குறள் 676
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்
[பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
முடிவும் - இறுதி; எல்லை; அந்தம்; தர்மானம்; முடிவான உட்கோள்; நிறைவு; பயன்; இசைப்பாகுபாடு; சாவு
இடையூறும் - இடர், இடர்ப்பாடு, துன்பம், தடங்கல், வருத்தம், வறுமை, ஆபத்து
முற்றி - முற்று, முடித்தல்
ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி; ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை
முற்றியாங்கு - அச்செயலை முடித்தல்
எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.
எய்தும் - நூற்பயன், அடையும், அணுகும், சேரும், நிகழும், உண்டாகும்
படு - நன்மை, மகா, மிகுதியைக்காட்டுமோரடை சொல்
படு - கள்; மரத்தின்குலை; குளம்; மடு; மருதயாழ்த்திறத்துள்ஒன்று; உப்பு; பெரிய; கொடிய; இழிவான; கெட்டிக்காரன்; பேரறிவு; நன்மை.
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்
படுபயனும் - மகா பயன்
பார்-த்தல் - pār- 11 v. tr. [K. pāru, M.pārkka.] 1. To see, look at, view, notice,observe; கண்ணால்நோக்குதல். பாராக்குறழா (கலித்.65). 2. To examine, inspect, search into,scrutinise; ஆராய்தல். படுபயனும் பார்த்துச் செயல்(குறள், 676). 3. To know; அறிதல். காலம்பார்த்துள்வேர்ப்ப ரொள்ளியவர் (குறள், 487). 4. To lookfor, expect; எதிர்பார்த்தல். வருவிருந்து பார்த்திருப்பான் (குறள், 86). 5. To desire, long for; விரும்புதல். புதுமை பார்ப்பார் (கம்பரா. பூக்கொய். 9). 6.To search for, seek; தேடுதல். ஆட்பார்த் துழலுமருளில் கூற்று (நாலடி, 20). 7. To worship;வணங்குதல். (சூடா.) 8. To estimate, value;மதித்தல். அவன் வயிரம் பார்ப்பதில் கெட்டிக்காரன்.Colloq. 9. To heed, pay attention to; கவனித்தல். 10. To look after, take care of, manage,superintend; மேற்பார்த்தல். பண்ணை பார்க்கிறான்.11. To peruse, look through, revise; பார்வையிடுதல். இந்தப் பத்திரத்தைப் பாருங்கள். 12. Totreat, administer medicine; மருந்து முதலியனகொடுத்தல். யார் வைத்தியம் பார்த்
பார்த்துக்கொள்ள - pārttukkoḷḷa paattukkoo பாத்துக்கோ take care of, watch over
செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.
பார்த்துச் செயல் - அதற்கு ஏற்றார்ப்போல் ஆராய்ந்து ஒர் திட்டதின் அடிப்படையில் வியூகத்தின் அடிப்படையில் செயல்படுக!
முழுப்பொருள்
ஒரு செயலை (குறிக்கொள்) செய்யும் பொழுது அதனை பாதியில் விடாமல் செய்து முடிக்க முயற்சி மேற்கொண்டு செய்ய வேண்டும். எடுத்த செயலில் என்ன என்ன தடங்கல்கள் வரும் என்று முன்னரே அனுமானித்து அதனை கடந்து செல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரு செயலை செய்தால் அதனால் விளையும் (ஏற்படும்) பெரும் பயனை அறிந்து அச்செயலை வெற்றிக்கரமாக நிறைவேற்ற வேண்டும். அப்பெரும் பயனின் வீரியம் அறிந்து அதனை அடைய வியூகம் அமைத்து அயராது செயல்பட வேண்டும்!
பி.கு: இக்குறளில் நான் காணும் முக்கியமான ஒன்று படுபயன். ஏனென்றால் பெரிய பலன் தரும் செயல்களை மட்டுமே செய்யவேண்டும். சிறிய செயல்களை செய்யக்கூடாது!
மேலும்: அஷோக் உரையை காண்க (நன்றி)
ஒப்புமை
”தற்றூக்கித் தந்துணையும் தூக்கிப் பயன்தூக்கி
மற்றவை கொள்வ மதிவல்லார் - அற்றன்றி
யாதானும் ஏன்றுகொண் டியாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகி விடும்” (பழமொழி 321)
“நல்லவும் தீயவும் நாடி நாயகற்
கெல்லையின் மருத்துவன் இயல்பின் எண்ணுவார்
ஒல்லைவந் துறுவன உற்ற பெற்றியின்
தொல்லைநல் வினையென உதவும் சூழ்ச்சியார்” (கம்ப.மந்திரப்.10)
பரிமேலழகர் உரை
முடிவும் - வினை செய்யுங்கால் அது முடிவதற்குளதாம் முயற்சியும்; இடையூறும் - அதற்கு வரும் இடையூறும்; முற்றியாங்கு எய்தும் படுபயனும் - அது நீங்கி முடிந்தால் தான் எய்தும் பெரும்பயனும்; பார்த்துச் செயல் - சீர்தூக்கிச் செய்க. (முடிவு, ஆகுபெயர், 'முயற்சி இடையூறுகளது அளவின் பயனது அளவு பெரிதாயின் செய்க' என்பதாம்.)
மணக்குடவர் உரை
வினை தொடங்கினால் அது முடியும் வண்ணமும் அதற்குவரும் இடையூறும் முடிந்தா லுண்டாகும் பெரும் பயனும் முன்பே கண்டு பின்பு வினைசெய்க.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
முடிவும்-வினை முடிதற்கு வேண்டிய முயற்சியும்; இடையூறும்-அதற்குத் தடையாக இடையில் வரும் துன்பங்களும்; முற்றிய ஆங்கு எய்தும் படுபயனும்-தடை நீங்கி வினை வெற்றியாக முடிந்தால் தான் அடையும் பெரும் பயனும்; பார்த்துச் செயல்-ஆராய்ந்து பார்த்து வினைசெய்க.
பெரும்பயன் எனவே சிறுபயன்வினை விலக்கப் பட்டதாம். 'படு' என்னும் சொல் பெருமை அல்லது மிகுதிப்பொருள் தருவதைப் படுகுழி, படுதண்டம், படுபொய், படுமோசம் என்னும் வழக்கு நோக்கி யுணர்க. 'முடிவு' ஆகுபெயர். முற்றியாங்கு (முற்றிய ஆங்கு) - முற்றியபோது.
மு.வ உரை
செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்யும்போது அது முடிவதற்கான முயற்சி, இடையில் வரும் தடை, முடியும்போது அடையும் பெரும்பயன் ஆகியவற்றை எண்ணிப் பார்த்துச் செய்க.
Thirukkural - Management - Decision Making
Before one gets into action, one has to assess thoroughly three things, according to Kural 676. One is to identify the methods to complete the task; two is to understand the challenges or hardships faced in the process of doing that task and three is to anticipate the benefits one will get by executing that task.
Weigh well before you plunge
The inputs, impediments and gain.
Stephen Covey's one of the qualities of highly effective people is to ‘Begin with the end in the
mind’ in his book The Seven Habits of Highly Effective People.
Therefore, effective decision making, according to Valluvar, is possible if we consciously and clearly consider five factors. They are: 1) Resources that include people, 2) Tools and techniques, 3) Availability of time, 4) Complexity of the task, and 5) Place of execution. Decision-making is a process and that process needs a lot of patience. The process of learning to have patience takes a lot of time and energy. Therefore, elective decision-making facilitates effective execution. Look before you leap is still a sage and safe advice.
English Meaning - As I taught a kid - Rajesh
"Whenever you do a task, you should have a goal and should never drop the task. One should predict the hurdles as much as possible and have a contingency plans to mitigate the situation. Having contingency plan is essential because looking back is shame(துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு).
Hence, having a goal, having a plan that includes contingency plan for hurdles, persevering to achieve the goal at any cost will yield huge results. This kural talks about huge results which is in sync with பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும், அரும்பயன் ஆயும் Thirukkural. Also remember, நுனிகொம்பேறினார் No goal is worth the life or the huge amount of money. Hence, we should keep right plans and also include plans that defines the situations for quitting for a genuine reason.
==========
Another version
Before doing a work or getting into action, one has to thoroughly assess 3 things 1) Have the clarity of destination/goal and identify best way by exploring multiple options to complete the task 2) understand the challenges that are possible 3) understand the benefits of doing this tasks.
One of the main thing we need to note is ""படுபயன்” which means huge benefits. Do works that yields larger benefits not smaller or futile benefits.
Effective decision making, according to Valluvar, is possible if we consciously and clearly consider five factors. They are: 1) Resources that include people, 2) Tools and techniques, 3) Availability of time, 4) Complexity of the task, and 5) Place of execution. Decision-making is a process and that process needs a lot of patience. The process of learning to have patience takes a lot of time and energy. Therefore, elective decision-making facilitates effective execution. Look before you leap is still a sage and safe advice."
Questions that I ask to the kid
"Whenever you do a task, what are 4 things you should have in mind?
Look before you leap. Explain more.
No comments:
Post a Comment