Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ

குறள் 1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு
[காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்]

பொருள்
தகையணங்குறுத்தல் - தலைவியின் அழகுதலைவனை வருத்தமுறுத்தலைக் கூறும் அகத்துறை
தகையணங்குறுத்தல், v. n. comparing a lady present with another, to annoy a lover (in love poetry).

தகை - அன்பு

அணங்கு - தீண்டிவருத்தும்தெய்வப்பெண்; தெய்வப்பெண் பத்திரகாளி தேவர்க்காடும்கூத்து; அழகு விருப்பம் மயக்கநோய்; அச்சம் வருத்தம் கொலை கொல்லிப்பாவை பெண் வடிவு

உறுத்தல் - uṟuttal   n. உறுத்து-. 1. Increasing; மிகுக்கை. (பிங்.) 2. Bringing intocontact, clapping; ஒற்றுகை. (திவா.)  

அணங்கு - தீண்டிவருத்தும் தெய்வப்பெண்; அழகு; விருப்பம்; மயக்கநோய்

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

ஆய் - அழகு; நுண்மை சிறுமை மென்மை வருத்தம் இடைச்சாதி; தாய் கடைவள்ளல்களுள்ஒருவன்; மலம் பொன் அருவருப்புக்குறிப்பு; முன்னிலைஒருமைவினைமுற்றுவிகுதி; ஏவலொருமைவிகுதி; ஆக ஒருவிளியுருபு.

மயில் - mayil   n. cf. mayūra. [M. mayil,Tu. mair.] 1. Peacock, peafowl, Pavo cristatus; பறவைவகை. பயில்பூஞ் சோலை மயிலெழுந்தாலவும் (புறநா. 116). 2. See மயிற்கொன்றை,1. 3. False peacock's-foot tree. See மயிலடிக்குருந்து. (மலை.) 4. See மயூராசனம். முத்த மயிறண்டு(தத்துவப். 107).

கொல்லோ?கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

கனன்மரம் -  kaṉaṉ-maram   n. கனல் +.A kind of tree said to shine in the dark;சோதிவிருட்சம். (சங். அக.)  

குழை - kuḻai   n. குழை¹-. 1. Tender leaf,sprout, shoot; தளிர் பொலங்குழை யுழிஞை (புறநா.50). 2. [K. koḻaci.] Soft mud, mire; சேறு (திவா.)3. Hole; துளை கோடிநுண் டுகிலுங் குழையும் (சீவக.1369). 4. Tube, pipe; குழல் (பிங்.) 5. Conch;சங்கு. (பிங்.) 6. Ear; காது மணித்தோடுங் குழையிலாட (அஷ்டப். சீரங்கநாயகி. ஊச. 3). 7. A kind ofearring; குண்டலம் மின்னுக்குழையும் பொற்றோடும்(சீவக. 1658). 8. Sky; ஆகாசம் (பிங்.) 9. cf.guhina. Jungle; காடு (பிங்.) 10. Indian water-lily, Nymphaea lotus alba; நெய்தல் (W.)  

கனங்குழை - kaṉaṅ-kuḻai   n. ghanaகுழை யணிந்த பெண் கனங்குழை மாதர்கொல் (குறள், 1081).  

மாதர் - பெண்; அழகு; பொன்; காதல்; ஓர்இடைச்சொல்.

கொல்! -   இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

மாலும் - மால் -பெருமை; பெருமையுடையவன்; திருமால்; அருகன்; இந்திரன்; காற்று; புதன்; சோழன்; மலை; வளமை; செல்வம்; பழைமை; மேகம்; கண்ணேணி; மயக்கம்; ஆசை; காமம்; கருமை; விட்டுணுக்கரந்தை; எழுதக்கருவி; செங்கற்கட்டளை; காளவாய்; மாதிரி; எல்லை; வலைவகை; இலாயம்; அரசிறைவகை; சொத்து; அரண்மனை.

மால்(லு)-தல் - māl-   3 v. intr. To beconfused, perturbed; மயங்குதல். மான்று வேட்டெழுந்த செஞ்செவி யெருவை (அகநா. 3).

என் - என்னுடைய 

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

முழுப்பொருள்
ஒரு  தலைவன் என்னும் ஆண்மகன் தன் தலைவியை கண்டபின் அவளைப்பற்றி அவன் கொள்ளும் மயக்கம் அச்சம் பற்றிய பாடல் இது.

இக்குறளில் கனங்குழை என்னும் சொல்லுக்கு சிலர் கனமான குண்டலம் அணிந்த பெண் என்ற பொருள் பல உரைகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு அவ்வாறு தோன்றவில்லை. ஏனெனில், அணங்கு என்ற தெய்வத்தையும், மயில் என்ற பறவையையும் குறிப்பிடும் இடத்தில் கனல்(நெருப்பு) போன்ற ஒளி கொண்ட இளந்தளிரையே இதுகுறிக்கும் என்று நான் நினைக்கிறேன். மூன்றும் மானுடத்தைத் தாண்டியது.

நான் பார்த்த பெண் பெண்ணா? ஏனெனில் இவளை நினைத்தால் இவள் தெய்வப்பெண்ணோ என்று தோன்றுகிறது. அல்லது இவள் கொஞ்சும் அழகு மயிலோ? அல்லது கனல் போன்ற பிரகாசம் (மற்றும் வெப்பம்) கொண்ட இளந்தளிரோ? இப்படிப்பட்ட அழகிய பெண்ணை நினைத்து என்னுடைய நெஞ்சம் மயக்கத்தில் (ஆசையில், காமத்தில்) உள்ளது.

இந்த ஆண் தான் பார்த்த பெண்களில் யாரையும் அழகு என்று நினைத்தது இல்லை என்று நாம் கருதலாம். அவனை பொருத்தவரையில் மானுட பெண்கள் எல்லோரும் ஒரு சராசரி முகத்தை உடையோர் என்று நினைத்து இருக்கலாம். அல்லது இயற்கையுடன் ஒப்பிடுகையில் மற்றமானுடரின் முகம் அழகற்றவையாக அவனுக்கு தெரிகிறது. ஆனால் காதல்வயப்பட்ட உடன் அவனுடைய காதலியின் முகம் அவ்வளவு அழகாக அவனுக்கு தோன்றுகிறது. ஆதலால் இது மானுட முகம் என்று அவனால் நம்பமுடியவில்லை.

மேலும், இயற்கையை ரசிக்கும் நுண்ணுணர்வை உடைய ஒரு ஆண்மகனால் தான் ஒரு பெண்ணை அழகுணர்ச்சியுடன் பார்க்கமுடியும் என்று நாம் விளங்கிக்கொள்ளலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , பொழில் விளையாட்டு விருப்பான் ஆயம் நீங்க , அதன்கண் தமியளாய் நின்றாளை , வேட்ட விருப்பான் இளையார் நீங்கத் தமியனாய் வந்து கண்ணுற்ற தலைமகன் , அவள் வனப்புத் தன்னை வருத்தம் உறுவித்தலைச் சொல்லுதல் . இது , கண்ணுற்ற பொழுதே நிகழ்வதாகலின் , முதற்கண் கூறப்பட்டது .]

(தலைமகள் உருவு முதலியன முன் கண்டறிவன அன்றிச் சிறந்தமையின் அவளைத் தலைமகன் ஐயுற்றது.) கனங்குழை - இக்கனவிய குழையை உடையாள்; அணங்கு கொல் - இப்பொழிற்கண் உறைவாளோர் தெய்வமகளோ? ஆய்மயில் கொல் - அன்றி ஒரு மயில் விசேடமோ? மாதர்கொல் - அன்றி ஒருமானுட மாதரோ; என் நெஞ்சு மாலும் - இவளை இன்னள் என்று துணியமாட்டாது என் நெஞ்சு மயங்கா நின்றது. (ஓ - அசை. ஆய் மயில்: படைத்தோன் விசேடமாக ஆய்ந்து படைத்த மயில்: மயிற் சாதியுள் தெரிந்தெடுத்த மயில் என்றும் ஆம். 'கனங்குழை': ஆகுபெயர். 'கணங்குழை' என்ற பாடம் ஓதி, 'பலவாய்த் திரண்ட குழை' என்று உரைப்பாரும் உளர். எழுதலாகா உருவும், தன் வருத்தமும் பற்றி 'அணங்குகொல்' என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும் பற்றி, 'ஆய்மயில்கொல்' என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி 'மாதர்கொல்' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
இக்கனங்குழையை யுடையாள் தெய்வங்கொல்லோ? நல்லதோர் மயில் கொல்லோ? அன்றி, மக்களுள்ளாள் கொல்லோ? என்மனம் மயங்கா நின்றவற்றுள் யாதோ?.

மு.வரதராசனார் உரை
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.

சாலமன் பாப்பையா உரை
அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.

No comments:

Post a Comment