Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

ஆகூழால் தோன்றும் அசைவின்மை

குறள் 371
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]

பொருள்
ஆகு - ஆக்கம், ஆதல்
ஊழ் - பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை.
ஊழால் - தலைவிதியால்
தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்.
தோன்றும் - உண்டாகும்
அசைவு - ஆட்டம்; சலனம், அசைதல் சஞ்சலம் சோர்வு, தளர்வு வருத்தம் உண்கை.
இன்மை - இல்லாமை; வறுமை ; உடைமைக்கு மறுதலை; அறு வகை வழக்கினுள் ஒன்று
கைப்பொருள் - கையிலுள்ள பொருள்.
போகு - போகும், விலகும்
ஊழால் - தலைவிதியால்
தோன்றும் - உண்டாகும்
மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு.

முழுப்பொருள்
ஒருவருக்கு ஒரு பொருள் (அல்லது காரியம்) ஆக்கம் பெற வேண்டும் என்றால் அவனுக்கு அப்பொருளை (அல்லது காரியம்) அடைவதற்கான சலனமற்ற முயற்சி தோன்றும். அம்முயற்சியே அக்காரியத்தில் வெற்றிப் பெற செய்யும்.

அதுவே ஒரு பொருள் (அல்லது காரியம்) தன் கையை விட்டுப் போக வேண்டும் என்றால் அவனுடன் சோம்பல் கைக்கோர்த்துக்கொண்டு அவனை சோம்பேறியாக்கி இருக்கிற பொருளும் போய் விடும்.

தலைவிதி எப்படி இருப்பின் ஆயின், முயற்சி இருந்தால் அந்த பொருளை ஒருவரால் அடைய முடியும் அல்லது தக்கவைத்துக்கொள்ள முடியும். அதுவே சோம்பல் உற்று இருந்தால் அடைய வேண்டிய தலைவிதி இருப்பாயின் கையில் இருக்கும் பொருளும் நழுவும் அல்லது கிடைக்கவேண்டிய பொருளும் கிடைக்காது. 

அதுமட்டும் இன்றி திருவள்ளுவர் ஊழ் அதிகாரத்தை அறத்துப்பாலில் கடைசியில் வைத்து இருக்கிறார். பாயிரம், இல்லறம், துறவறம் ஆகிய அறத்திற்கு பிறகு, ஊழ் அதிகாரத்தை வைத்து இருக்கிறார் ஏனெனில் இல்லறம் மற்றும் துறவறம் ஆகியவற்றில் ஆற்றும் அறங்களில் பலன்களை ஊழாக ஒருவர் பெறுகிறார். அதுவே விதி. அப்பலன் என்பது பொருள், இன்பம் என பொருட்பால், காமத்துப்பால் பின்பு பேசுகிறார். ஆக நாம் என்ன அறம் செய்கிறோமோ அதுவே நல் ஊழாக அமையும். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”இரவிதன் புதல்வன்.... அவன்பாற் செல்வம்
வருவதோர் அமைவின் வந்தீர்” (கம்ப.மராமர.25)

பரிமேலழகர் உரை
[அஃதாவது, இருவினைப்பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி. ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதியென்பன ஒருபொருட்கிளவி. இது பொருள் இன்பங்கள் இரண்டிற்கும் பொதுவாய் ஒன்றனுள் வைக்கப் படாமையானும், மேற்கூறிய அறத்தோடு இயைபு உடைமையானும், அதனது இறுதிக்கண் வைக்கப்பட்டது.]

கைப்பொருள் ஆகுஊழால் அசைவு இன்மை தோன்றும் - ஒருவற்குக் கைப்பொருளாதற்குக் காரணமாகிய ஊழான் முயற்சி உண்டாம்; போகு ஊழால் மடி தோன்றும் - அஃது அழிதற்குக் காரணமாகிய ஊழான் மடி உண்டாம். (ஆகூழ், போகூழ் என்னும் வினைத்தொகைகள் எதிர்காலத்தான் விரிக்கப்பட்டுக் காரணப்பொருளவாய் நின்றன. அசைவு -மடி. பொருளின் ஆக்க அழிவுகட்குத் துணைக்காரணமாகிய முயற்சி மடிகளையும் தானே தோற்றுவிக்கும் என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
ஒருவனுக்கு ஆக்கங் கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் முயற்சி தோன்றும்; அழிவு கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் மடிதோன்றும். இஃது ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் ஏதுவான முயற்சியும் முயலாமையும் ஊழால் வருமென்றது.

மு.வரதராசனார் உரை
கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.

சாலமன் பாப்பையா உரை
பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.

Thirukkural - Management - Fate
When a person's fate is favorable to him to earn wealth, that fate will make him more enthusiastic and more energetic to earn more and gain many things, favors Kural 371. It is believed that rich becomes richer and poor  becomes poorer. Earning wealth becomes a virtuous circle when one's fate is favorable to him. When a person earns wealth, he becomes more enthusiastic to work more. As a result, he earns more and further he works more to earn more. He starts moving uphill confidently and becomes victorious in the end. 

Favoring fate induces energy
Depriving fate inertia

On the contrary, earning wealth becomes a vicious circle when a person's fate is not favorable to him. When a person loses wealth, he becomes dejected and stops to work more. As a result, he stops to earn more and further he stops to work more. He starts moving down the slope and becomes defeated in the end.

If a person's fate is not favorable to him, he will lose all the motivation, energy, and enthusiasm to earn or gain anything. Ultimately, laziness sets in him and that laziness will not help him to put his efforts. Failing to put in efforts leads to further failures. Failures in turn will make him more lethargic. Sloth is more dangerous than any other negative quality. That happens because of fate. That is why fate is more powerful.

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
1) தமிழிலக்கியங்களில் ஊழ்
இவ்வினைகளின் வலிமைபற்றிச் சமணர்களால் எழுதப்பட்ட நாலடியார் என்னும் நூலில் பழவினை என்னும் பெயரில் ஓர் அதிகாரமும், திருக்குறளில் ஊழ் என்னும் பெயரில் ஓர் அதிகாரமும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஊழ் என்ற சொல்லுக்கு, “இருவினைப் பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி’ எனப் பரிமேலழகர் பொருள் எழுதியிருக்கின்றார். அன்றியும் ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி ஆகிய யாவும் ஒரே கருத்துடைய சொற்கள் எனவும் பரிமேலழகர் குறிப்பிடுகின்றனர். ஊழை நினைத்தால் சிலப்பதிகாரம் நினைவுக்கு வராமலிருப்பது அரிது. ஊழின் வலியை வற்புறுத்துவதற்கென்றே எழுதப்பட்ட காப்பியமாகக்கூட அதனைக் கருதலாம். இப்பிறப்பிலே யாதொரு தீங்கும் செய்யாத கோவலன், கள்வன் எனக் கருதப்பட்டுக் கொல்லப்படுகிறான். முற்பிறப்பிலே கோவலன் குற்றமற்ற ஒருவன் சொல்லப்படுவதற்குக் காரணமாய் இருந்தான். அத்தீவினையின் பலனையே இப்பிறப்பிலே அவன் அனுபவிக்கின்றான். கன்மம் என்பதும் ஊழ் என்பதும் இதுதான்.

2) ஊழும் முயற்சியும்
இப்பிறப்பிலே நமக்கு நிகழ்வன யாவும் முற்பிறப்பிலேயே விதிக்கபட்டுவிட்டன் என்றல் நாமாக முயன்று செய்வதற்கென எதுவுமில்லை. நாம் செய்வது, செய்யாமலிருப்பது எல்லாம் முன்வினைப்பயனானால், வாழ்வில் ஊக்கம், முயற்சி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இடம் எங்கே என்ற வினா எழலாம். “விதியை நம்பாதவன் தான் தமிழன். விதியை நம்பினால் முயற்சிக்கு இடமில்லை” என்று இன்று சிலர் பிர்சங்கங்கள் செய்து திரிகின்றார்கள். இது விதி என்பது என்ன என்று சரியாக விளங்கிக்கொள்ளாமையால் ஏற்படும் அநர்த்தம். ஒவ்வொரு முயற்சிக்கும் ஏற்ற பலன் நிச்சயம் கிடைத்தே தீரும் என்பதே விதி என்ற சொல்லுக்குக் கருத்து. எனவே விதையை நம்பினால் தான் முயற்சிக்கு இடமுண்டு. நம்பாவிட்டால் தான் இடமில்லை. பழவினை பயனை நுகரும்போது நமது முயற்சிக்கும் இடமுண்டு என்பதைக் காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்கள் ஒரு சிறு உதாரணம் மூலம் விளக்கியுள்ளார். பழவினையின் பயன், ஒருவன் கடன்பட்டிருத்தலை ஒத்தது. தொடக்கத்தில் அவனுடைய உழைப்பிலே பெரும்பகுதி அவனுடைய பழைய கடனைத் தீர்ப்பதிலேயே செலவாகிவிடும். தனது உழைப்பு முழுதும் கடனை அடைப்பதிலேயே செலவாகிவிடுகிறது என்று அவன் உழைக்காமல் இருக்கலமா? அங்ஙனம் இருப்பின், அவனுடைய கடன் மேலும் மேலும் பெருகும். அங்ஙமன்றி அவன் உழைக்கத் தொடங்கினால் எவ்வளவு அதிகம் உழைக்கிறானோ அவ்வளவுக்கு அவனுடைய கடனும் குறையும். பின், பணத்தை சேர்க்கவும் இடமுண்டு. அது போலவே, ஊழினால் துன்பப்படுகிறவன் முயற்சி செய்யாமலிருந்தால் இன்னும் அதிகத் துன்பத்துக்கு ஆளாவான். முயற்சி செய்தால் அதற்கேற்ப அவனது துன்பம் குறையும். 

நமது வாழ்வை ஒரு “பிறிட்ஜ்” விளையாட்டுக்கு ஒப்பிடுகிறார் பேராசிரியர் ராதாகிருஷ்ணன். இவ்விளையாட்டிலே நமக்குக் கிடைக்கும் சீட்டுகளைப்போல நமது பழவினையை வைத்துக்கொள்ளலாம். இச்சீட்டுகளை நாம் நம் விருப்பப்படி தெரிந்தெடுப்பதில்லை. சீட்டுகளைத் தெரிந்தெடுக்க நமக்கு உரிமை இல்லாவிடினும், அச்சீட்டுகளைக்கொண்டு வெற்றியோ, தோல்வியோ ஈட்டும் வாய்ப்பு நமக்கு உண்டு. இதைப் போலவே, பழவினையைத் தெரிந்தெடுக்க அதிகாரம் இல்லாவிடினும், அதனை வைத்துக்கொண்டு மேலே ஆக்குவதோ அழிப்பதோ யாவும் நம் கையிலேயே உள்ளது. 

No comments:

Post a Comment