குறள் 230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை
[அறத்துப்பால், இல்லறவியல், ஈகை]
பொருள்
சாதலின் - சாதல் - cātal n. சா-. Death; இறப்பு சாதலும் பிறத்த றானுந் தம்வினைப் பயத்தினாகும்(சீவக. 269). ; iṟappu n. id. 1. Transgression,trespass; அதிக்கிரமம் பொறுத்த லிறப்பினை யென்றும் (குறள், 152). 2. Going, passage, passing;போக்கு. (பிங்.) 3. Death; மரணம் (திருவாச. 5,12.) 4. Excess, abundance; மிகுதி (பிங்.) 5.That which is superior; உயர்ந்தபொருள். ஒப்பிறப்பில் வெங்கையுடையோய் (வெங்கைக்க. 75). 6.Heavenly bliss, emancipation; மோக்ஷம். இறுகலிறப்பென்னும் ஞானிக்கும் (திவ். திருவாய். 4, 1, 10).7. [M. iṟa.] Inside or under part of a slopingroof, eaves; வீட்டிறப்பு இறப்பிற் றுயின்று (திருக்கோ. 328). 8. (Gram.) past tense; இறந்தகாலம் இறப்பி னெதிர்வி னிகழ்வின் (தொல். சொல் 202).
இன்னாது - iṉṉātu n. இன்னா-மை. 1.Evil; தீது பிறப்பின்னா தென்றுணரும் (நாலடி. 173).2. Pain; துன்பு (ஈடு.)
இன்னாது - iṉṉātu n. இன்னா-மை. 1.Evil; தீது பிறப்பின்னா தென்றுணரும் (நாலடி. 173).2. Pain; துன்பு (ஈடு.)
இன்னாதது - துன்பமானது வேறு
இல்லை - இல்லை
இனிது - iṉitu இனி-மை. n. 1. Thatwhich is sweet, pleasing, agreeable; இன்பந்தருவது. இனிதுறுகிளவியும் (தொல். பொ 303). 2. Thatwhich is good; நன்மையானது.--adv. Sweetly,favourably; நன்றாக புலியூர்ப் புக்கினி தருளினன்(திருவாச. 2, 145).
அதூஉம் - அதுவே
ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்
இயை - அழகு; புகழ் இசைப்பு வாழை
கடை - kaṭai n. 1. [T. M. kaḍa, K. Tu.kaḍe.] End, termination, conclusion; முடிவு (பிங்.) 2. Place; இடம் (திவா.) 3. Limit,boundary; எல்லை கடையழிய நீண்டகன்ற கண்ணாளை (பரிபா. 11, 46). 4. Shop, bazaar, market;அங்காடி. (பிங்.) 5. Inferiority, baseness, meanness, lowness, least, lowest, worst; கீழ்மை நாயிற் கடையாய்க் கிடந்த வடியேற்கு (திருவாச. 1,60). 6. Degraded person, man of low caste;தாழ்ந்தோன். கல்லாத சொல்லுங் கடையெல்லாம்(நாலடி, 255). 7. Entrance, gate, outer gate-way; வாயில் கடைகழிந்து (அகநா. 66). 8. Clasp,fastening of a neck ornament; பூண்கடைப்புணர்வு (திவா.) 9. Handle, hilt; காம்பு கடைகுடை யெஃகும் (மலைபடு. 490).--adj. Succeeding,following; பின் கடைக்கால் (பழ. 239).--part.1. (Gram.) Sign of the locative; ஏழனுருபு. (நன்.302.) 2. Verbal prefix; ஓர் உபசருக்கம் கடைகெட்ட(திருப்பு. 831). 3. Termination of a verbalparticiple; ஒரு வினையெச்ச விகுதி ஈத லியையாக்கடை (குறள், 230).
இயையாக்கடை - செய்யமுடியாமல் போகும்போது
முழுப்பொருள்
மரணம் என்பது கொடுமையானது ஆகும். அதற்கு அஞ்சுகிறான் மனிதன். மரணம் பற்றிய சிந்தனையே பல நேரங்களில் உவப்பானது கிடையாது. மரணத்தின் நினைப்பு அவனுக்கு துன்பத்தை தரும்.
பிறருக்கு கொடுப்பதே அறம். அதுவே இல்லற வாழ்வின் கடமையாகும். ஆனால் அத்தகைய நேரங்களில் ஒருவரால் பிறருக்கு கொடுக்க முடியவில்லை என்றால் அக்கணமே இறந்து விடுதல் போன்று இனிமையானது வேறு ஏதும் இல்லை. ஏனெனில் நம்மால் பிறருக்கு உதவ முடியவில்லையே என்று வரும் காலங்களில் பலமுறை வருந்துவதை (இறப்பதை) விட ஒரு முறை சாதலே இனிது ஆகும். பிறருக்கு உதவ முடியாத தேகம் வாழ்தலை விட இறத்தல் இனிது.
மகாபாரதப்போரில் கர்ணன், ஒரு சில விநாடிகள் தன்னை அண்டி, தானம் யாசிக்கும் கண்ணனுக்கு கொடுக்கவொன்றுமில்லையே என்று வருந்தினாலும், தன்னுடைய புண்ணியங்களின் பலன்களை கொடுப்பதால், தன்னுடைய உயிரையே இழக்க நேரிடுமென்று அறிந்தும் உவகையோடு கொடுக்கிற காட்சி உண்டு. அது இத்தகைய ஈகையை காட்டும் சித்திரம். தருமம் தலையைக் காக்கும், அது நீங்கினால் தலையை எடுக்கும் என்பதையும் உணர்த்தும் சித்திரம்.
சாதல் என்ன துன்பமா? பிறந்து முடிதல் இயற்கையெனினும், மீண்டும் சேரமுடியாத பிரிவு துன்பமே. “சாதல் அன்ன பிரிவு” என்கிறது அகநானூற்றுப் பாடல், (339:14). கலித்தொகைப் பாடல் (43:26.7), “இன்மையுரைத்தார்க் கதுநிறைக்கா லாற்றாக்கால் தன்மெய் துறப்பான் மலை” என்கிறது, ஈகையை தன் உயிரினும் மேலாக நினைப்பாரை.
நாலடியார் பாடல் பசியால் வாடிவருபவருக்கு, உள்ளிருந்தும், ஒன்றுமே ஈயாதான், இருப்பதைவிட இறந்து வானுலகுக்கு விருந்தாவதே நன்று என்கிறது. இருந்து-வுக்கு எதுகையாக விருந்து இருந்தாலும், ஈயாத கருமிகள் எப்படி வானுலகிற்கு விருந்தாவர்? வேண்டுமானால் நரகத்திற்கு விருந்தாகலாம்.
உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்(கு)
உள்ளூர் இருந்தும்ஒன் றாற்றாதான் – உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தினன் ஆதலே நன்று (நாலடி 288)

“தூண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தரத் துயரால்
ஈண்டு வந்துனை யிரந்தவர்க் கிருநிதி யவளை
வேண்டி யீதியோ வெள்குதி யோவிம்மல் நோயால்
மாண்டு போதியோ மறுத்தியோ வெங்ஙனம் வாழ்தி” (கம்ப.மந்தரை 72)
குறளின் அடிப்படை அறங்களாக முன்வைக்கப்படுபவை கொல்லாமை, ஈகை, பொறையுடைமை போன்றவையே. அவையும்கூட மிக மென்மையாக மனசாட்சியை நோக்கிப் பேசப்படும் தொனியிலேயே வலியுறுத்தப்படுகின்றன.
சாதலின் இன்னாதது இல்லை இனிது அதுவும்
ஈதல் இயையா கடை
சாதலைவிட கொடியது இல்லை, ஆனால் கொடைக்கு முடியாத நிலைவந்தால் அதுவும் இனிதே’ என்ற குறள் உண்மையில் மிகக் கடுமையானது. இரப்பவர்களுக்கும் அறவோருக்கும் கொடுப்பதே இல்லறத்தார் கடமை என்று வகுக்கிறது சமண மரபு. அப்படிக் கொடுக்க முடியாதபோது சாவதே மேல் என்று ஆணையிட வரும் குறள் அந்நிலையில் மரணமும் இனியதாகிவிடும் என்றே கூறியமைகிறது.
பரிமேலழகர் உரை
சாதலின் இன்னாதது இல்லை - ஒருவற்குச் சாதல் போல இன்னாதது ஒன்று இல்லை, அதூஉம் ஈதல் இயையாக் கடை இனிது - அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி இனிது. (பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை நீங்குதலான் 'இனிது' என்றார். இவை மூன்று பாட்டானும் ஈயாமையின் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
சாதலின் மிக்க துன்பமில்லை. அதுவும் இனிதாம் இரந்து வந்தவர்க்குக் கொடுத்தல் முடியாவிடத்து. இஃது ஈயாது வாழ்தலில் சாதல் நன்றென்றது.
மு.வரதராசனார் உரை
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
No comments:
Post a Comment