குறள் 877
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து
[பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
நோவு - நோய்; துன்பம்; மகப்பேற்றுவலி; வலி; இரக்கம்.
நோவற்க - இரக்கம் கொள்ளாதே
நொந்துதல் - அழிதல்; தூண்டுதல்
நொந்துபோ-தல் - நிலைகெடுதல்
நொந்தது - துன்பட்ட காலங்களை
அறிவு- ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
அறியார்க்கு - அறிவு இல்லாதவர்
மேவு - விருப்பம்; மேம்பாடு
மேவுதல் - அடைதல்; விரும்புதல்; நேசித்தல்; உண்ணுதல்; ஓதுதல்; நிரவிச்சமனாக்குதல்; மேலிட்டுக்கொள்ளுதல்; வேய்தல்; அமர்தல்; பொருந்துதல்.
மேவற்க -
பகைவரகத்து- பகைவர் + அகத்து (உள்ளம்) - பகைவரின் உள்ளம் உணரும் படி
முழுப்பொருள்
நம் நண்பன் எனப்படுபவன் நம்மை பற்றி நன்கு அறிந்தவராக இருப்பார். நமது துன்பங்களை பொதுவாக தெரிந்து இருப்பார். தெரிந்துக்கொள்ளாமல் இருந்தால் அது அவரது பிழை என்று சொல்ல முடியாது. சூழ்நிலைகளால் அப்படி இருக்கலாம். ஆதலால் நண்பருக்கு தெரியாத நமக்கு நேர்ந்த துன்பத்தை சொல்ல கூடாது. (நண்பருக்கு சொல்வது தன்னிரக்கம் ஆகாது எனினும் - தன்னிரக்கம் கூடாது). ஏனெனில் அது முடிந்து போன ஒன்றாகும். மேன்மக்கள் தங்களது துன்பங்களை பிறரிடம் சொல்ல மாட்டார்கள் - பட்சாபதாம் தேட மாட்டார்கள்.
அதே போல நமது வலியின்மை, நமது மென்மையான அமைதி குணத்தை, நமது பலவீனங்களை பகைவர் மனம் அறிந்துக்கொள்ளும் அளவுக்கு காண்பித்துக்கொள்ள கூடாது.

மேலும், இது சற்று சிக்கலான விஷயமும் கூட. நமது நண்பர்கள் கூட நமக்கு உட்பகை காரணமாகவோ அல்லது சினத்தாலோக் கூட பகைவராக மாறக்கூடும். சில சமயம் வஞ்சனையாலும் நண்பர் துரோகியாகவும் வாய்ப்புகள் உண்டு (அதற்கு வரலாற்றில் பல சாட்சியங்கள் குவிந்துள்ளன). ஆதலால் பொதுவாக நமது பலவீனங்களை பிறரிடம் காண்பிக்காது இருத்தல் நல்லது.
பெரிய பலவீனம் அல்லது தோல்வி எனில் அதனை உங்கள் நண்பரே அறியநேரிடும் (அவர் அறிந்துக்கொள்ளவேண்டும்). நல்ல நண்பர் எனில் அவரே உங்களை திருத்துவார். ஆதலால் வலிய சென்று யாரிடமும் வாக்குமூலம் கொடுத்து ஒரு பயனுமில்லை. உண்மையான நண்பர் என்றால் நீங்கள் கூறாவிட்டாலும் உங்களை ஏற்றுக்கொள்வார். அதனை ”விழைதகையான் வேண்டி இருப்பர்” என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். உங்கள் பலவீனங்களை, தோல்விகளை, சங்கடங்களை கடந்து வர பல வழிகள் உள்ளன. குருமார்கள், பெரியோர்கள் என பலர் இவ்வுலகில் உள்ளனர். உன் பலவினங்களை பகைவரிடம் கூறாதே
மேலும் அஷோக் உரை
பரிமேலழகர் உரை
நொந்தது அறியார்க்கு நோவற்க - நொந்¢ததனைத் தாமாக அறியாத நட்டார்க்குத் தன் நோவு சொல்லற்க: மென்மை பகைவர் அகத்து மேவற்க - வலியின்மை பார்த்திருக்கும் பகைவர்மாட்டு அவ்வலியின்மையை மேலிட்டுக் கொள்ளற்க. ('நோவு' என்னும் முதனிலைத் தொழிற் பெயர், ஈண்டு அது சொல்லுதற்கண் ஆயிற்று. பகைவர்கண் தவிர்வது கூறுவார் நட்டார்கண் தவிர்வதும் உடன் கூறினார். இதனான் அவ்விரு பகுதிக்கண்ணும் செய்வது கூறப்பட்டது.).
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நொந்தது அறியார்க்கு நோவற்க - தான் துன்புற்றதை அறியாத நண்பர்க்குத் தன் துன்பத்தைச் சொல்லற்க; பகைவரகத்து மென்மை மேவற்க - வலியின்மைபார்த்திருக்கும் தன் பகைவரிடம் தன் வலிமையின்மையை மேலிட்டுக்கொள்ளற்க.
நோதல்வினை இங்கு நோதலைச் சொல்லுதலைக் குறித்தது சொல்லும் போதும் உள்ளத்தில் நோதல் தோன்றுதலின் அரசியல் வாழ்க்கையில் நட்புப் பெரும்பாலும் நிலையில்லாததும் உண்மை யற்றதுமாதலின் பகைவரிடம் வெளிப்படுத்தக் கூடாததைச் சொல்லும்போதே நண்பரிடம் சொல்லக்கூடாததையும் உடன் கூறினார்.

மணக்குடவர் உரை
தாம் வருத்த முற்றதனை அறியாதார்க்கு வருத்த முற்றுச் சொல்லா தொழிக; அதுபோலப் பகைவரிடத்துத் தமது மென்மையைத் தோற்றுவித்தலை விரும்பாதொழிக. இது பகைவர்மாட்டுத் தமது மென்மையைத் தோற்றுவியா தொழிகவென்றது.
மு.வரதராசனார் உரை
துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.
சாலமன் பாப்பையா உரை
நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.
English Meaning - As I taught a kid - Rajesh
Do not tell (and earn sympathy) your friend who is not aware of your sufferings (because a good friend would automatically be aware of your sufferings even if you didn't tell him) and do not give/display slightest clues about your weakness to your enemeies because once your enemy (even your friend can turn to an enemy due to infighting) knows your weakness he will hit you there and destroy you in no time
Questions that I ask to the kid
Should we tell our sufferings to our friends/relatives? Why?
Why should we not display our sufferings/weakness to your friends and enemies?
No comments:
Post a Comment