நாணாமை நாடாமை நாரின்மை

thirukkural meaning விளக்கம் பொருட்பால், நட்பியல், பேதைமை, குறள் 833 நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்.
குறள் 833
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
[பொருட்பால், நட்பியல், பேதைமை]

பொருள்
நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.
நாணாமை -  வெட்கப்படவேண்டிய செயல்கட்கு வெட்கப்படாமையும்

நாடு - nāṭu   III. v. t. aim at, seek, inquire, தேடு; 2. desire earnestly, விரும்பு; 3. scent, (as dogs a hare) மணம்பிடி; 4. (fig.) reach எட்டு.
நாடாமை -  எதிலேயும் நாட்டம் இல்லாமல் இருத்தல்; ஆய்ந்து பார்க்க வேண்டிய வற்றை ஆய்ந்துபாராமையும்

நார் - நார் - மட்டைமுதலியவற்றின்நார்; கயிறு; வில்லின்நாண்; பன்னாடை; கல்நார்; அன்பு
இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.
நாரின்மை - எவரிடத்தும் அன்பின்மையும்

யாது -எது
ஒன்றும் - ஒன்றிலும்

பேண் - விருப்பம்; பாதுகாப்பு; காண்க:பேண்மரம்.
பேணாமை - விருப்பம் கொள்ளாது இருத்தல்

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

தொழில் - செயல்; அலுவல்; தந்திரம்; பெருமை; வினைச்சொல்; ஏவல்; திறமை; களவு

முழுப்பொருள்
செய்ய வெட்கப்படவேண்டிய செயல்களை செய்தல், எதனையும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்றோ கற்றுக்கொள்ள வேண்டும் என்றோ விருப்பம் இல்லாது இருத்தல், சக மனிதர்கள் மீது அன்பு இல்லாமல் இருத்தல், பேணி காக்க வேண்டிய வற்றை (அறம், பொருள், இன்பம்) பேணாது இருத்தல் ஆகியவை பேதைகளின் (அறிவற்றவர்கள், முட்டாள்கள்) செயல்களாக (தொழில்களாக) இருக்கும்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நாணாமை - நாணவேண்டுமவற்றுக்கு நாணாமையும்; நாடாமை - நாடவேண்டுமவற்றை நாடாமையும்; நார் இன்மை - யாவர்மாட்டும் முறிந்தசொல் செயலுடைமையும்; யாதொன்றும் பேணாமை - பேண வேண்டுமவற்றுள் யாதொன்றனையும் பேணாமையும்; பேதை தொழில் - பேதையது தொழில். (நாணவேண்டுபவை - பழி பாவங்கள். நாடவேண்டுபவை - கருமங்களில் செய்வன தவிர்வன. முறிதல்: கண்ணுறுதல். பேண வேண்டுமவை: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம் முதலாயின. இவை பேதைமைக்கு எஞ்ஞான்றும் இயல்பாய் வருதலின் 'தொழில்' என்றார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நாணாமை - வெட்கப்படவேண்டிய செயல்கட்கு வெட்கப்படாமையும்; நாடாமை - ஆய்ந்து பார்க்க வேண்டிய வற்றை ஆய்ந்துபாராமையும்; நாரின்மை - எவரிடத்தும் அன்பின்மையும்; யாது ஒன்றும் பேணாமை -பேணிக்காக்க வேண்டிய எதையும் காவாமையும்; பேதை தொழில் - பேதை செயல்களாம்.

வெட்கப்பட வேண்டியவை பழிகரிசுகள் (பாவங்கள்). ஆராய வேண்டியவை நல்லனவும் தீயனவும் வேண்டுவனவும் வேண்டாதனவும். பேணவேண்டியவை குடிப்பிறப்பு, தன்மானம், ஒழுக்கம், கல்வி, நல்நட்பு முதலியன. இயற்கைக் குணம் அல்லது வழக்கச் செயல் என்பது பற்றித் 'தொழில்' என்றார். 'பேதை' இருபாற்பொது.

மணக்குடவர் உரை
நாணமில்லாமையும், தெரிந்துணராமையும், ஈரமின்மையும், யாதொரு பொருளையும் போற்றாமையும் பேதையார் தொழில். இது பேதையார்செயல் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.

சாலமன் பாப்பையா உரை
தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய எதையும் காவாதிருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain