கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்

thirukkural meaning விளக்கம் காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல் குறள் 1171 கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது.
குறள் 1171
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]

பொருள்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

விதுப்பு - நடுக்கம்; விரைவு; பரபரப்பு; வேட்கை.

அழிதல் - நாசமாதல்; சிதைவுறுதல்; தவறுதல் நிலைகெடுதல் தோற்றல் மனம்உருகுதல்; வருந்துதல் மனம்உடைதல்; பெருகுதல் பரிவுகூர்தல்; செலவாதல்

கண்விதுப்பழிதல் - தலைவனைக் காணவேண்டுமென்னும் துடிப்பால் தலைவியின் கண்கள் வருந்துதல்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கண்தாம் - தன்னுடைய கண்கள்

கலுழ் - அழுகை; நீர்க்கலக்கம்

கலுழ்வது  - துக்கத்தில் அழுவது

எவன்கொலோ - எதனைக் கருதி?

தண்டுதல் - வசூலித்தல்; வருத்துதல்; இணைத்தல்; நீங்குதல்; விலகுதல்; தணிதல்; கெடுதல்; தடைபடுதல்; தொடுதல்; மனம்அமைதல்; விருப்பங்கொள்ளுதல்; சினமூண்டெழுதல்; விலகுதல்.

தண்டா - தொந்தரவு; சண்டை; சிக்கல்; கதவைஅடைத்துஇடும்இரும்புத்தடி; உடற்பயிற்சிவகை.

தண்டா -தணியாத

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

காட்ட - காட்டுதல் - காண்பித்தல்; அறிவித்தல்; மெய்ப்பித்தல்; நினைப்பூட்டுதல்; படையல்; உண்டாக்குதல்; அறிமுகஞ்செய்தல்; வெளிப்படுத்துதல்.

யாம் - yām   pers. pron. (எம், எம்மை) etc. we, நாம்.

கண்டது - kaṇṭatu   n. காண்-. 1. Thatwhich has been seen; காணப்பட்ட பொருள் கண்டதெல்லாம் பகை (திவ். இயற். திருவிருத். 35, அரும்.). 2.Irrelevant matter; சம்பந்தமற்ற செய்தி கண்டதெல்லாம் பேசுகிறான்.
கண்டதுங்கடியதும் kaṇṭatuṅ-kaṭiya-tum, n. id. +. Everything, including thegood and the bad; நல்லதும் தீயதும். (தீய. இயற்.திருவிருத். 2, அரும்.)

முழுப்பொருள்
என்காதலரின்றி தணியாத இக்காமநோயை (காதல் நோய், ஆசை நோய்) துன்பத்தை எனக்கு தந்தவர் என் ஆசைக்காதலர். என் ஆசைக்காதலரை எனக்கு காண்பித்தது என் கண்கள் தான். என் கண்கள் காண்பித்ததனால் தான் நான் அவரை பார்த்தேன் (இல்லையேல் பார்த்திருக்க மாட்டேன்). அவரோ இப்போது என்னிடம் இல்லை. நானோ அவரின்றி அவரைக்காணாமல் வாடுகிறேன், வருந்திக்கொண்டு இருக்கிறேன். ஆனால் என் கண்கள் ஏன் வருந்துகின்றன? அதனில் ஏன் நீர்க்கலங்கி வழிகிறது. அவரை எனக்கு காண்பிப்பதே அதனுடைய வேலை. அவரைத் தேடி எனக்கு காண்பிக்கும் வேலை செய்யாமல் ஏன் துன்பத்தில் இருக்கிறது?  என்று தலைவி தன் கண்களை பழிக்கிறாள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(நின் கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன, நீ ஆற்றல் வேண்டும், என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தண்டா நோய் யாம் கண்டது தாம் காட்ட - இத்தணியா நோயை யாம் அறிந்தது தாம் கலுழ்வது எவன் கொல் - அன்று அத்தொழிலவாய கண்கள், இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி? ('காட்ட' என்பதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'இன்றும் தாமே காட்டுதல் அல்லது யாம் காட்டுதல் யாண்டையது'? என்பதாம்.

மணக்குடவர் உரை 
அமையாத நோயை யாங்கண்டது அந்நோய் செய்தாரைத் தாங்காட்டுதலானே யன்றே? பின்னர் அக்கண்கள்தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக் கருதி? இது தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?.

சாலமன் பாப்பையா உரை
தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain