குறள் 542
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
[பொருட்பால் , அரசியல், செங்கோன்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி.
நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.
வான் நோக்கி - வானம் பொழிகின்ற மழையை நம்பி, அதன் கொடைக்கு காத்து, அதனை எதிர் நோக்கி
வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.
வாழும் - வாழ்கின்ற
உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று
எல்லாம் - முழுதும்
உலகெல்லாம் - எல்லா உயிர்களைப் போல
மன்னவன் - maṉṉavaṉ n. மன்னு-. 1.See மன்னன். முறை செய்து காப்பாற்று மன்னவன்(குறள், 388). 2. Indra; இந்திரன். மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் (சிலப். 5, 173); அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்; அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.
மன்னவன் - அனைவரையும் ஆட்சிப் புரிகின்ற அரசனின்
கோல் - கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி.
கோல் - செங்கோல் - அரசச்சின்னமாகியநேர்கோல்; நல்லரசாட்சி; நெருப்புச்சலாகை.
கோல்நோக்கி - நல்லாட்சியை எதிர்நோக்கி
நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.
வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.
குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.
வாழுங் குடி - வாழ்வார்கள் மக்கள் அனைவரும்.
முழுப்பொருள்
மழை நீர் தான் மலைகளில் மரங்களின் வேர்களில் தேங்கி பின்பு ஆறாக உருவெடுத்து பின் பெருக்கெடுத்து எல்லா இடங்களும் செல்லும். அந்த நீர்ரே எல்லா உயிர்களுக்கும் வாழ்வாதாரம். விலங்குகளும் (நீர் மற்றும் இன்றி) செடிகளையும் மரங்களையும் நம்பி வாழ்கின்றன. ஆதலால் தான் மழைநீரை எதிர் நோக்கியே உலகலில் உள்ள எல்லா உயிர்களும் வாழ்கின்றன. மழைநீர் பொய்த்தால் எல்லா உயிர் இனங்களும் அவதிப்படும்.
அதேப் போல், எல்லா மக்களும் தங்களை செங்கோல் கொண்டு ஆட்சிப்புரியும் மன்னரை/அரசரை நம்பியே உள்ளனர். மன்னர் நன்கு ஆட்சி செய்தால் தான் அவர்கள் வாழ்வு இன்னல்கள் இன்றி இருக்கும். மன்னர் நன்கு ஆட்சிச் செய்யாவிடில் மக்கள் அவதிப் படுவர்.
உதாரணமாக ராஜராஜ சோழன் தனது ஆட்சிக் காலத்தில் பல நல்ல திட்டங்களை வகுத்து மக்களும் நன்மை புரிந்தார். மற்ற சோழ மன்னர் ஆட்சிகளில் வீரானம் ஏரி, கல்லனை போன்றவை நிறுவப்பட்டது. அதனுடைய பயன்களை நாம் இன்றும் அறுவடை செய்கிறோம். அதேப்போல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாட்டில் திமுக/அதிமுக ஆட்சிகளின் மோசமான் ஆட்சிகளில் அவதிப்படுகிறோம் (உதாரணமாக: காவேரி நதி நீர் பங்கீடு). இந்தியாவிற்கு பிறகு சுதந்திரம் பெற்ற நாடு தென்கொரியா. ஆனால் தென்கொரியா உலகலில் மிக மிக வளர்ந்த நாடுகளின் பட்டியலில் ஒன்று. ஆனால் இந்தியா இன்றும் வளரும் நாடுகளில் பட்டியலில் உள்ளது. ஐம்பது சதவீதரிற்கும் மேற்பட்டோர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். இரண்டு நாடுகளுக்கும் வித்தியாசம் ஆட்சி நடத்திய விதம், மன்னர் பொறுப்பில் இருந்தவர்களின் ஆட்சி.
ஆதலால் மக்கள் தனது நல்லாட்சியை எதிர் பார்த்தே வாழ்கின்றனர் என்று உணர்ந்து மன்னர்கள் ஆட்சிப் புரிய வேண்டும்.
மேலும்: அஷோக்
ஒப்புமை
”வித்திவான் நோக்கும் புன்புலம்” (புறநா.18:24)
“மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை’ (நான்மணி.47)
“எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும்” (பெருமாள் திருமொழி 5:7)
‘தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன
கோல்நோக்கி வாழும் குடிபோன் றிருந்தேனே” (பெருமாள் 5:3)
“கோல்நோக்கி வாழும் குடிஎல்லாம் தாய்முலையின்
பால்நோக்கி வாழும் குழுவிகள் - வானத்
துளிநோக்கி வாழும் உலகம்” (நான்மணி.27)
பரிமேலழகர் உரை
உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகாநிற்குமே எனினும்; குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும்.
விளக்கம்
[நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.]
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்திலுள்ள உயிர்களெல்லாம் மழையை எதிர்பார்த்து அது பெய்வதால் வாழும் ; குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - ஆயினும் , குடிகளெல்லாரும் அரசனது செங்கோலை எதிர்பார்த்து அது நடப்பதால் வாழும் .
நோக்கி வாழ்தல் இன்றியமையாததாகக் கொண்டு வாழ்தல் . வானால் நீரும் உணவும் கிடைப்பது போல் , செங்கோலால் உயிர்ப் பாதுகாப்பும் , பொருட்காப்பும் கிட்டுவதால் , வான்போன்றே செங்கோலும் மக்கள் உயிர்வாழ்விற்கு இன்றியமையாததென்பதும் , செங்கோலின்றி வானிருந்தும் பயனில்லை யென்பதும் , பெறப்படும் . உலகு , கோல் என்பன ஆகுபெயர்கள் . கோலென்றது செங்கோலை. 'குடி' தொகுதிப்பெயர் . வானின் தண்பு உயிர்கட்கு இன்பஞ் செய்வது போல் கோனின் அன்பும் குடிகட்கு இன்பந்தருவதாம்.
"நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே
மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்
அதனால் , யானுயி ரென்ப தறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே".(126)
என்னும் புறப்பாட்டு இங்குக் கவனிக்கத் தக்கது .
மணக்குடவர் உரை
உலகத்தாரெல்லாம் மழையை நோக்கி யின்புறாநிற்பர்; அதுபோலக் குடிகளும் அரசனது செங்கோன்மையை நோக்கியின்புறாநிற்பர்
மு.வ உரை
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
சாலமன் பாப்பையா உரை
உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.
English Meaning - As I taught a kid - Rajesh
All the organisms in the world survives, looking up to the skies for rain; the people live, looking up to their ruler’s scepter/sengol/செங்கோல் for justice.
Rain water is captured by the roots of the plants in forests, ponds, lakes etc. This forms the basis of livelihood for all organisms. Hence, all organisms survive looking up to the skies for rain. Also, it is not mere survival, because when the plants lives, they flourish and make the world a better place.
Similarly, all the people live looking up for the king's / leader's rule. If the leader rules well (i.e. administers / manages / develops the state well), people's pain/sorrow/difficulties would reduce and vanish and they would live happily. Whereas if the leader doesn't rule well, people would suffer. When people live happily the make the world a better place.
If there is a drought, many plants die and it takes some time for the plants to regain the flora and fauna. Similarly if the leader doesn't rule well for few years, it would take many years for the people to come back on growth and flourish.
This applies even to the family. If the family head does well, all the members in the family will be happy. At individual level, if the person does well (develops himself, does his dharma, earns money), he will not suffer. Also he can help others too.
King Raja Raja Cholan who lived in 10th century did lots of work for the welfare of people such as creating lakes, developing irrigation systems, building dams etc. Such works benefit people even in the 21st century.
Questions that I ask to the kid
What does rain give? What does a leader give?
What does the world look up to for survival? Whom does the people look up to?
Why is a king's rule as important as rain?
No comments:
Post a Comment