குறள் 1111
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்
[காமத்துப்பால், களவியல், நலம்புனைந்துரைத்தல்]
பொருள்
நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.
நல்நீரை! - நல்ல நீர் போன்ற குணம்;
வாழி! - vāḻi வாழ்-. v. opt. Optativemeaning `may you prosper'; 'வாழ்க' என்னும்பொருளில் வரும் வியங்கோட்சொல். (நன். 168.)தடமலர்த்தாள் வாழி (திருவாச. 24, 6).--int. Anexpletive; ஓர் அசைச்சொல். (சூடா. 10, 16.)
அனிச்சமே! - அனிச்சம் - மோந்தால் வாடும் பூவகை
நின்னினும் - உன்னை விட
மெல் - mel adj. Soft, tender; மிருதுவான.ஆம்பன் மெல்லடை கிழிய (அகநா. 56).
மென்மை - meṉmai n. [T. melimi, K.melpu, M. melivu, Tu. meliyuni.] 1. Fineness,thinness; நுண்மை. 2. Tenderness, softness;மிருதுத்தன்மை. கயவென் கிளவி மென்மையு மாகும்(தொல். சொல். 322). 3. (Gram.) See மெல்லெழுத்து. மேவு மென்மை மூக்கு (நன். 75). 4.Lowness; inferiority; தாழ்வு. மென்சொலேனும். . . இகழார் (கந்தபு. அவையட. 3). 5. Weakness,infirmity; வலியின்மை. மேவற்க மென்மை பகைவரகத்து (குறள், 877). 6. Gentleness; அமைதி.மெல்லிய நல்லாருண் மென்மை (நாலடி, 188).
நீரள் - குணத்தை
யாம் - yām pers. pron. (எம், எம்மை) etc. we, நாம்.
வீழ் - vīẕ வீழு, II. v. i. (poet. form of விழு), fall; 2. v. t. desire, long for, ஆசி.
வீழ்பவள் - நான் ஆசைக்கொண்டு உள்ளவள்
முழுப்பொருள்
அனிச்சம் மலரே நீ மிக மென்மையான மலர் என்பதை ஒத்துக்கொள்கிறேன். பிறர் உன்னை முகர்ந்தால் நீ உடனே வாடிவிடுவாய். அதுவே உன் குணம். அனிச்சம் மலரே நீ வாழ்க. ஆனால் உன்னை விட மென்மையானவள், மென்மையான குணத்தை உடையவள் ஒருத்தி இருக்கிறாள். அவள் நான் மனதார விரும்பும் என் அன்பு காதலி ஆவாள்.
“மோப்பக் குழையும் அனிச்சம்” என்று விருந்தோம்பல் அதிகாரத்தின் அனிச்சத்தின் இயல்பைக் கூறிய வள்ளுவர், மென்மையில் அதனினும் சிறந்தவள் இந்தப்பெண் என்கிறார்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
[அஃதாவது , தலைமகன் தலைமகள் நலத்தைப் புனைந்து சொல்லியது . இது , புணர்ச்சி மகிழ்ந்துழி நிகழ்வதாகலின் , புணர்ச்சி மகிழ்தலின் பின் வைக்கப்பட்டது .]
(இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது.) அனிச்சமே வாழி நன்னீரை - அனிச்சப்பூவே, வாழ்வாயாக, மென்மையால் நீ எல்லாப் பூவினும் நல்ல இயற்கையையுடையை; யாம் வீழ்பவள் நின்னினும் மென்னீரள் - அங்ஙனமாயினும் எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மெல்லிய இயற்கையை உடையவள். (அனிச்சம்: ஆகுபெயர், 'வாழி' என்பது உடன்பாட்டுக் குறிப்பு. இனி 'யானே மெல்லியள்' என்னும் தருக்கினை ஒழிவாயாக என்பதாம். அது பொழுது உற்றறிந்தானாகலின், ஊற்றின் இனி்மையையே பாராட்டினான், 'இன்னீரள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).
மணக்குடவர் உரை
அனிச்சப்பூவே! நீ நல்ல நீர்மையை யுடையாய்; எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மிக நீர்மையாள் காண். இஃது உடம்பினது மென்மை கூறிற்று.
மு.வரதராசனார் உரை
அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.
சாலமன் பாப்பையா உரை
அனிச்சம் பூவே! நீ எல்லாப் பூக்களிலுமே மென்மையால் சிறந்த இயல்பை உடையை வாழ்ந்து போ! ஒன்று உனக்குத் தெரியுமா? என்னால் விரும்பப்படும் என் மனைவி உன்னைக் காட்டிலும் மென்மையானவள்!.
No comments:
Post a Comment