குறள் 636
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை
[பொருட்பால், அமைச்சியல், அமைச்சு]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
மதி - சந்திரன்; மாதம்; ஒன்றுஎன்னும்எண்ணைக்குறிக்கும்குழூஉக்குறி; இராசி; குபேரன்; இடைகலை; காண்க:மதிநாள்; மதிஞானம்; கற்கடகராசி; அறிவு, இயற்கையறிவு; பகுத்தறிவு; வேதத்தின்படிநடத்தல்; மதிப்பு; காசியபரின்மனைவி; அசோகமரம்; அதிமதுரம்; ஒருமுன்னிலையசைச்சொல்; ஒருபடர்க்கையசைச்சொல்; யானை.
நுட்பம் - நுண்மை; நுண்ணிய ஆராய்ச்சி தோன்ற எழுதப்பெற்ற உரை; நுட்பம்; பொருளின்நுட்பம்; காலநுட்பம்; கரந்துறைகோள்களுள்ஒன்று; ஓரணி; 3. subtle idea, யூகம்; 4. accuracy, திட்டம்;
நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை.
நூலோடு- நூல் அறிவோடு
உடையார்க்கு - உடையவர்களுக்கு
அதி - வலைச்சாதி; மிகுதிப்பொருளைத்தரும்ஓர்இடைச்சொல்; அதிகம் அப்பால் மேன்மை சிறப்புமுதலியபொருள்தரும்ஒருவடமொழிமுன்னொட்டு.
நுட்பம் - நுண்மை; நுண்ணிய ஆராய்ச்சி தோன்ற எழுதப்பெற்ற உரை; நுட்பம்; பொருளின்நுட்பம்; காலநுட்பம்; கரந்துறைகோள்களுள்ஒன்று; ஓரணி; 3. subtle idea, யூகம்; 4. accuracy, திட்டம்;
யா - யாது, எது
உள - உள்ளது; இருக்கிறது
முன் - முன்னே
நிற்பவை? - நிற்கின்றது
முழுப்பொருள்
இயற்கையான அறிவாற்றலும், அதனை பயன்படுத்தி ஒரு நுண்ணிய திட்டத்தை தீட்டும் ஆற்றலும், பல நூல்களை கற்று பெற்ற அறிவாற்றாலும், இவ்வனைத்தையும் பல நூல் கற்றுத் தேர்ந்த கற்றோரிடத்தில் ஆலோசித்து மெருகேற்றித் தீட்டிய ஒரு நுண்ணிய திட்டம் மிக சிறப்பானதாக அமையும். அத்தகைய நுண்ணிய திட்டத்தின் முன் அதைவிட சிறந்த திட்டம் என்று ஏதும் இருக்குமோ? இருக்காது என்றே பொருள்.
பி.கு: நூல் என்ற சொல்லுக்கு ஆலோசனை என்றும் பொருள் உள்ளது. ஆதலால் கற்றோரிடத்திலும் ஆலோசிக்க வேண்டும் என்று பொருள்.
கி.வா.ஜ அவர்களின் ஆராய்ச்சி உரையில், தோலாமொழித் தேவரின் சூளாமணி காப்பியத்திலிருந்து இரநூபுரச் சருக்கத்தில் வருமொருபாடலை ஒப்பு நோக்கிக் கூறுகிறார்.
ஒன்றுநன் றெனஉணர்ந் தொருவன் கொள்ளுமே
லன்றதன் றொருவனுக் கறிவு தோன்றுமே
நின்றதொன் றுண்டினி நீதி நூலினோ
டொன்றிநின் றவருரை யுலக மொட்டுமே. (சூளா.இரதநூ.118)
ஒருவர் அறிவுக்கு நல்லென்று தோன்றியவொன்று, நல்லதன்று என்று பிறருக்குத் தோன்றலாம். ஆக ஒன்றை உறுதிபட அறிவதற்கு தன்னுடைய சுயவறிவு மட்டுமல்லாது, அறநூல்களை அறிந்த அறிஞர் மொழியின்வழி ஒழுகின் உலகானது ஒப்புக்கொள்ளும் என்பததன் கருத்தாம்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு - இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கை ஆகிய நூலறிவோடு உடையவராய அமைச்சர்க்கு; அதி நுட்பம் முன் நிற்பவை யாஉள - மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன்நிற்பன யாவையுள? ('மதி நுட்பம்' என்பது பின்மொழி நிலையல்,அது தெய்வம் தர வேண்டுதலின் முன்கூறப்பட்டது. 'நூல்' என்பதூஉம், 'அதிநுட்பம்' என்பதூஉம் ஆகுபெயர். 'அதி' என்பது வடசொல்லுள் மிகுதிப் பொருளதோர் இடைச்சொல், அது திரிந்து நுட்பம் என்பதனோடு தொக்கது. 'முன் நிற்றல்' மாற்றார் சூழ்ச்சியாயின தம் சூழ்ச்சியால் அழியாது நிற்றல். இனி 'அதினுட்பம்' என்று பாடம் ஓதி, 'அதனின் நுட்பம் யா' என்று உரைப்பாரும் உளர். அவர் சூழ்ச்சிக்கு இனமாய் முன் சுட்டப்படுவது ஒன்றில்லாமையும், சுட்டுப்பெயர் ஐந்தாம் உருபு ஏற்றவழி அவ்வாறு நில்லாமையும் அறிந்திலர். பகைவர் சூழ்வனவற்றைத் தாம் அறிந்து அழித்து, அவர் அறிந்து அழியாதன தாம் சூழ்வர் என்பது கருத்து. இதனான் அவரது சிறப்புக் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
மேற்கூறிய நூற்கல்வியோடு கூட நுண்ணியதாகிய மதியினையும் உடையார்க்கு அதனினும் நுண்ணியவாய் மாற்றாராலெண்ணப்பட்டு எதிர் நிற்கும் வினைகள் யாவுள? இது மேற்கூறியவற்றோடு மதியும் வேண்டு மென்றது.
மு.வரதராசனார் உரை
இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன.
சாலமன் பாப்பையா உரை
இயல்பான நுண்ணறிவோடு செயற்கை ஆகிய நூல் அறிவையும் உடைய அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் என்று எவை நிற்கமுடியும்?.
English Meaning - As I taught a kid - Rajesh
When a person or a minister or a leader
A) 1) who has the vast, wide and deep knowledge on his subjects, 2) who can understand the problem holistically by getting the high level information as well by getting into the details of problem, 3) who can structurally approach a(/an ambiguous) problem by slicing the problem, 4) who can device a plan to attain the goal
B) who can consult with subject experties, stakeholders and mentors
devices a plan (with aforementioned qualities), then is there any better brilliant plan that can stand infront of it in this world?
Questions that I ask to the kid
Upon whom it is doubtful that we would have a better plan in this world? Why do you say that?
No comments:
Post a Comment