குறள் 1222
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை
[காமத்துப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்]
பொருள்
புன்கண் - துன்பம்; நோய்; மெலிவு; வறுமை; பொலிவழிவு; அச்சம்; இழிவு.
புன்கண் - துன்பம்; நோய்; மெலிவு; வறுமை; பொலிவழிவு; அச்சம்; இழிவு.
வாழி - vāḻi வாழ்-. v. opt. Optativemeaning `may you prosper'; 'வாழ்க' என்னும்பொருளில் வரும் வியங்கோட்சொல். (நன். 168.)தடமலர்த்தாள் வாழி (திருவாச. 24, 6).--int. Anexpletive; ஓர் அசைச்சொல். (சூடா. 10, 16.)
மருள் - maruḷ n. மருள்-. [T. marul,K. M. maruḷ.] 1. Bewilderment of mind,confusion; மயக்கம். (பிங்.) வெருவுறு மருளின் (சீவக.2290). 2. Ignorance of right and wrong; mistaking one for another; delusion; illusion; திரிபுணர்ச்சி. மருடீர்ந்த மாசறு காட்சியவர் (குறள்,199). 3. Wonder; வியப்பு. மருள்பரந்த வெண்ணிலவு (திணைமாலை. 96). 4. Intoxication; madness;உன்மத்தம். (யாழ். அக.) 5. Toddy; கள். (யாழ்.அக.) 6. (Mus.) A secondary melody-type ofthe kuṟiñci
மாலை - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண்.
எம் - em pron. யாம் The oblique of யாம்to which case-endings are usu. affixed, as எம்மை, எம்மால்; 'யாம்' என்பது வேற்றுமைப்படுகையிற் றிரிந்திருக்கும் நிலை
கேள் - உறவு; நட்பு; நண்பன்; கணவன்.
போல் - போன்று
வன்கண் - மனக்கொடுமை; வீரத்தன்மை; பகைமை; பொறாமை; கொடும்பார்வை.
வன்கண்ணதோ - மனக்கொடுமை
நின் - உனது
துணை - tuṇai [M. tuṇa.] n. 1. Association, company; கூட்டு 2. Help, assistance,aid, succour, support; உதவி தங்குபே ரருளுந்தருமமுந் துணையாத் தம்பகைப்புலன்களைத் தவிர்க்கும்(கம்பரா. நகரப். 6). 3. Protection, guidance;காப்பு. கடவுள் துணை 4. Partner, companion,mate; கூட்டாயிருப்ப-வன்-வள்-து. நறுநுதலாணன்மைத் துணை (நாலடி, 381). 5. Escort, convoy,helpmate; உதவிபுரிவோன். நானோர் துணை காணேன்(திருவாச. 25, 10). 6. Friend; நட்பின-ன்-ள்.தந்துணைக் குரைத்துநிற்பார் (சீவக. 465). 7. Pair,couple, brace; இரட்டை துணைமீன் காட்சியின்
முழுப்பொருள்
மயங்கிய மாலை வேளையே, பலர் உன்மத்தமாகும் மாலை வேளையே நீ வாழ்வாயாக! ஆனால் நீ துன்பத்தில் உழன்று பொலிவு இழந்து இருக்கிறாயே? ஏன்? [குறிப்பு: காதலி துன்பத்தில் இருப்பதனால் அவளுக்கு ஒரு காலத்தில் மயக்கம் தந்த மாலை வேளை இப்பொழுது அவளுக்கு பொலிவிழந்து காணப்படுகிறது] என்னுடைய காதலரைப் போல உன்னுடைய காதலரும் கொடியவரோ? ஏனெனில் என் கணவர் பிரிந்து சென்று மாலைக்குள் வராமல் என் நெஞ்சை கொடுமைப் படுத்துகிறார். உன் காதலரும் அப்படித்தானா? [என்று தனது வருத்தத்தை மாலை பொழுதிடம் கூறுகிறாள் காதலி]
மயங்கிய மாலை வேளையே, பலர் உன்மத்தமாகும் மாலை வேளையே நீ வாழ்வாயாக! ஆனால் நீ துன்பத்தில் உழன்று பொலிவு இழந்து இருக்கிறாயே? ஏன்? [குறிப்பு: காதலி துன்பத்தில் இருப்பதனால் அவளுக்கு ஒரு காலத்தில் மயக்கம் தந்த மாலை வேளை இப்பொழுது அவளுக்கு பொலிவிழந்து காணப்படுகிறது] என்னுடைய காதலரைப் போல உன்னுடைய காதலரும் கொடியவரோ? ஏனெனில் என் கணவர் பிரிந்து சென்று மாலைக்குள் வராமல் என் நெஞ்சை கொடுமைப் படுத்துகிறார். உன் காதலரும் அப்படித்தானா? [என்று தனது வருத்தத்தை மாலை பொழுதிடம் கூறுகிறாள் காதலி]
ஒப்புமை
”புண்கண் மாலை” (குறுந்தொகை 46:6)
“புல்லென் மருண்மாலைப் போழ்தின்று வந்தென்னைக்
கொல்லாது போதல் அரிதால்” (கலி.145:29-30)
“புன்கண்கூர் மாலைப் புலம்புமென் கண்ணேபோல்” (சிலப்.7:33)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(தன்னுட் கையாற்றை அதன்மேலிட்டுச் சொல்லியது.) மருள்மாலை - மயங்கிய மாலாய்; புன்கண்ணை -நீயும் எம்போலப் புன்கணுடையையாயிருந்தாய்; நின் துணை எம்கேள்போல் வன்கண்ணதோ - நின் துணையும் எம் துணை போல வன்கண்மையுடையதோ? கூறுவாயாக. (மயங்குதல் - பகலும் இரவும் தம்முள்ளே விரவுதல்; கலங்குதலும் தோன்ற நின்றது. புன்கண் - ஒளியிழத்தல்; அதுபற்றித் துணையும் உண்டாக்கிக் கூறினாள். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. எமக்குத் துன்பஞ் செய்தாய்; நீயும் இன்பமுற்றிலை என்னும் குறிப்பால் 'வாழி' என்றாள்.).
மணக்குடவர் உரை
மயங்கிய மாலைப்பொழுதே! நீ வாழ்வாயாக; புன்கண்மையை யுடையையாயிருந்தாய்; எம்முடைய கேளிரைப் போல வன்கண்மையை யுடைத்தோ நின்துணையும். இது தன்னுட்கையாறெய்திடு கிளவி.
மு.வரதராசனார் உரை
மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?.
சாலமன் பாப்பையா உரை
பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?.
No comments:
Post a Comment