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகவினான் ஒருவரை யொருவர் காண்டற்கு விரைதல் . தலைமகற் பிரிவும் தலைமகள் ஆற்றாமையும் அதிகாரப்பட்டு வருகின்றமையின் இருவரையும் சுட்டிப் பொதுவாகிய பன்மைப் பாலாற் கூறினார்.
(தலைமகள் காண்டல் விதுப்பினால் சொல்லியது.) அவர் சென்ற நாள் ஒற்றி விரல் தேய்ந்த - அவர் நம்மைப் பிரிந்து போன நாள்கள் சுவரின்கண் இழைத்தவற்றைத் தொட்டு எண்ணுதலான் என் விரல்கள் தேய்ந்தன; கண்ணும் வாள் அற்றுப் புற்கென்ற - அதுவேயன்றி அவர் வரும் வழிபார்த்து என் கண்களும் ஒளியிழந்து புல்லியவாயின: இவ்வாறாயும் அவர் வரவு உண்டாயிற்றில்லை. (நாள் - ஆகுபெயர். புல்லியவாதல் - நுண்ணிய காணமாட்டாமை. 'ஒற்ற' என்பது 'ஒற்றி' எனத் திரிந்து நின்றது. இனி யான் காணுமாறு என்னை? என்பதாம். நாள் எண்ணலும் வழி பார்த்தலும் ஒருகாற் செய்தொழியாது இடையின்றிச் செய்தலான், விதுப்பாயிற்று.).
மணக்குடவர் உரை
கண்களும் அவர் வரவைப்பார்த்து நோதலால் ஒளியிழந்து புல்லென்றன: விரல்களும் அவர்போன நாள்களை யெண்ணி முடக்குதலாய்த் தேய்ந்தன. இது வரவு காணாமையால் தலைமகள் கூறியது.
மு.வரதராசனார் உரை
என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.
சாலமன் பாப்பையா உரை
அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து, நுண்ணியவற்றைக் காணும் திறனில் குறைந்து விட்டன.
No comments:
Post a Comment