குறள் 683
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
[பொருட்பால், அமைச்சியல், தூது]
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
[பொருட்பால், அமைச்சியல், தூது]
பொருள்
நூலாருள் - பல நூல்களை கற்றவனில்
நூல் வல்லன் - கற்றோன் எனப்படுபவன்
ஆகுதல்- ஆவது என்பது; ஆதல்
வேலாருள் - அரசர்கள்
வென்றி - வெற்றி
வினை - செயல்
உரைப்பான் - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்
பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர் இயல்பை அறிந்து நடக்கும் நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை
முழுப்பொருள்
நூல்கள் பல கற்றவர்களுள் கற்றவனாக (வல்லவனாக) ஆக வேண்டுமென்றால் தான் கற்றவற்றை தெளிவாக கற்று ஆழமாக கற்று தனக்கும் தெளிவாக சொல்லிக்கொள்ளும் அளவு மற்றவருக்கும் தெளிவாக சொல்லிக்கொள்ளும் அளவு கற்று இருக்க வேண்டும். முக்கியமாக வேல் ஏந்திய அரசரிடம் விளக்க அவருக்கு வெற்றியை உருவாக்கும் செய்திகளை கூறும் திறனை (இயல்பை) உடையவனாவான். இங்கே வெற்றியை உருவாக்கும் எனில் அது குறை நிறைகளை கூறுவது, அரசின் திட்டங்களுக்கு மெருகேற்றும் குறிப்புகளை கூறுவதும் ஆகும்.
மேலும் அஷோக் உரை
மேலும் அஷோக் உரை
பரிமேலழகர் உரை
வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு - வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் - நீதி நூலையுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்லனாதல். ('கோறல் மாலையர்' என்பது தோன்ற 'வேலார்' என்றும், தூது வினை இரண்டும் அடங்க 'வென்றி வினை' என்றும் கூறினார். வல்லனாதல்: உணர்வு மாத்திரமுடையராய அவர் முன் வகுக்கும் ஆற்றல் உடையனாதல்.).
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வேலாருள் வென்றிவினையுரைப்பான் பண்பு-வேற்படையுடைய வேற்றரசரிடஞ் சென்று தன் அரசனுக்கு வெற்றி தரும் வினையைச் சொல்வானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல்வல்லன் ஆகுதல்-அரசியல் நூலை அறிந்தவருள் தான் அந்நூலறிவிற் சிறந்தவனாயிருத்தலாம்.
கொல்லுந் திறத்தினர் என்பது தோன்ற 'வேலார்' என்றும், இருவகைத்தூது வினையும் அடங்க 'வென்றிவினை' என்றும், கூறினார். 'வல்லனாகுதல்' அந்நூற் செய்தியெல்லாவற்றையும் தெளிவாக அறிந்திருத்தலும், தவறாகச் சொன்னவிடத்து அதைத் திருத்துதலுமாம்.
கொல்லுந் திறத்தினர் என்பது தோன்ற 'வேலார்' என்றும், இருவகைத்தூது வினையும் அடங்க 'வென்றிவினை' என்றும், கூறினார். 'வல்லனாகுதல்' அந்நூற் செய்தியெல்லாவற்றையும் தெளிவாக அறிந்திருத்தலும், தவறாகச் சொன்னவிடத்து அதைத் திருத்துதலுமாம்.
மணக்குடவர் உரை
எல்லா நூல்களையும் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல், வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லுமவனது இயல்பாம்.
மு.வரதராசனார் உரை
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை
அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.
No comments:
Post a Comment